எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த “புது” சிக்கல்.. நடிகர் மாரிமுத்துவிடம் சரமாரி கேள்வி கேட்ட CA மாணவர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆடிட்டரை நடத்தும் விதத்தை வைத்து பலர் தன்னை கிண்டல் செய்வதாக CA படிக்கும் மாணவர் ஒருவர் அந்த சீரியலின் குணசேகரன் இடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
குணசேகரன் ஆடிட்டர் ஒருவரை கிண்டல் செய்வது நிஜ ஆடிட்டர்களின் மனதை பாதித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடிக்கும் நடிகர் மாரிமுத்து விளக்கம் கொடுத்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் குணசேகரனாக நடிக்கும் நடிகர் மாரிமுத்து சமீபத்தில் ஃபேன்ஸ் மீட்டிங்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
அந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவிடம் ரசிகர் ஒருவர்," நீங்கள் ஆடிட்டரை ஏன் அப்படி நடத்துறீங்க? ஆடிட்டரை பேசுற விதம் பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறது. ஆனால் நான் சிஏ படிக்கும் மாணவன் அதனால் பலர் நீங்கள் பேசும் வீடியோக்களை எனக்கு அனுப்பி என்னை கலாய்க்கிறாங்க" என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதற்கு சிரித்தபடியே நடிகர் மாரிமுத்து "அது ஒரு கேரக்டர் அவ்வளவுதான். ஆடிட்டர் எங்க வீட்டில் ஒருவர் போல இருக்கிறார். பல வருடங்களாக எனக்கு நல்லது கெட்டது எல்லாமே அவர்தான் சொல்லித் தருகிறார். நான் தொடர்ச்சியாக ஏமாந்து கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு பிரியமாக என்னோடு இருப்பவரிடம் தானே நான் என்னுடைய கோபத்தை காட்ட முடியும். அப்படித்தான் அந்த கதையில் ஆடிட்டரிடம் நான் காட்டும் கோபம் இருக்கிறது".
அதோடு நான் ஆடிட்டர் பத்தி பேசுவதை பல ஆடிட்டர்கள் கூட நல்லா இருக்கு என்று எனக்கு சொல்லி இருக்கிறார்கள்." நான் ஆடிட்டர்கள் அனைவரையும் பற்றி பேசவில்லை. அந்த சீரியலில் கதாபாத்திரத்தை பற்றி மட்டும் சொல்கிறேன். அவர் வந்து என்னிடம் கெட்ட செய்தியை மட்டுமே சொல்லும்போது, இந்த மாதிரி ஏதாவது பேசினால் தானே சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் தான் என்னுடைய வசனமும் அப்படி இருக்கிறது. அவ்வளவுதான் என்று விளக்கம் நடிகர் மாரிமுத்து கொடுத்திருக்கிறார்.
அதுபோல ஜீவானந்தம் என்னுடைய கம்பெனியில் வந்து இருக்கிறார் என்று ஆடிட்டர் என்னிடம் வந்து சொல்லும்போது நான் அவரை கண்ட மேனிக்கு திட்டுவேன். ஆனால் இதே ஆடிட்டர் இனி வரும் எபிசோட்டில் என்னை காப்பாற்றுபவராக இருக்கலாம். அவரால் எனக்கு பல நல்லது நடக்கலாம். அப்போது நான் அவரை பாராட்டுவேன். நடிப்பு வேறு, உண்மை நிலை வேறு. நான் வேறு எந்த கருத்திலும் அப்படி பேசவில்லை.
நீங்களும் அதை ஜாலியாக தானே பாக்குறிங்க.. இந்தக் கேள்வியும் கூட ஜாலியா தானே என்கிட்ட இப்படி கேள்வி கேட்கிறீங்க? என்று அந்த ரசிகரின் வருத்தத்திற்கு ஆறுதலோடு தன்னுடைய நிலைமையும் புரிய வைத்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications