வருடத்தின் முதல் வாரத்திலே எதிர்நீச்சல் சாதனை.. போட்டி போட்ட"அந்த” சீரியலை பின்னுக்கு தள்ளிட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் இந்த வருடத்தின் முதல் வாரத்தில் கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் பெற்ற டிஆர்பி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

ரசிகர்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த முறை மீண்டும் முன்னேறி இருக்கிறது.

கடந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது.

ப்ரோமோவிற்க்காக வெயிட்டிங்

ப்ரோமோவிற்க்காக வெயிட்டிங்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கியது. குறுகிய காலத்திற்குள் இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் குவிய தொடங்கி விட்டனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கும் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காரணம் இந்த சீரியலில் எதார்த்தமாக நடிப்பு இருப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர். ரசிகர்களை அதிகமாக கவர்ந்ததால் தான் ரசிகர்கள் சன் டிவியின் வேறு சீரியலின் ப்ரோமோக்களில் கூட எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோவை கேட்டு வருகிறார்கள்.

கடந்த வாரத்தை விட அதிகம்

கடந்த வாரத்தை விட அதிகம்

இந்த வகையில் ஒவ்வொரு வாரமும் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் ஒவ்வொரு சீரியல்களும் எந்த அளவிற்கு டிஆர்பி அளவை எட்டி இருக்கிறது என்ற விவரங்கள் வெளியாகி வரும். அந்த மாதிரி தற்போது வெளிவந்த விவரங்களின் அடிப்படையில் எதிர்நீச்சல் சீரியல் 9.48 அளவை பெற்றிருக்கிறது. இது கடந்த வாரத்தை விட அதிகம் தான். கடந்த வாரத்தில் 9.9 பெற்று எதிர்நீச்சல் சீரியல் ஆறாவது இடத்தில் இருந்தது.

கதை திருப்பங்கள்

கதை திருப்பங்கள்

இந்த நிலையில் இந்த வாரம் தற்போது புது புது திருப்பங்கள் சீரியலில் ஏற்பட தொடங்கி இருக்கிறது ஏற்கனவே பட்டம்மாள் அப்பத்தாவின் சொந்த ஊருக்கு மருமகள்கள் அனைவரும் சென்று இருக்கும் நிலையில், சக்தியின் மனமும் மாறி இருக்கிறது. சக்தி மீண்டும் ஜனனிக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியிருக்கிறார். குணசேகரனை எதிர்த்து பேச தொடங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஆதிரை காதலிக்கும் விஷயமும் தற்போது கரிகாலனால் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. கரிகாலன் காட்டிய வீடியோவை பார்த்து குணசேகரன் குடும்பமே ஆடிப் போய் இருக்கிறது.

நான்காவது இடத்தில்

நான்காவது இடத்தில்

இந்த நிலையில் ஆதிரை காதலிக்கும் நபர் எஸ்கேஆர் குடும்பத்தை சேர்ந்த நபர் என்பதால் மேலும் சீரியலுக்கு எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் கூடி இருக்கிறது. இனி அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் இந்த சீரியல் இந்த முறை நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்தாலும் இந்த வரம் இரண்டு இடங்களுக்கு முன்னேறிவிட்டது என்று இந்த சீரியலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது இந்த சீரியலின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். இனியா கடந்த வாரம் இந்த சீரியலை விட முன்னணியில் இருந்தது. ஆனால் இந்த வாரம் அந்த சீரியல் 9.45 பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஆனாலும் இனியா சீரியலை விட எதிர்நீச்சல் சீரியல் சிறிய அளவில் தான் முன்னேறி இருக்கிறதா? என்று சிலர் வருத்தத்தையும் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+