பேசிட்டிருக்கும்போதே வாயடைத்து நின்ற யூகி சேது.. கமல் சாப்பிட்ட "விருந்து" கவனிச்சீங்களா: ThugLife

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் புரோமோசன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கமல்ஹாசன், சிம்பு மற்றும் த்ரிஷா நடித்துள்ள படம் தக்லைப் சேனல்களுக்கு பேட்டி தந்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு பேட்டி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

நடிகர், டைரக்டர், எழுத்தாளர், டிவி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் யூகி சேது. யூகி சேது திரைக்கதையில் பி.ஹெச்.டி படிப்பு மேற்கொண்டவர். திரைப்படங்களின் வெற்றியை திரைக்கதை எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதில் ஆராய்ச்சி பட்டம் பெற்றிருக்கிறார்..

Television KamalHassan Yugi Sethu

யூகி சேது திறமை

இவர் ரமணா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்தாலும், கமலஹாசனின் படங்களான பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.. இதற்கு மற்றொரு காரணம், கமல்ஹாசனுக்கும், இவருக்கும் இடையே பல வருட கால நட்பு உண்டு...

பல வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவியில், கமல்ஹாசன் தலைமையில் பட்டிமன்றம் ஒன்று நடந்தது.. அப்போது பங்கேற்று பேசியிருந்த யூகி சேது, "கமல் என்பவரை பற்றி இந்தியா-டுடே என்ற பத்திரிகையில் 6 பக்கத்துக்கு ஆய்வு கட்டுரை எழுதியிருக்கிறேன்.. குறிப்பாக, உலக நாயகன் என்ற பெயர் கமலுக்கு எப்படி வந்தது? பல உலக சாதனைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறார் என்பதே அதற்கு காரணம்.

உலக வரலாற்றில் கமல்

5 வயதில் 50 தாண்டி, உலகத்திலேயே, உலக மனித வரலாற்றிலேயே, இன்றுவரை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரே நபர் கமல்ஹாசன்தான்.. 9ம் வகுப்பை முடிக்காமல், டாக்டர் பட்டம் வாங்கின ஒரே நடிகர் கமல்ஹாசன்தான்.. 5 மொழிகளில் நடித்து, 5 மொழிகளிலும் சில்வர் ஜூப்ளி கொடுத்த ஒரே நடிகர் கமல்ஹாசன்தான்..

ஆய கலை 64ம் தெரிந்த மகா கலைஞன் கமல்ஹாசன் மட்டுமே" என்றெல்லாம் சிலாகித்து பேசியிருந்தார். அந்த அளவுக்கு கமல் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருக்கும் நண்பர்.

இந்நிலையில், indiaglitz என்ற யூடியூப் சேனலில், தக்லைப் பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், யூகி சேதுவுடன், கமல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துரையாடினார்கள்.. தன்னை உலகநாயகன் என அழைக்க வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தக்லைப் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விண்வெளி நாயகன் என்ற பட்டம் தரப்பட்டது. இந்த பட்டம் குறித்து யூகி சேது சில சந்தேகங்களை கமலிடம் எழுப்பினார்..

சாதனை சினிமா

கமல்ஹாசன் எல்லாவற்றையும் சாதித்துவிட்டார், இனிமேல் சினிமாவில் சாதிப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டால், "இன்னும் இருக்கிறது என்பதைகூட நீங்கள் சொன்னால்தான் உண்டு.. அதுபோல் தக்லைப்பிலும் ஏதோ செய்துள்ளீர்களே" என்று கேட்டார்.

அதற்கு கமல், "விருந்து முடிஞ்சதுக்கப்புறம் நல்லா சாப்பிட்டாச்சு என்று திருப்திப்பட்டுக் கொள்வோம். ஆனாலும் அடுத்த வேளை பசிக்குமே? இதை சம்பளத்துக்காக சொல்லவில்லை, அப்ளாசுக்காக சொல்கிறேன்.. அப்ளாஸ் கேட்காவிட்டால், நான் ஏதோ தப்பு செய்துட்டேனோ என்று தோன்றும்" என்றார் கமல்.

நாயகனை முந்துமா

தக்லைப் படம் நாயகனை முந்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், "நாயகன் படத்தில் பார்த்த நடிகன் நான் கிடையாது. அந்த படத்தில் டைரக்டரும் இவர் இல்லை.. இன்று அதிக நம்பிக்கையுடன் முன்னேறி வந்துள்ளோம்.. 37 வருடம் மணிரத்னத்துடன் ஏன் இடைவெளி என்று பலரும் கேட்கிறார்கள்.. இதற்கு காரணம் சொல்ல முடியாது" என்றார்..

தொடர்ந்து குறைவான படங்களில் நடிப்பது குறித்து கமல் பேசும்போது, "சுமைகூலி முக்கால் பணம், சுண்டைக்காய் 1 பணமாகவும் இன்று சினிமா ஆகிவிட்டது. இன்றைய சூழலில், திருப்பி திருப்பி ஒரே மாதிரியான விஷயத்தை சொலகிறார்களோ? வித்தியாசமாக செய்வதாக நினைத்து கூட்டம் மட்டும் அதிகமாக இருக்கிறதோ என்று தெரிகிறது.. அன்று ஒரு சீனை எடுக்க மண்டையை குடைத்து கொண்டோம். இன்று ரிகர்சல் பரவலாக குறைந்துவிட்டது. பதட்டத்துடன் யாருமே செட்டுக்கு வருவதில்லை" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+