கவலையை தள்ளி கவனி...க்யூட்டா சிரிக்குது பாவணி.. பிரியங்காவை கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: இதை இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று நான்காவது நாளில் இரண்டாவது ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
நேற்று எபிசோடில் பாவணியை சரியாக காட்ட வில்லையே என ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு இன்று என்டர்டைன்மென்ட் கிடைத்துவிட்டது.
ப்ரோமோவில் பாவணியின் அழுகையை பார்த்து ரசிகர்கள் பலர் மனது உடைந்து போய் விட்டதாம்.

மனசுக்கு சந்தோஷம் தான்
ப்ரோமோவில் காட்டுவது எல்லாம் எபிசோடில் காட்டப் படவில்லை என்று ரசிகர்கள் பலர் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது தற்போது அவர்களுடைய மனக்குமுறலை குறைக்கும் விதமாக பிக் பாஸ் ப்ரோமோ வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே இரண்டாவது நாளில் பாவனி ரெட்டியின் ப்ரோமோ வைரல் ஆன நிலையில் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலர் நிகழ்ச்சியை முழுக்க பார்த்து இருக்கின்றனர் ஆனால் எபிசோடில் அவரைப் பற்றி அதிகமாக காட்டவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். தற்போது மீண்டும் ப்ரோமோவில் இவர் வந்ததும் ரசிகர்களுக்கு எனர்ஜி தானே ஏறி விட்டதாம்.

பரிச்சயமான முகம் பாவனி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். இதில் அதிகமான பெண் போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தாலும், அதில் பலர் தெரியாத முகங்களாகவே இருக்கின்றனர். ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த பரிச்சயமான முகங்களாக ஒருசிலர் மட்டும் தான் இருக்கின்றனர். அதுவும் பாவணி ரெட்டி சின்னத்திரை நடிகையாகவும் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் பெறும் இளைஞர்கள் பட்டாளத்தை ரசிகர்களாக வைத்திருக்கிறார்.

ரசிகர்களின் ஆர்மி பலன்
இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகிறார் என்று தெரிந்ததும் இவருடைய ரசிகர்கள் செம ஹேப்பியில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல்முதலாக இவருக்குத்தான் ரசிகர்கள் ஆர்மி தொடங்கியிருக்கிறார்கள்.ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்த நேரத்தில் தற்போது இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் அதிகமாக உயர்ந்து இருக்கின்றனர். அதனாலேயே இவருடைய எபிசோடுகள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் நேற்றைய ப்ரோமோக்களில் ஒன்றில் கூட இவருடைய முகம் தெரியவில்லை என ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை அனுப்பி வந்தனர். தற்போது இரண்டாவது ப்ரோமோ வில் இவருடைய அழுகையை பார்த்ததும் ரசிகர்கள் பலர் மனவருத்தம் அடைந்திருக்கிறார்கள்.

அடடா என்ன சிரிப்பு
அய்யோ நம்ம தலைவி அழுதுகொண்டு இருக்காங்களே என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக பிரியங்கா வந்து பாவணி ரெட்டியின் அழுகையை நிறுத்தி விட்டார். பிரியங்கா தனக்கே உரிய காமெடியால் இவரிடம் என்ன வேணும் பசிக்குதா...என்று கிண்டல் செய்யவும் ஆமா...எனக்கு ஆந்திரா உணவு வேண்டுமென்று பாவணியும் கூறியிருக்கிறார். அப்படி என்றால் அண்ணாச்சி அங்க ஒரு டப்பால காரம் என்று எழுதி வைத்திருக்கிறார் அதை போய் சாப்பிடுறியா என்று இவர் கேட்கும் போது பவானி சிரிக்கும் சிரிப்பை பார்த்ததும் ரசிகர்களின் மனதில் சந்தோஷம் பூத்துக் குலுங்குகிறது.

இதுதான் பிரியங்கா
அழுதுகொண்டிருந்த பாவணி ரெட்டியை சிரிக்க வைத்த பிரியங்காவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ப்ரோமோ வெளியான ஒரு சில நிமிடங்களுக்குள் மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் கவிஞர்களாக மாறி பாவணி ரெட்டி, பிரியங்கா இருவருக்கும் கவிதைகளை பொழிந்து வருகிறார்கள். என்னதான் அழுதுகொண்டிருந்தாளும் டக்கென்று சிரிக்க வைக்கும் திறமை பிரியங்காவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்று பிரியங்காவின் ரசிகர்களும் ஆர்ப்பரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications