எதிர்நீச்சல் முடிஞ்சாச்சு! ஆனால் இறுதியில் சிரிப்பு.. ஜனனி வெளியிட்ட போஸ்ட்.. ஈஸ்வரி கொடுத்த உறுதி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அடுத்த வாரம் ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தொடர்ச்சியாக இறுதி நாள் சூட்டிங் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சீரியலில் கதாநாயகியாக ஜனனி கேரக்டரில் நடிக்கும் நடிகை மதுமிதாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரமாண்டமாக தொடங்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் பெரிய அளவில் இந்த சீரியலுக்கு வரவேற்பும் பிரபலமும் இருந்த நிலையில் சில மாதங்களாகவே இந்த சீரியலில் கதைகள் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதோடு இந்த சீரியலில் பல பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில் எப்படி முடிவுக்கு வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
அதுபோல சீரியல் இரண்டாவது பாகம் வருமா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். ஏற்கனவே அண்ணன் குணசேகரனுக்கு எதிராக தம்பிமார்கள் எல்லோரும் திருந்தி இருக்கின்றனர். ஆனால் இப்போது அண்ணனுக்கு ஆதரவாக எல்லோரும் பழையபடி மாறிவிட்டார்கள். இந்த நிலையில் இந்த சீரியலின் முடிவு எப்படி இருக்க போகிறது என்று யோசிக்க முடியாத வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலின் இறுதி நாள் ஷூட்டிங் நேற்றோடு முடிவடைந்து இருக்கிறது. அதை குறித்த புகைப்படங்களை சீரியல் நடிகர்கள் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை மதுமிதா தன்னுடைய instagram பக்கத்தில் சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் மற்றும் சீரியலில் தன்னோடு நடித்த கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி போன்றவர்களோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அதற்கு கேப்ஷனாக இறுதியில் எல்லோருக்கும் சிரிப்பு என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு கீழே ஈஸ்வரி கேரக்டரில் நடிக்கும் கனிகா இந்த உறவு நமக்குள் எப்போதும் நீடிக்கும் என்று உறுதி கொடுத்திருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications