என் மேல கேஸ் போட்டுட்டாங்க.. எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பேட்டி.. காரணம் இதுதானாம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
அவர் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலால் தனக்கு கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அப்போது "சிலர் என் மேல கேஸ் போட்டு விட்டார்கள். என் மேல் மட்டுமல்லாமல் சேனல் தரப்பின் மீதும் கேஸ் போட்டு இருக்கிறார்கள்" என்ற உண்மையை இயக்குனர் திருச்செல்வம் உடைத்திருக்கிறார்.
எதிர்நீச்சலில் ஹரிப்ரியா "நந்தினி"யாக செலக்ட் ஆனது.. இந்த ஒரு காரணம் தானாம்.. மனம் திறந்த இயக்குனர்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகமான ரசிகர்களால் உச்சரிக்கும் பெயராக எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் தனித்துவமான கதை மற்றும் காட்சி அமைப்புக்கு காரணமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலயே டிஆர்பியிலும் முன்னணி இடத்தை இந்த சீரியல் பிடித்திருக்கிறது.
அதிகமான டிஆர்பிஐ பெற்று இருக்கும் இந்த சீரியலால் இந்த சீரியலின் இயக்குனருக்கு சில பிரச்சனைகள் வந்திருப்பதாக அவர் சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார்.அதாவது எதிர்நீச்சல் சீரியல் பெண்களுக்கு ஆதரவாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆண் ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி இருக்கும் பெண்கள் தாங்கலாக முன்னேறி தங்களுடைய திறமையை வெளி உலகத்திற்கு கொண்டுவரும் விதமாகத்தான் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது.
ஜீவானந்தம் சொன்ன "அந்த" பெயர்.. கண்ணீர் விட்டு கதறும் ஈஸ்வரி.. குணசேகரனுக்கு தெரிய வரும் உண்மை
வீட்டிற்குள் தாங்கள் அடிமையாக இருக்கிறோம் என்பதை தெரியாமலே பலர் அடிமையாக இருக்கிறார்கள். பொதுவாக இன்று சமையலில் இருந்து வீட்டு வேலைகள் முழுவதும் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்று ஒரு முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக எங்களுக்கும் திறமை இருக்கிறது. எங்களுக்கும் ஆசைகள் கனவு இருக்கிறது.
அதையும் நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று எப்போது ஒரு பெண்கள் எதிர்த்து நீச்சல் அடிக்க தொடங்குகிறார்கள் என்பது பற்றி எதிர்நீச்சல் சீரியலில் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி மட்டும்தான் வீட்டில் குணசேகரனை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார்.
இப்போது ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி என எல்லோரும் துணிச்சலாக பேச தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் ஈஸ்வரி தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். ரேணுகாவிற்கும் டான்ஸ் டீச்சராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இப்படியாக கதை பயணித்துக் கொண்டிருக்கும் போது இந்த சீரியலில் இயக்குனர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சீரியலில் கிடைத்த பாராட்டு மற்றும் பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது இந்த சீரியலுக்காக என் மேல கூட சிலர் வழக்கு தொடுத்து இருக்காங்க. என் மேல மட்டுமல்லாமல் சேனல் தரப்பின் மீதும் வக்கீல் நோட்டீஸ் எல்லாம் சிலர் அனுப்பினாங்க.
அதில் என்ன சொல்லி இருக்காங்கண்ணா இந்த சீரியல் பெண்களுக்கு ஆதரவாக இருக்கு என்று கூறியிருக்கிறார்கள். அதிலும் ஒரு சின்ன எடுத்துக்காட்டு கூற வேண்டும் என்றால், இப்ப எங்க வீட்டில் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க உங்களால, என்று ஒரு ஆண் சொல்கிறார். பெண்கள் கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறார்கள்.
அதுவும் அம்மா பாட்டி போன்றவர்களை இப்படிப்பட்டவர்களை குறிப்பிடுவதில்லை. இன்றைய காலத்தில் இருக்கும் பெண்கள் கேள்வி கேட்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இப்படி செய்கிறார்கள் என்று அந்த பேட்டியில் இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications