டாஸ்க் பெயரில் முட்டையை வேஸ்ட் பண்ணி விட்டீர்களே!!! கலாய்க்கும் சாப்பாடு ஆர்வர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் உணவுகளை வீண் செய்வதை பார்த்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பலபேர் பட்டினியில் இருக்கும்போது இப்படி டாஸ்க் பெயரில் உணவு பொருட்களை வீண் செய்யலாமா என பலர் சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் முட்டையை அடுத்தவர்களின் தலையில் உடைக்கும் பிக் பாஸின் டாஸ்க் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.

இந்த நேரத்தில் இப்படியா??
விஜய் டிவி ப்ரோக்ராம் எல்லாமே எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருந்து வரும் அதிலும் ரியாலிட்டி ஷோ என்றால் கேட்கவே வேண்டாம். அதில் வரும் ரசிகர்களின் முகம் சுளிக்க வைக்கும் அளவில் இருந்து வரும் என்று பல காலமாகவே ரசிகர்கள் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றனர். அதில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியும் சேர்ந்திருக்கிறது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் பலர் மழை வெள்ளத்தில் பாதிப்பு அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் சாப்பாட்டிற்கு கூட வலி இல்லாமல் எத்தனையோ பேர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் டிவியில் தொடரும் செயல்கள்
மக்கள் பலர் பசியும் பட்டினியும் இருக்கும்போது உணவு பொருட்களை பல பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் வீணடிப்பது பற்றி பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். என்னதான் டாஸ்க் ஆக இருந்தாலும் இப்படியா செய்வீர்கள் என்று பிக்பாஸ் க்கு எதிராக பல கமெண்டுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் ஒரு சீரியல் நடிகைகளை வைத்து விளையாடப்படும் ரெடி ஸ்டெடி போ என்னும் நிகழ்ச்சியில் உணவுப்பொருள்களை அதிகமாக வீணடிக்கிறார்கள் என்று பல கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. அதுபோலத்தான் தற்போது பிக்பாஸ் க்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி வீண் அடிக்கலாமா??
நெட்டிசன்கள் ஒரு பக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலாய்த்து வந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். விதவிதமான சண்டை சச்சரவுகள் வந்தாலும் அது ரசிகர்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்களை கவர்ந்து விடுகிறது என்று பலர் கூறி வருகின்றனர். அது போலத்தான் தற்போதைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் விளையாடுகிறோம் என்கிற பெயரில் பொருள்களை வீணடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து பலர் திட்டி தீர்த்து கொண்டிருக்கும்போது பிக்பாஸில் தீவிரமான ரசிகர்கள் இவர்கள் இப்படி செய்வதால் தானே அனைவரும் பார்க்க தூண்டுகிறது. அதனால் இப்படி செய்தால் ஒன்றும் தப்பில்லை என்றும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

சாப்பாடு ஆர்வலர்களின் கருத்து
நேற்றைய டாஸ்க்கில் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் தனக்கு எதிரே இருக்கும் போட்டியாளரின் தலையில் முட்டையை உடைக்க வேண்டும். இது ஒரு பனிஷ்மென்ட்டாக பிக்பாஸ் கொடுத்திருந்தது. ஆனால் இதை பார்த்ததும் சாப்பாடு ரசிகர்கள் பலர் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி வேஸ்ட் பண்ணுறத எங்களுக்கு தந்தால் நாங்களாவது சாப்பிடுவோம் என்று தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications