For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிக் பாஸ் ஃபைவ்னா..பைய..தான் பேசனுமா?? அடிக்கடி சவுண்ட் கூட்ட வேண்டியது இருக்கு..ரசிகர்களின் குமுறல்

Google Oneindia Tamil News

சென்னை: ரசிகர்கள் ஆர்வமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க காத்திருக்கும் நேரத்தில் போட்டியாளர்கள் செய்யும் செயலால் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது என பலர் கூறி வருகின்றனர்.

இதற்கு முந்தைய சீசன்களில் இந்த மாதிரி இல்லை ஆனால் இப்போது அது தான் அதிகமாக நடந்து வருகிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

பல போட்டியாளர்கள் குரலை குறைத்து பேசுவது ரசிகர்களுக்கு புரியாத வண்ணமாகவே இருந்து வருகிறது.

இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு கொண்ட முதல்வர்.. கருத்து கணிப்பில் முதலிடம் பிடித்த முதல்வர் ஸ்டாலின்!இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு கொண்ட முதல்வர்.. கருத்து கணிப்பில் முதலிடம் பிடித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிகமாக உலாவரும் ஆங்கிலம்

அதிகமாக உலாவரும் ஆங்கிலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக, பல ரசிகர்கள் இரவு கண் விழித்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவ்வளவு மெனக்கெட்டு இதற்காக காத்துக் கொண்டிருந்தாலும் போட்டியாளர்கள் செய்யும் சிறு தவறு ரசிகர்களின் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே உள்ள போட்டியாளர்கள் அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசுவதால் பல கிராமப்புற ரசிகர்களுக்கு புரியவில்லை என்று குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

 சரியாக கேக்கல

சரியாக கேக்கல

இந்தநிலையில் போட்டியாளர்கள் அடிக்கடி குரலை குறைத்து பேசி பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு காண்டை கிளப்பி வருகின்றனர். என்ன தான் இவர்கள் பேசுகிறார்கள் என்று கேட்பதற்காக அடிக்கடி டிவி வால்யூமை கூட்ட வேண்டியது இருக்கு என்று பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஹாட்ஸ்டாரில் பார்க்கும் ரசிகர்களுக்கும் சரியாக புரியவில்லை என்றுதான் கூறி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் இருக்கும் சிறுசிறு குறைபாடுகளும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைகிறதா?

நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைகிறதா?

போட்டியாளர்கள் அதிகமாக இருந்தால் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த போட்டியாளர்களுக்கு இந்த சீசன் கொஞ்சம் ஏமாற்றத்தை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது . காரணம் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது மற்ற போட்டியாளர்கள் பேசும் வார்த்தைகள் இடையிடையே கேட்டுக் கொண்டிருப்பதால் குறிப்பிட்ட போட்டியாளர் பேசும் வார்த்தைகளை சரியாக கேட்க முடியாமல் போகிறது என்று கூறிவருகின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை குறைத்து விட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது சரி செய்யப்படுமா??

இது சரி செய்யப்படுமா??

விஜய் டிவியில் ப்ரோமோக்கள் மட்டும் தெளிவாக இருப்பதால் அதை மட்டுமே சிலர் பார்த்து வருகின்றோம் நிகழ்ச்சி எல்லாம் பார்ப்பது கிடையாது என்று கூறிவருகின்றனர். ஏற்கனவே இந்த சீசன் நேரம் தவறி ஒளிபரப்பாகி வருகிறது என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் போது, அதற்காக மெனக்கெட்டு காத்திருந்து டிவி பார்த்தால் இப்படியா பண்ணுவீர்கள்?? என்று பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். எத்தனையோ முறை போட்டியாளர்கள் மைக்கை சரியாக மாற்றவும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தினார் .ஆனால் போட்டியாளர்கள் யாரும் அப்படி செய்வதில்லை. அவர் பேச்சை கேட்டு கொள்வதும் இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் இனியாவது இது சரி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

English summary
Fans have been saying that the fifth season of Bigg Boss is not exactly heard by the fans as the contestants often talk down the wrench.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X