ஜீ தமிழ் சீரியலில்... என்ட்ரி ஆகும் "எதிர்நீச்சல்” ஜான்சி ராணி.. இனி நடக்கப் போவது இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் நடிகை காயத்ரி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முதன்முறையாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் வேதநாயகியாக அறிமுகமாகிறார்.

Ethirneechal serial Jhansi Rani Zee Tamil Amudhavum Annalakshmiyum enter serial

நாட்டாமை கேரக்டரில் எதிர்நீச்சல் ஜான்சி ராணியை பார்த்ததும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படும் ஒரு சீரியலாக மாறி இருக்கிறது. டிஆர்பியில் கடந்த இரண்டு வாரங்களாக முதல் இடத்தை பிடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

Ethirneechal serial Jhansi Rani Zee Tamil Amudhavum Annalakshmiyum enter serial

ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ஒன்பது மணிக்கு ஒளிபரப்பானால் டிஆர்பி யில் முதலிடத்தை பிடிக்கும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் தற்போதைய டைமிலே இது முதல் இடத்திற்கு வந்தது. இந்த சீரியல் ரசிகர்களுக்கு பெரிய அளவில் கொண்டாட்டம் தான்.

அதுபோல இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்திருக்கின்றனர். அதில் ஜான்சி ராணி கேரக்டர் வேற லெவல் என்று சொல்லலாம். முதல் இடத்தில் குணசேகரன் இருந்தாலும் குணசேகரனுக்கே வில்லியாக அவரை ஆட்டி வைக்கும் கேரக்டரில் ஜான்சி ராணி அறிமுகமான நாளிலிருந்து இப்ப வரைக்கும் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறார்.

Ethirneechal serial Jhansi Rani Zee Tamil Amudhavum Annalakshmiyum enter serial

அதே நேரத்தில் ஜான்சி ராணியாக நடிக்கும் காயத்ரி பல வருடங்களாக இந்த வாய்ப்புக்காக காத்திருந்திருக்கிறார். தொகுப்பாளராக அறிமுகம் ஆகி தன்னுடைய கேரக்டருக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்காமல் இவர் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தான் எதிர்நீச்சல் சீரியல் பட்டி தொட்டி எல்லாம் இவருக்கு பிரபலத்தை கொடுத்து இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அயலி வெப் சீரிஸில் கூட இவருடைய கேரக்டர் சின்னதாக தான் இருக்கும். ஆனால் அவர் பேசிய டயலாக் பெரிய அளவில் ரீச் ஆனது. "ஆம்பளைங்க மரியாதையை எதுக்கு பொம்பளைங்க காலுக்கு இடையில தேடுறீங்கன்னு" எதார்த்தமா பேசி இருப்பார். அதைத்தொடர்ந்து இப்போது வெற்றிலையை போட்டுக்கொண்டு எதிர்நீச்சல் சீரியலில் புடவையை தூக்கி சொருகியபடி இவர் அசால்ட்டாக நடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது பெரும் பரபரப்பாக இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலின் ஆரம்ப காலகட்டத்தில் மாமியார் மருமகள் அதாவது அமுதாவும் அன்னலட்சுமி அதிக அளவில் ஒற்றுமையாக இருந்தார்கள். யாரு என்ன சொன்னாலும் என் மருமகள் சொன்னால் சரியாக இருக்கும் என்று அன்னலட்சுமி கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார்.

இதுபோல அமுதாவும் தன்னுடைய கணவர் குடும்பத்திற்காக எவ்வளவோ அவமானங்களை தாங்கிக் கொண்டு தன்னுடைய மாமியார் மீது தனக்கு இருக்கும் மரியாதை பாசத்தை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அன்னலட்சுமியின் இளைய மகன் அடுத்தடுத்து செய்த சூழ்ச்சியால் அமுதா மீது அன்னலட்சுமி கடும் கோபத்தில் இருக்கிறார். அதே போல தற்போது அமுதா தொடர்ந்து படிக்கக் கூடாது என்று அன்னலட்சுமி கூறிக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal serial Jhansi Rani Zee Tamil Amudhavum Annalakshmiyum enter serial

ஏற்கனவே அமுதா படிக்கக் கூடாது என்று பல சூழ்ச்சிகள் நடந்தாலும் அவர் எக்ஸாமில் பாஸ் ஆகிவிட்டதால் மீண்டும் நான் படிப்பேன் என்று சொல்ல, இனி படிப்பு முக்கியம் என்றால் என்னுடைய மகனோடு நீ வாழக்கூடாது வாழ்க்கையை வெட்டி விட வேண்டும் என்று அன்ன லட்சுமி மிரட்ட இந்த பிரச்சனை பஞ்சாயத்துக்கு வருகிறது. பஞ்சாயத்து காரர்கள் இந்த பிரச்சனைக்கு முடிவு சொல்ல முடியாமல் இருக்கும்போது அன்னலட்சுமியின் மாமியார் வேதவள்ளியாக காயத்ரி என்ட்ரி கொடுக்கிறார். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.

அமுதாவுக்கு பாட்டியாக காயத்ரி வந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் ஜான்சி ராணியை போலவே இங்கேயும் வெற்றிலையை போட்டுக்கொண்டு பட்டுப் புடவையை தூக்கி சொருகிய படி வீராப்பாக வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் "தெய்வமே நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா.." என்று இன்ப அதிர்ச்சியோடு கருத்துக்களை குவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+