என்னம்மா நீங்க... இப்படி பண்றீங்களேம்மா...!
சென்னை: இது நடிப்பு கூட இல்லை...எல்லாம் நிஜம். கோமாளிகள் என்று பட்டம் கொடுத்துவிட்டால் மட்டும் கை நீட்டி அடிக்கலாமா? இதையும் ஒளிபரப்பி, சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ என்று சொல்கிறார்கள்..இது சரியா?
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆளாளுக்கு கோமாளிகளை கை நீட்டி அடிக்கிறார்கள். இதில் குக்காக கலந்துக்கொண்ட ரம்யா பாண்டியன் மட்டும்தான் யாரையும் கை நீட்டி அடிக்கவில்லை.
கோமாளிகள் மணிமேகலை திருமணமான பெண், சிவாங்கி கல்லூரியில் படித்து வருபவர்.பாலா, புகழ் இருவரும் விளையாட்டு பிள்ளைகள் என்றாலும் மேஜர். இவர்களைத்தான் குக்குகள் கை நீட்டி பொளேர் பொளேர் என்று போடுகிறார்கள்.

வனிதா விஜயகுமார் உமா ரியாஸ்
குக்கு வித் கோமாளியின் குக்குகளாக கலந்துகொண்ட உமா ரியாஸ், வனிதா விஜயகுமார் இருவரும் அடிக்க கை நீட்டுவார்கள். ஆனால், அடித்தது இல்லை. நிகழ்ச்சியில் இவர்கள் இருவர் சமையலும்தான் வித்தியாசமாக இருந்தது. வின்னர் வனிதா விஜயகுமார், ரன்னர் உமா ரியாஸ் என்று விருதுகளையும் பெற்றார்கள்.

ரம்யா பாண்டியன் பிரியங்கா ரோபோ
ரம்யா பாண்டியன் ரொம்ப கூல் கன்டெஸ்டன்ட்... கோமாளிகள் என்ன தப்பு செய்தாலும், புன்சிரிப்புடன் ஹேண்டில் செய்வார். அதிர்ந்து பேசியதில்லை...பிரியங்கா ரோபோ சங்கர் கூட யாரையும் கை நீட்டி அடித்ததில்லை. கொஞ்சம் அவசரம் காண்பிப்பார் அவ்வளவுதான்.

ரேகா தாடி பாலாஜி
நடிகை ரேகா தொட்டத்துக்கு எல்லாம் டென்ஷானாகி கோமாளிகளை பொளேர் பொளேர்னு அடித்துவிடுகிறார். இதை எப்படி விஜய் டிவி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. தாடி பாலாஜி கேட்கவே வேண்டாம்... பொளேர் பொளேர்னு அடிதான். நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ. அதற்காக நிஜத்திலும் இப்படியா அடித்து மிரள வைப்பது?

ரேகா சிவாங்கி
இந்த முறை நடிகை ரேகாவிடம் கோமாளியாக மாட்டிக்கொண்ட சிவாங்கி, தோசை வார்க்கத் தெரியாமல் திணறுகிறார். போச்சு.. போச்சு.. எல்லாமே கெட்டுப்போச்சு என்று மெல்லியதாக தோசை வரவில்லை என்று ரேகா, சிவாங்கியை பொட்டு பொட்டென்று அடிக்கிறார். பாவம் அடி தாங்காமல் அந்த புள்ளை தப்பிச்சு ஓடுது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications