பட்டிமன்றத்தில் பட்டைய கிளப்பிய அண்ணாச்சி, பிரியங்கா...அவார்டு என்னவோ மாறிப்போச்சு
சென்னை: பட்டிக்காடா?? பட்டணமா??என்னும் பட்டிமன்றத்தில் பட்டணத்தின் சார்பில் பட்டைய கிளப்பி இருக்கிறார்கள் அண்ணாச்சியும், பிரியங்காவும்.
எதிரணியினர் இவர்களை செலைட் பண்ணியிருந்தாலும், சொந்த அணியினர் பட்டத்தை மாற்றி கொடுத்து விட்டார்கள்.
தன்னுடைய எதார்த்தமான பேச்சால் பட்டிக்காட்டு அணியினரை மடக்கிய அண்ணாச்சிக்கும், பிரியங்காவுக்கும் பட்டத்தை கொடுக்கவில்லையே என ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

காயின் டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லா சீசனிலும் ஒவ்வொரு டாஸ்க் என்கிற பெயரில் பிக்பாஸ் ஒருவழியாக கொளுத்தி போட்டுத்தான் கொண்டிருக்கும். இதில் சில நேரங்களில் பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிந்து விடுகிறது. ஆனால் மற்ற சில நேரங்களில் அது புஸ் என்று போய் விடுவது போலவும் இருக்கும். ஆனால் இந்த சீசனில் தற்போது வைத்திருக்கும் காயின் டாஸ்க் வேற லெவலில் போட்டியாளர்களுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது. இதை பார்த்து ரசிகர்களுக்கும் விறுவிறுப்பு கூடி இருக்கிறது.

அணியின் பெருமை
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு அணியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் பாதிப்பேர் பட்டிக்காட்டு அணியினராகவும், பட்டணத்து அணியினராகவும் மாறி இருக்கின்றனர். அதில் போட்டியாளர்கள் தங்களுடைய அணிக்கு தகுந்தது போல தான் உடை அலங்காரத்திலும், பேச்சுக்களிலும் பேசி வருகின்றனர். இதில் தற்போது ஒரு பட்டிமன்றம் நடத்தி போட்டியாளர்கள் தங்களுடைய அணியின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

நடுவரான இசைவாணி
இந்த இரு அணிகளுக்கும் நடுவராக இருக்கும் இசைவாணி பிக் பாஸ் கொடுத்த தலைப்புகளில் பேச்சை தொடங்கவும், அதற்கு தகுந்த போல இரு அணியினரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் பட்டிக்காட்டு சார்பாக ராஜூவும், தாமரை செல்வியும் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல இவர்களின் பேச்சை திசைதிருப்பி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு இருந்தது பட்டணத்து அணியிலிருந்து பிரியங்காவும், அண்ணாச்சியும் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் வருத்தம்
இவர்கள் இருவரின் பேச்சினாலும் நிகழ்ச்சிக்கு சுவாரசியமாகவும் சிறுசிறு சலசலப்பு களையும் ஏற்படுத்தி இருந்தது. என்னதான் இவர்கள் டாஸ்க் சிறப்பாக முடித்து இருந்தாலும், இறுதியில் இந்த அணியில் இரண்டு அணியிலும் சிறப்பாக செயல்பட்ட இரண்டு போட்டியாளர்கள் யாரென்று பிக்பாஸ் கேட்டதற்கு போட்டியாளர்கள் அனைவரும் பட்டணத்திலிருந்து சிபியை தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அப்படி ஒன்றும் பெரியதாக செய்யவில்லையே, சுவாரசியமாக நிகழ்ச்சியை கொண்டுபோனது பட்டணத்தில் அண்ணாச்சியும், பிரியங்காவும் தான். ஆனால் இப்படி செய்து விட்டார்களே என்று கூறி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications