எதிர்நீச்சல் ஜனனி சொன்ன "குட் நியூஸ்”.. இது வரலாற்றில் முதல் முறை.. கன்பாஃர்ம் பண்ணியாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக இந்த சீரியல் தான் டிஆர்பியின் அடிப்படையில் டாப் 10இல் முதல் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் இதுவரைக்கும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில் இனி ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் என்று கூறியிருக்கின்றனர்.

Ethirneechal serial has been telecast from Monday to Sunday as well promo

பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பியின் அடிப்படையில் தான் ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாகவே டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இப்போது அதிகமான வரவேற்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்த எதிர்நீச்சல் சீரியலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ச்சியாக பலரும் பார்த்துக் கொண்டிருப்பதாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுவும் சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் வரை இந்த சீரியலுக்கு ரசிகர்களாக கருத்து கூறி சீரியலை பாராட்டவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதற்கு சாட்சியாக தான் கடந்த வாரம் அரசியல் பிரமுகரான சுப. வீரபாண்டியன் கூட தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் எதிர்நீச்சல் குறித்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு எதிர்நீச்சல் சீரியல் கதையையும், நடிகர்களையும் அதிகமாக பாராட்டி இருந்தார். இந்த நிலையில் அதற்கு முன்பே நடிகர் விஜய்யின் அம்மாவும் இந்த சீரியல் தான் நான் பார்ப்பேன் என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியலில் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் பல மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், சமூகத்தில் பலரும் நம்பிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் கூட குழந்தைகளை தமிழ் மீடியத்தில் படிக்க வைப்பது குறித்து மையக்கருத்தை வைத்து ஒரு எபிசோடு வந்தது.

அதுபோல கடவுள் நம்பிக்கை மற்றும் பொது நலன் குறித்தும் விழிப்புணர்வு கொடுக்கும் வகையிலும் ஜீவானந்தம் கேரக்டரில் இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வமே விவாதித்து இருந்தார். இந்த நிலையில் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காரணம் மற்ற சீரியல்கள் போலவே இது அரைத்த மாவை அரைக்காமல் கதை கொஞ்சம் புதியதாக இருப்பதாகவே ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

அதனால்தான் ஒவ்வொரு நாளும் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியானதும் அங்கே லைக்குகள் மளமளவென ஏறி கமெண்டுகளும் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் முதல் திங்கள் முதல் ஞாயிறு வரை ஏழு நாட்களும் ஒளிபரப்பாகும் என்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஜனனி வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் கூப்பிட்டு வைத்து தன்னுடைய ஃபோனில் வந்த மெசேஜ் பார்த்து நமக்கு பேன்ஸ் இடம் இருந்து ஒரு மெசேஜ் வந்திருக்கு என்று சொல்ல, என்ன மெசேஜ் யார் அனுப்பி இருக்காங்க என்று குணசேகரன் அந்த இடத்திற்கு வந்து ஆஜராகிறார். அதற்கு நந்தினி இவரை தான் நீ கூப்பிடவே இல்லையே எதுக்கு இவரு வந்து இருக்காரு என்று நக்கல் செய்ய, வரட்டும் அவருக்கும் சேர்த்து தான் அந்த ஃபேன்ஸ் எழுதி இருக்காங்க என்று சொல்கிறார்.

அதற்கு என்ன எழுதி இருக்காங்க.? அத சொல்லு என்று குணசேகரன் மிரட்ட, வாரத்தில் ஆறு நாளும் உங்களை எல்லாம் பார்த்து அதற்கு அப்புறம் தான் நிம்மதியா தூங்குறோம். நாங்க நிம்மதியாக தூங்காத ஒரே நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான். அதனால அன்னைக்கும் வந்துருங்கன்னு எழுதி இருக்காங்க என்று சொல்ல, யம்மா ஏய்.. அவங்க என்ன விளையாடுறாங்களா? ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் நிம்மதியா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கிறோம் என்று கோபமாக திட்டுகிறார்.

Ethirneechal serial has been telecast from Monday to Sunday as well promo

அதற்கு ஜனனி அவர் இப்படித்தான் கத்துவாரு பிறகு ஞாயிற்றுக்கிழமை வெள்ளையும் சொல்லலாமா வந்து நிற்பார் என்று சொல்லி, இனி இந்த வாரம் முதல் ஞாயிறு உட்பட வாரத்தில் ஏழு நாட்களும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறி இருக்கின்றனர். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.

இதுவரைக்கும் எல்லா சீரியல்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் நிலையில், முதல் முறையாக எதிர்நீச்சல் சீரியல் அனைத்து நாட்களும் ஒளிபரப்பாக போகிறது. இதனால் இதுதான் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+