என்ன ஆச்சு எதிர்நீச்சலுக்கு? காணாமல் போன காமெடி.. ரிப்பீட் மோடில் சண்டை, சச்சரவு.. காரணம் இவைகள்?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கதையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆரம்பக் காலகட்டத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியலில் என்னதான் குணசேகரன் வில்லத்தனம் செய்து கொண்டிருந்தாலும் நந்தினி மற்றும் கரிகாலன் காம்போ காமெடியாக சீரியலை கொண்டு போய்க் கொண்டிருந்தனர்.

ஆனால் இப்போது சில தினங்களாக எதிர்நீச்சல் சீரியலில் அதிகமாக சண்டை சச்சரவுகளும், அழுகைகளும் மட்டும்தான் இருக்கிறது. இது சீரியல் ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல் பெண்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டும், ஆண் அடிமைத்தனத்திலிருந்து பெண்கள் எந்த மாதிரி சூழ்நிலையில் வெளியே வந்து சாதிக்கப் போகிறார்கள் என்பது பற்றி தான் கதை தொடங்கியது. இந்த சீரியலில் வில்லனாக குணசேகரன் இருந்தாலும் அவரும் வில்லத்தனத்தையும் காமெடியாக தான் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் காலமானார். அதற்கு பிறகு சீரியலில் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியும் சீரியல் இனி என்னவாக போகிறது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஏற்கனவே எழுதி போய்க்கொண்டிருந்த கதையில் இப்போது அதிரடியாக பல மாற்றங்கள் செய்து கதை நகர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் சீரியலில் சுவாரசியம் கூட்ட வேண்டும் என்பதற்காக கதையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
அதுவும் சில தினங்களாகவே எதிர்நீச்சல் சூரியலில் சண்டை சச்சரவுகள் மட்டும்தான் அதிகப்படியாக இருக்கிறது. இது சீரியலின் சுவாரசியத்தை கூட்டினாலும் பலருடைய அதிருப்தியையும் பெற்றிருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து குணசேகரன் என்னதான் வில்லத்தனம் செய்து கொண்டிருந்தாலும் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக நந்தினி, ரேணுகா, கரிகாலன் போன்றவர்கள் அடிக்கடி காமெடி செய்து கொண்டே இருப்பார்கள். அது ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இப்போது கதையில் முக்கியமான திருப்பம் வந்திருக்கும் நேரத்தில் அதிகப்படியான கத்தல்களும், சண்டைகளும் இருக்கிறது. அதுவும் நேற்றைய எபிசோடு ஹை லெவலில் சண்டை நடந்து கொண்டு இருந்தது. கதிர் ஒரு பக்கம் நந்தினியை அடிக்க, அதற்குப் பிறகு தாலி செயினை கழட்டுகிறார் என்று விசாலாட்சியும் நந்தினியை அடிக்க, அழுகையும் கத்தல் சத்தங்களும் தான் அதிகமாக கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு வேளை இந்த சீரியல் ஒரு வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் தெருவில் போகிறவர்கள் இந்த வீட்டில் தான் ஏதாவது சண்டையோ என்று நினைத்து விடுவார்கள். அந்த அளவிற்கு சண்டை நடந்து கொண்டிருந்தது.
அதே நேரத்தில் இதற்கு முன்பு கரிகாலன் லூசு போல ஏதாவது பேசிக் கொண்டிருந்தாலும் அவருடைய பேச்சு இந்த அளவிற்கு ரசிகர்களை எரிச்சல் அடைய செய்யவில்லை. ஆனால் இப்போது அவர் குணசேகரன் இல்லை என்பதை நிவர்த்தி செய்வதற்காக எல்லாரும் போட்டி போட்டு குணசேகரன் ஆக மாறிக்கொண்டிருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் கதிருடைய நடவடிக்கை எல்லாமே நேற்று குணசேகரனை பல மடங்கு பார்த்தது போல தான் ரசிகர்களுக்கு இருந்திருக்கும்.

குணசேகரன் இதுவரைக்கும் வீட்டு பெண்களை அடித்ததில்லை. ஆனால் கதிர் தன்னுடைய மனைவியை அடித்து அண்ணி ஈஸ்வரியை ஓசி சாப்பாடு சாப்பிட்டு இருக்கீங்க என்று திட்டி இருந்தார். இது சீரியல் பார்த்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருந்தாலும் இனி வரும் எபிசோடில் வீட்டு பெண்கள் இவர்களின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கு உச்சகட்டமாக தான் நேற்றைய பிரச்சனை நடந்திருக்கிறது என்பது தெரிகிறது.
யாரும் வீட்டில் எதுவும் பேசக்கூடாது என்று இதுவரைக்கும் அமைதியாக இருந்த ஞானம் கூட வீட்டிலிருந்த சொம்பை தூக்கி எறிந்து தன்னுடைய கோபத்தை காட்டி இருந்தார். அதுபோல கேட்டரிங் நடத்தி வந்த நந்தினியின் பிசினஸை மூட வைத்து விட்டனர். இனி ரேணுகா மற்றும் ஈஸ்வரி செய்து கொண்டிருப்பதும் விசாலாட்சி மூலமாக வீட்டிற்கு தெரிய வரும் இந்த நிலையில் குணசேகரன் இல்லாத குறையை சீரியலில் வரும் சண்டை சச்சரவுகளோடு கொண்டு போய் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சாதிப்பது இன்னும் ஒரு சில எபிசோட் களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நேற்றைய எபிசோடு இன்னும் ரெண்டு நாளைக்குள் குணசேகரன் வீட்டுக்கு வந்து விடுவார் என்று கதிர் கூறி இருந்தார். அதற்குள் கோவில் திருவிழாவில் பட்டம்மாளையும், ஜீவானந்தத்தையும் கொலை செய்வதற்காக தன்னுடைய தம்பிகளை குணசேகரன் அனுப்பி வைத்திருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பும் அதிகரிக்க வைத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இன்றைய எபிசோட்டுக்கான பிரமோவில் வீட்டை விட்டு நந்தினியை வெளியேற ஜனனி குரூப் ஐடியா கொடுத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications