"இங்க பாரு நந்தினி ஏய்! உன் கண்ல உண்மை இல்லம்மா!" மாரிமுத்து பேசிய கடைசி டயலாக்! ஹரிபிரியா உருக்கம்
சென்னை: யம்மா நந்தினி.. இதுதான் மாரிமுத்துவுடன் கடைசி காட்சி என மிகவும் உருக்கமான ஒரு வீடியோவை எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிபிரியா பகிர்ந்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்.. இனி இதை எப்படித்தான் பார்ப்பது என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. காரணம் மாரிமுத்து.. அவர் இல்லாத இந்த சீரியல் எப்படி இருக்கும் என கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

கடந்த 8ஆம் தேதி வழக்கம் போல் டப்பிங் ஸ்டூடியோவுக்கு சென்றார் நடிகர் மாரிமுத்து. இவருக்கு திடீரென வியர்த்து விறுவிறுத்தது, உடனே காற்றாட வெளியே வந்தார். ஆனாலும் அவரால் முடியவில்லை. உடலில் நிறைய மாற்றங்கள், நெஞ்சோரம் வலி உள்ளிட்டவைகளால் சாலையில் தீவிர யோசனைக்கு பிறகு காரை தானே ஓட்டிக் கொண்டு புறப்பட்டார்.
சாலிகிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற மாரிமுத்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அன்றைய தினமே அவருடைய உடல் தேனி மாவட்டத்தில் பசுமலைத்தேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் நடந்தது.
தற்போது மாரிமுத்து இறந்ததுமே அடுத்த நாளே அவருக்கு பதில் யாரோ டப்பிங் பேசியதால் ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்றுடன் மாரிமுத்து வந்த காட்சிகளும் முடிந்துவிட்டது. இன்றைய ப்ரோமோவில் மாரிமுத்துவின் காட்சிகள் இல்லை. மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் அவரை விட வேறு யாராலும் சிறப்பாக நடித்து விட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் காலத்தின் கட்டாயம் அந்த கேரக்டருக்கு வேறு ஒருவரை நடிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இனியும் இந்தாம்மா ஏய் கேட்கவே கேட்காது, அப்படியே கேட்டாலும் அதில் போலித்தனம்தான் இருக்கும். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தில் இந்த சீரியல் இருந்ததற்கு காரணமே மாரிமுத்துவின் யதார்த்தமான நடிப்பும், வசனமும்தான்.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுடன் நடித்த நடிகர்கள் அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலையில் உருக்கமான பதிவுகளை போட்டு வருகிறார்கள். அந்த வகையில் அவருடன் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் நடிகை ஹரிபிரியா தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஹரிபிரியா " நந்தினி வில் மிஸ் யூ லைக் ஹெல்" மாமா என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவுடன் ஹரிப்பிரியா நடித்த கடைசி காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவருடனான கடைசி காட்சி.. கடைசியாக அவரிடமிருந்து யம்மா நந்தினி என குரல் கேட்டது, மிகவும் கனத்த இதயத்துடன் குட் பை என உருக்கமான பதிவை போட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications