எதிர்நீச்சல்:ஜனனியிடம் ஷேர் பற்றி பேசிய அப்பத்தா..குணசேகரனின் மாஸ்டர் பிளான்..அடுத்து வரும் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இரண்டு நாட்கள் எங்கே சென்றிருந்தேன் என்ற உண்மையை ஜனனியிடம் அப்பத்தா கூற செல்கிறார்.

வீட்டிற்கு போலீஸ் வந்ததற்காக கதிர் ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஷேர் விஷயம் பற்றி ஜனணியிடம் அப்பத்தா பேச ஆரம்பிக்கும் போது குணசேகரன் புது பிரச்சனையை தொடங்குகிறார்.

ஆதிரைக்கு கிடைத்த அவமானம்

ஆதிரைக்கு கிடைத்த அவமானம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் காலேஜுக்கு சென்றிருந்த ஈஸ்வரி தர்ஷன் உடன் வீட்டிற்கு வரும்போது தர்ஷன் இடம் ஆதிரை உனக்கு வெட்கமா இல்லையா நீ எதற்காக உங்க அம்மாவை கூட்டிக்கொண்டு காலேஜுக்கு போனா? உனக்கு இங்கிலீஷ் பேச வேண்டும் என்பதற்காக கூட்டிக்கொண்டு போனா இன்னும் ஆட்டம் போடுவார்கள். என்னைப் போல அவர்களால் நாலு வார்த்தை இங்கிலீஷில் பேச முடியுமா என்று ஆதிரை வசனம் பேசிக்கொண்டிருக்க ஈஸ்வரி தர்ஷனை மேலே செல்ல சொன்னதும் ஆதிரை ஈஸ்வரியிடம் என்ன ஆட்டிட்யூட் எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என கேட்க, திஸ் இஸ் நாட் ஆட்டிடியூட் திஸ் இஸ் மை செல்ஃப் ரெஸ்பெக்ட் என்று கூறிக்கொண்டு ஈஸ்வரி அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார்.

மருமகள்களின் பேச்சு வார்த்தை

மருமகள்களின் பேச்சு வார்த்தை

வீட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தாலும் குணசேகரன் எதுவுமே பேசாம வெளியே தூணில் சாய்ந்த படி கேட்டுக் கொண்டே இருக்கிறார். அடுத்ததாக, இரவு வீட்டு வாசல் படியில் மருமகள்கள் அனைவரும் அமர்ந்து இருந்து இருக்கின்றனர் அப்போது ஈஸ்வரி ஜனனிக்கு நன்றி என கூறுகிறார். எனக்குள் இருக்கும் செல்ஃப் ரெஸ்பெக்ட் உன்னால் தான் வெளியே வர தொடங்கி இருக்கிறது. எனக்கு இப்படி எல்லாம் பேச தெரியும் என்பதே நான் மறந்துவிட்டேன். நீ எனக்கு கொடுத்த ஆறுதல் மற்றும் தெம்பு காரணமாகத்தான் நான் இப்படி பேசத் தொடங்கி இருக்கிறேன் என்று கூற ஜனனி எனக்கு நன்றி கூற தேவையில்லை உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ரேணுகாவும் நந்தினியும் ஈஸ்வரி அக்கா பேசத் தொடங்கிட்டாங்க இனி நாங்க எப்போ தொடங்கப்போறோம்னு தெரியல என சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

பூகம்பம் வரப்போகுது

பூகம்பம் வரப்போகுது

அடுத்தது ஜனனி வீட்டிற்குள்ளே புதிய கோர்ஸில் சேர்வதற்காக செக் பண்ணி கொண்டு இருக்கிறார். அப்போது பட்டம்மாள் பாட்டி அருகில் வந்து நான் இரண்டு நாட்கள் எங்கே சென்றேன் என்று கேட்க விரும்பவில்லையா? என்று கேட்க நீங்கள் உங்களுடைய பர்சனல் வேலையாக சென்றீர்கள் என்று சொன்னீர்களே அதைப் பற்றி நான் எப்படி கேட்க முடியும். இந்த வீட்டில் தான் தான் யாருக்கும் சுயமாக எதுவும் செய்ய உரிமை இல்லை என்பதை நான் பேசிக் கொண்டிருக்கும் போது நானே அப்படி கேட்க மாட்டேன் என்று சொல்ல, நான் செய்த வேலை வெளியே தெரியவரும்போது பெரிய பிரச்சனை பூகம்பமாக வெடிக்க இருக்கிறது என்று சொல்கிறார். நான் போனது ஒரு வேலைக்கு ஆனால் அங்கு வேற ஒரு வேலையை முடித்து விட்டு வந்திருக்கிறேன். நான் செய்திருக்கிற வேலை உனக்கு, வீட்டில் இருக்கும் மீதம் உள்ள மூன்று மருமகளுக்கும் வெளிச்சம் தருவதாக இல்லாமல் உங்களைப் போல நம்மளை போல முன்னேரே வேண்டும் என அடக்கு முறையில் அடிமைப்பட்டு இருக்கும் பல பெண்களுக்கு வெளிச்சம் தருவதாக இருக்கும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

கதிரின் அடாவடி

கதிரின் அடாவடி

அடுத்ததாக வெளியே சென்றிருந்த கதிர் கோபத்தோடு வீட்டிற்குள் வந்து வீட்டிற்கு போலிஸை கூட்டிக்கொண்டு வந்து இருக்கா, அவளை வீட்டுக்குள்ளே வச்சிருக்கீங்களா? அவளை பிடித்து வெளியே துரத்த வேண்டியதுதானே என்று ஜனனி மீது கோபத்தில் அப்பத்தாவை வெளியே கூப்பிடுகிறார். ஜனனி அப்பத்தா இருவரும் கதவை திறக்காததால் கதவை தட்டிக் கொண்டே இருக்க குணசேகரன் எவ்வளவோ தடுத்து கூறிக் கொண்டிருக்கிறார். வேண்டாம் இப்போ பிரச்சனை பண்ணாதே என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் கேட்காமல் அப்பத்தாவிடம் ஜனனியை வெளியே தள்ளும்படி அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்க அப்பத்தா கதிரை பிடித்து தள்ள, கலவரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வழியாக கதிரை குணசேகரன் கீழே கூட்டிக் கொண்டு வருகிறார். பின்பு அப்பத்தா இவர்கள் இப்போ பொறுமையா போறது அந்த 40% ஷேருக்காக தான் ஆனால் அதில் பெரிய பிரச்சனை இருக்கு என்பதை ஜனனியிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+