அண்ணன் காலில் பிளேடால் கிழித்து விட்டேன்.. மறைந்த மாரிமுத்து பற்றி தம்பி உருக்கம்..நெகிழ்ச்சி காரணம்
சென்னை: பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவருடைய இறப்பிற்குப் பிறகு அவருடைய நண்பர்களும், உறவினர்களும் அவரைப் பற்றிய பல நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மாரிமுத்துவின் தம்பி மாரிமுத்து பற்றி ரகசியங்களை உடைத்திருக்கிறார்.

அதில் தான் சிறுவயதில் தன்னுடைய அண்ணன் காலில் பிளேடை வைத்து கிழித்து விட்டேன் என்றும் அதற்கு காரணம் ஒரு செருப்பு தான் என்பது பற்றியும் அதில் மாரிமுத்துவின் தம்பி பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்திருந்தாலும் வெள்ளித் திரையில் முதல் முறையாக இவர் குணசேகரன் கேரக்டரில் நடித்து பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் யாரும் எதிர்பாக்காத வகையில் திடீரென்று மரடைப்பு காரணமாக காலமானார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து அவருடைய ரசிகர்கள் இன்னும் மீள முடியாமல் இருக்கின்றனர். அதே நேரத்தில் மாரிமுத்து பற்றி பல ரகசியங்களை அவருடைய தம்பியே உடைத்திருக்கிறார். அந்த வகையில், ஆரம்ப காலகட்டத்தில் எங்கள் வீட்டில் ரொம்பவே கஷ்டம் அது குறித்து அண்ணன் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். நாங்கள் ஸ்கூல் போகும்போது கூட செருப்பு போடாமல் தான் போயிருந்திருக்கிறோம். அந்த காலகட்டத்தில் அவ்வளவு வறுமை வீட்டில் இருந்தது.
அந்த நேரத்தில் அண்ணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். லீவுக்கு வீட்டிற்கு ஒருமுறை வந்திருந்தார். அப்போது நான் ஸ்கூலுக்கோ இல்ல தோட்டத்துக்கோ போய் இருந்தேன். போயிட்டு மாலை வீட்டிற்கு வரும்போது அங்கே ஒரு செருப்பு இருந்தது. பேட்டா செருப்பு 99 ரூபாய் புதுசா விலை ஸ்டிக்கரோடு அங்கே இருக்கிறது. அதை பார்த்ததும் நான் இது யாரோட செருப்பு என்று கேட்டேன். அதற்கு அண்ணன் இது என்னோடது தான் என்று சொன்னான்.
எனக்கு செம கோவம் வந்துட்டு வீட்டில் இருந்து அப்பா அம்மா எல்லாத்தையும் வெளியே பிடித்து தள்ளி விட்டேன். நானும் அண்ணனும் வீட்டுக்குள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அப்போது கையில் ஒரு பிளேடு கிடைத்தது அதை வைத்து அண்ணன் காலில் ஒரு கோடு போட்டு காலை கிழித்து விட்டேன்.

ஏனென்றால் எனக்கு அந்த அளவிற்கு கோபம் வரும். வீட்டில் எவ்வளவு கஷ்டம். சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கோ இவன் பேட்டா செருப்பு வாங்கிட்டு வந்திருக்கான் என்று எனக்கு கோபம். அவ்வளவு விலை கொடுத்து வாங்கணுமா? என்னால் இதை ஏத்துக்க முடியவில்லை. அந்த காலகட்டத்தில் யாருமே வீட்டில் செருப்பு போட்டதே கிடையாது. தோட்டத்துக்கு போகும்போது கூட வெறும் காலோடு தான் போவோம்
அவ்வளவு கஷ்டப்பட்டோம். அப்படி சண்டையும் போட்டோம். ஆனால் பிறகு அதெல்லாம் நினைத்து சிரித்து இருக்கிறோம்..
நான் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடைய குடும்பத்தை எங்க அண்ணன் தான் பார்த்துக்கொண்டார். என்னுடைய மனைவியும் என்னுடைய அண்ணனின் மனைவியும் அக்கா தங்கைதான். அதனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. இப்போ எனக்கு இரண்டு குழந்தைகள்.
இப்போ எங்க அண்ணனோட குழந்தைகளை சேர்த்து நான்கு குழந்தைகள் இதுவரைக்கும் என் அண்ணன் தான் நான்கு குழந்தைகளையும் பார்த்து வந்தார். இனி நான் அவருடைய ஆசை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று உருக்கமாக அந்த பேட்டியில் நடிகர் மாரிமுத்துவின் தம்பி பேசி இருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications