முதலில் உங்கள் லெவல் பாருங்கள் அதுக்குப்பிறகு குறை கூறலாம்...அமீருக்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஒரு சில நாட்களில் நெட்டிசன்களின் கமெண்டுகளில் அகப்பட்டுள்ளார் அமீர்.
இதுதான் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவதா என்று பலர் அமீருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
முதல் வாரத்தில் ஜெயிலில் உட்கார்ந்தபடி கதை பேசிய அமீருக்கு நெகட்டிவ் கமெண்டுகள் பறந்து வருகிறது.

இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் காண்டு அடைய செய்து விடும். அந்த மாதிரி தான் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு சில நாட்களில் அமீர் செய்யும் செயல்கள் ஒரு சில ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறதாம். இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஒரு நடன மாஸ்டர் நிகழ்ச்சிக்குள் வந்ததும் இவரால் நிகழ்ச்சி சூடு பிடிக்குமா என்று பலர் எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர்.

முதல்நாளே கிடைத்த ஆசிரியர் பணி
அதுமட்டுமல்லாமல் இவர் சாண்டி மாஸ்டர் போன்று நிகழ்ச்சிக்கு சுவாரசியமும், கலகலப்பும் கூட்டுவாரா என்று பலர் இவர் மீது எதிர்பார்ப்புகளை வைத்திருந்த நேரத்தில், இவர் வந்த நாளே கனா காணும் காலங்கள் டாஸ்க் தொடங்கிவிட்டதால் நிகழ்ச்சியில் ஒரு ஆசிரியராக இவருக்கு கொடுத்த பணியை செய்து கொண்டிருந்தார். ஆனால் எந்த ஒரு சுவாரஸ்யம் காட்டவில்லை என்று பலர் இவர் மீது குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ஐக்கி வைத்த பட்ட பெயர்
டான்ஸை தவிர உருப்படியாக எதுவும் செய்யவில்லையே என்று இவர் மீது ரசிகர்கள் ஒரு பக்கம் குறை கூறிக் கொண்டிருக்கும் போது இவருக்கு பேச தெரியுமா?? தெரியாதா?? என்று சக போட்டியாளர்களும் இவரை கலாய்த்து தள்ளிக் கொண்டிருந்தனர். அதுவும் வந்த முதல்நாளே ஐக்கி இவரை சிடுமூஞ்சி என்று அழைக்க தொடங்கி விட்டார். அவர் மட்டுமல்லாமல் பிரியங்காவை தவிர அனைத்து போட்டியாளர்களும் இவருக்கு சிரிக்கவே தெரியாதா?? எப்போதும் உம்மென்று இருக்கிறாரே என்று விதவிதமாக குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.

நெட்டிசன்களின் அறிவுரை
வந்த முதல் வாரத்தில் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்யவில்லை என்று இவர் பாதாள சிறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அந்த நிலையில் இவர் தாமரை செல்வியை பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறி இருக்கிறார். இதை பார்த்ததும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் இவருக்கு எதிராக கமெண்ட்களை அனுப்பி வருகின்றனர். இவர் ஒரு புது போட்டியாளராக இருந்தாலும் வந்த ஒரு சில நாள்களில் கூட எந்த சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தாமல் இருந்துவிட்டு, அடுத்தவர்களை குறை கூறுவது தவறு என்று இவருக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications