மீடியாவை விட்டு விலகுகிறேன்! சென்னைக்கு டாட்டா.. கேப்ரில்லா திடீர் முடிவு.. காரணம் இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கும் கேப்ரில்லா தான் சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகப் போகிறேன் என்று திடீர் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
திறமையும் உழைப்பும் இருந்தால் அதற்கு ஏற்ற பலன் ஒருநாள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் நடிகை கேப்ரில்லா இருக்கிறார். இவர் விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அங்கு இவருடைய திறமை பெரியதாக மதிக்கப்படவில்லை. பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால் தன்னுடைய நடிப்பு மற்றும் உழைப்பின் மீது நம்பிக்கையோடு இருந்த கேப்ரில்லாவிற்கு சன் டிவியில் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பு instagram டிக் டாக் போன்றவற்றில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதிலும் டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் இவர் கதை படிப்போமா என்று போடும் வீடியோக்கள் இணையத்தில் பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுத்தது.
கதாநாயகி என்றால் கலராக இருந்தால்தான் அதை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மாயை பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் மனதில் இருந்து வரும் நிலையில் அதை கேப்ரில்லா மற்றும் சுந்தரி சீரியல் குழுவினர் உடைத்து விட்டனர். சுந்தரி சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்கள் அழகை விரும்புவதை விடவும் கதை மற்றும் நடிப்பை தான் விரும்புகிறார்கள் என்று பலருக்கும் புரிந்து இருக்கும்.

சுந்தரி சீரியலில் கதாநாயகியாக கேப்ரில்லா நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சொந்தமாக நடிப்பு பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்கியிருந்தார். அதில் தன்னை போல நடிக்க வேண்டும் என்ற கனவோடு வரும் பலருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், நன்றி "சென்னை" மீண்டும் அன்போடு பிறகு சந்திக்கிறேன்.. break for media journey.. என்று பதிவிட்டு இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்புதான் அவர் கர்ப்பமாக இருப்பது அறிவித்து இருந்தார்.

இதனால் இவர் சினிமாவை விட்டு விலகி இருக்கிறாரா? என்றும் கேள்விகள் எழும்பி வருகிறது. ஏற்கனவே சுந்தரி சீரியல் இறுதி நாள் சூட்டிங் முடிந்து விட்டது. இதனால் சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி தன்னுடைய கர்ப்ப காலத்தை என்ஜாய் பண்ண போகிறார் என்று தெரிகிறது. அவருக்கு நம்முடைய வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications