Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை சுகன்யா காட்டிய கறார்! இதான் அந்த சீன்? அதுவிடுங்க, உடம்பெல்லாம் நகைகள்? பிரபலம் சொல்றது நிஜமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் 1 படத்தில், ஒரு குறிப்பிட்ட காட்சி குறித்து நடிகை சுகன்யா கேள்வி எழுப்பியதாகவும், அதுகுறித்த பிரச்சனை தயாரிப்பாளர் யூனியன் வரை சென்றதாகவும், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் , பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தந்த பேட்டியில், "ஆரமபத்தில் சுகன்யா சில படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னார்.. இந்தியன் 1-ல் சில குறிப்பிட்ட காட்சியிலும் நடக்க மாட்டேன்னு சொன்னார்.. அதேபோல, மகாநதி படத்தில் லிப்லாக் சீனில் நடிக்க மாட்டேன் என்று சொன்னார். ஆனால், நடிகைகள் வாக்குறுதியையும், அரசியல்வாதிகளின் வாக்குறுதியையும் ஓடற தண்ணியில்தான் எழுதி வைக்கணும்.

actress sukanya gold jewellery

ஆர்த்தி தேவி என்பதுதான் சுகன்யாவின் சொந்த பெயர்.. புதுநெல்லு புது நாத்து படத்தில் சுகன்யா என்று பாரதிராஜா பெயர் மாற்றினார்.. இவர் கலாச்சேத்ரா மாணவி.. அரங்கேற்றமும் செய்துள்ளார். ஏதோவொரு நடன நிகழ்ச்சியில், சுகன்யவை பார்த்துவிட்டு, தன்னுடைய படத்துக்கு தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா.

சிறந்த படங்கள்: புதுநெல்லு புது நாத்து படத்தில் கிராமத்து கேரக்டர் என்பதால், சிட்டியில் வளர்ந்த சுகன்யாவை கிராமங்களுக்கே அழைத்து சென்று, அவர்களின் வாழ்வியல், பேச்சு, பழக்கவழக்கங்களை சொல்லி தந்தார். இதற்கு பிறகு, சின்னகவுண்டர், வால்டர் வெற்றிவேல் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது.

சின்னகவுண்டர் படத்தில் நடிக்கும்போது, "நாம கட்டிப்பிடித்து நடித்தால் மட்டும், இந்த நடிகைகள் நகர்ந்து போகிறார்களே" என்று விஜயகாந்த் தரப்பில் சொன்னதாக, நாங்கள் அப்போது கேள்விப்பட்டோம். ஆனால், அது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை.

தங்க வியாபாரி: அதேபோல, சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தங்க வியாபாரி ஒருவர், உடையில்லாமல தங்கத்தை மட்டும் அணிந்து டான்ஸ் ஆட வேண்டும், இதற்காக பல லட்சங்களை தருவதாகவும் சொன்னாராம். ஆனால் இவர் டான்ஸ் ஆடினாரா? இந்த தகவலும் உண்மையா என்று தெரியவில்லை. இதெல்லாம் அந்த காலத்தில் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்த கிசுகிசுக்கள்.

எனினும் சில தங்க வியாபாரிகள் அப்படி இருப்பதுண்டு. அதேபோல, ஒரு அமைச்சருடன் சுகன்யாவின் பெயர் பலமாக அடிபட்டது. அதனை பொய்யென்றும் சுகன்யா மறுக்கவில்லை. அதற்கு விளக்கமும் இதுவரை தரவில்லை.

வெள்ளையர்கள்: ஆனால், எந்த காலத்திலும் கிளாமராக சுகன்யா நடித்ததில்லை.. அப்படி நடிக்கவும் அவர் விரும்பவில்லை.. இந்தியன் 1 படத்தில், வெள்ளைக்காரர்கள் சுகன்யா உடுத்தியிருந்த ஆடைகளை பிடுங்கி நெருப்பிலிட்டு எரித்துவிடுவார்கள். இந்த சீன் எடுத்து முடித்தாகிவிட்டது.

அதற்கு பிறகு, நிர்வாணமாக நகர்ந்து போகும்படியான சீன் ஒன்று ஒரு டூப்பை வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த விஷயம் கேள்விப்பட்ட சுகன்யா கோபப்பட்டார்.. நிர்வாணமாக நடந்து செல்லும் டூப் காட்சியின் ஃபிலிம்மை தனக்கு தர வேண்டும், இல்லாவிட்டால் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று தகராறு செய்தார்.

சமாதானம்: இதனால், அந்த படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் சங்கர் என அனைவரும் தயாரிப்பாளர், டைரக்டர் யூனியன் வரை விவகாரத்தை கொண்டு சென்றார்கள். இறுதியில், தயாரிப்பாளர் கேயார்தான் இதற்கு சுமூக முடிவு எடுத்து, சுகன்யாவை சமாதானம் செய்தார். எந்தவிதமான கெட் பெயரும் வராமல் அந்த சீன் இடம்பெறும் என்று சுகன்யாவுக்கு உறுதி தந்தார். அதற்குபிறகே அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது" என்றெல்லாம் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் சபிதா ஜோசப்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+