சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா”.. இதுதான் காரணமா? இவருக்கு பதில் இனி இவர்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் கோமதி பிரியா மலையாளத்தில் "செம்பனீர் பூவே" என்ற சீரியலில் நடித்து வந்தார். திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதற்கான காரணம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.

பொதுவாக தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் பிறமொழி நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. ஒரு சில தமிழ் நடிகைகளுக்கு மட்டும்தான் தமிழில் நல்ல வரவேற்பும் பெயரும் புகழும் கிடைக்கிறது.. அதில் ஒருவர் தான் கோமதி பிரியா. இவர் ஆரம்பத்தில் ஓவியா என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகியிருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் தான்.

television siragadikka aasai serial vijay tv

இந்த சீரியலில் மீனா கேரக்டரில் கோமதி பிரியா நடித்து வருகிறார். இவரை அதிகமான ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண் போல பார்த்து வருகிறார்கள். சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் கிடைத்த புகழ் காரணமாகவே இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதிலும் சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீமேக்கில் இவர்தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார்.

தமிழில் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் மலையாளத்தில் "செம்பனீர் பூவே" என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் மலையாளத்தில் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. எந்த சீரியலும் தொட முடியாத உச்சத்தை இந்த சீரியல் தொட்டிருக்கிறது. இதில் கதாநாயகியாக ரேவதி கேரக்டரில் கோமதி பிரியா நடித்துக் கொண்டிருந்தார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கோமதி பிரியா பகிர்ந்து வருகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அவரை பார்க்கும் போது பலர் இவர் கேரளா பெண் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் இவர் பக்காவான தமிழ்ப்பெண் தான். அதுவும் மதுரையை சார்ந்த கிராமத்து பெண் தான். மதுரையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த கோமதி பிரியா சென்னையில் படிப்பிற்காக பல போராட்டங்களை தாண்டி வந்து படிக்கும்போது வேலை செய்ய வேண்டும் என்று விஜய் டிவியில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் ஆடியன்ஸ் ஆக கலந்து கொண்டு இன்று விஜய் டிவி பிரபலமாக மாறி இருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

ஆனால் இவர் மலையாள சீரியலில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கோமதி பிரியா ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.. தமிழில் எப்படி மீனாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுபோல மலையாளத்தில் ரேவதிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் கோமதி பிரியாவின் இந்த முடிவு வேண்டாம் என்று பல கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறி இருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதே நேரத்தில் கோமதி பிரியாவிற்காக பதிலாக ரெபேக்கா என்ற நடிகை அந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி விட்டார். அவர் நடித்த எபிசோடு வெளியாகி விட்டது. ஆனால் கோமதி பிரியா எதற்காக விலகினார் என்று கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கிறது. இதுகுறித்து கோமதி பிரியா விளக்கமான வீடியோ ஒன்றும் கொடுக்கவில்லை என்றாலும் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதில், உங்கள் வாழ்க்கையை அழிக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்காதீர்கள். ஆம், அவர்கள் உங்களை காயப்படுத்தலாம் ஆனால் அதை நீங்கள் அனுமதிக்காத வரை அவர்களால் உங்களை அழிக்க முடியாது. நீங்கள் வென்று அனைத்தையும் நீங்கள் ஒரு போராளியாக பார்க்கிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கையை எப்போதுமே விட்டு விடாதீர்கள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தான் தேவசேனா கெட்டப் போட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து போஸ்ட் போட்டிருக்கிறார்.

அதோடு கோமதி பிரியா இப்போது பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் மலையாளத்தில் இரண்டு நாள் சூட்டிங் விடுமுறை கேட்டதாகவும் அதற்கு முடியாது என்று சீரியல் தரப்பினர் வேறு நடிகையை நடிக்க வைத்ததாகவும் செய்திகள் பரவி வருகிறது. அதுபோல கோமதி ப்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் செல்ப் ரெஸ்பெக்ட் முக்கியம் என்று ஹேஸ் டேக் வைத்திருப்பதால் இவருக்கும் மணிமேகலை போல சீரியல் தரப்பில் ஏதாவது அவமானம் நடந்திருக்குமோ அதனால் தான் இவர் இந்த முடிவு எடுத்திருப்பாரா? என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது. ஆனால் இது குறித்து பிரியா வீடியோ விரைவில் வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+