பெண் Manipulation இப்போது sugar daddy வரை வந்துவிட்டதா? விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதை சர்ச்சை
சென்னை: சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் மக்கள் எப்படி காதலை பார்க்க வேண்டும்? திருமணத்தை எப்படி செய்ய வேண்டும்? உறவு எப்படி எடுக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லிக் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக பெண்களின் காதல், திருமணம், ஆசைகள் போன்றவற்றை சினிமா தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கோணத்திலேயே காட்டி வருகிறது என்று விமர்சனம் இருக்கிறது. அந்த வரிசையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதையும் அதிகமான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக சினிமாக்களில் 80ஸ் காலகட்ட சினிமாவை எடுத்துக் கொண்டால் பணக்கார குடும்பத்தை சேர்ந்த கதாநாயகி வசதி இல்லாத ஹீரோவை காதலிப்பது ஒரு பொதுவான கதை வடிவமாக இருந்தது. அதில் ஏழ்மை குடும்பத்தில் வாழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சி, பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை முழுமையாகி ஆகிவிடாது என்றெல்லாம் சொல்லப்பட்டது.
பல படங்களில் பெண்களின் வாழ்க்கை தேர்வு என்பது அவள் விரும்பிய ஆணை அடைவதில் முடிந்து விடுவது போல காட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த கதை கொஞ்சம் மாறியது 90களில் தான். அந்த காலகட்டத்தில் புதிய பேட்டன் தொடங்கியது படித்து பெண் வேலைக்கு செல்லும் பெண், தைரியமாக தன்னுடைய கருத்தை சொல்லும் பெண் என்றால் திமிரு பிடித்தவள் ஆண்களை மதிக்க தெரியாதவள், குடும்பத்தை நடக்க தெரியாதவள் என்ற பிம்பம் பல படங்களில் உருவாக்கப்பட்டது.
அதே நேரத்தில் கதாநாயகன் எவ்வளவு முரட்டுத்தனமாக இருந்தாலும் இறுதியில் அந்த பெண் அவனை புரிந்து கொண்டு அவனிடம் அடங்கி வாழ்வதே நல்ல முடிவு என்ற கருத்தும் பல படங்களில் காட்டப்பட்டது. பெண்களின் சுயசார்பு ஒரு குறையாகவும், ஆண் ஆதிக்கம் ஒரு குணமாகவும் காட்டப்பட்ட தருணம் அப்போது அதிகம். அதற்கு பிறகு 2000 கால கட்டத்தில் இன்னொரு மாற்றம் வந்தது. பள்ளி கல்லூரிகளில் படிக்கும் கதாநாயகி நன்றாக படிப்பாள் எதிர்காலம் குறித்து கனவுகளுடன் இருப்பார்கள் ஆனால் அவள் காதலிப்பது படிப்பில் ஆர்வம் இல்லாத வேலை இல்லாத, பொறுப்பில்லாமல் சுற்றிப் திரியும் ஹீரோவை அதிலும் அந்த ஹீரோவின் கெத்து நண்பர்கள் ரவுடித்தனம், அலட்சியம் ஆகியவை காதலுக்கு தகுதியான குணமாக காட்டப்பட்டன.
நல்லபடியாக வாழ்க்கையில் முன்னேறு என்று சொல்ல வேண்டிய கதாநாயகி எனக்கு இந்த பையன் தான் பிடிக்கும் என்ற நிலைக்கு கொண்டுவரப்பட்டாள். பிறகு 2010 களில் டாக்ஸிக் லவ்க்கு காதல் என்ற பெயர் வந்தது. இதன் பிறகு வந்த காலகட்டம் தான் இன்னும் ஆபத்தானது. தாடி, ஒழுங்கற்ற தலைமுடி, போதைப்பொருள் பழக்கம், ஆபாச வார்த்தைகள், கோபம், பெண்ணை கட்டுப்படுத்துவது இவை எல்லாமே சேர்ந்து ஒரு மாஸ் ஹீரோ கேரக்டராக மாற்றப்பட்டது.

மாறும் காலம்
அந்த ஹீரோ கதாநாயகியை அவமானப்படுத்தினாலும், காயப்படுத்தினாலும், கட்டாயப்படுத்தினாலும் அவன் அப்படித்தான் ஆனால் அவள் உண்மையாக காதலிக்கிறான் என்ற வசனங்களுடன் அந்த உறவு காதலாக மாற்றப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக பருத்தி வீரன் படத்தை கூட சொல்லலாம். ஒரு பெண் தன்னை காயப்படுத்தும் உறவிலிருந்து வெளியேறுவது தான் ஆரோக்கியமான முடிவு என்பதற்கு பதிலாக அவனை மாற்றுவது தான் அவளுடைய காதலின் வெற்றி என்ற கருத்தும் சில படங்களில் மையப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்போது அதற்கும் அப்லோடு வெர்சனாக சுகர் டாடி லவ் என்ற ஒரு கதையைத் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் தற்போது சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் கதை தான் அதிகமான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கதையில் காக ஹீரோவுக்கு 50 வயதுக்கு மேலே ஆகிவிட்டது அவரை 25 வயது ஹீரோயினி விரட்டி விரட்டி காதல் செய்கிறார். வயது வித்தியாசம் கொண்ட உறவுகள் திருமணத்திற்கு வெளியிலான காதல், கள்ளக்காதல் பல்வேறு வகையான உறவுகள் போன்றவை கதைகளில் பேசப்படும் தவறு என்று சொல்ல முடியாது.

சினிமாவில் பெண்களின் கேரக்டர்
ஒரு உறவில் இருக்கும் அதிகார வேறுபாடு, வயது வித்தியாசம், படத்தின் தாக்கம், மனரீதியான சார்பு என பல விஷயங்களையும் அழகான காதல் என வேறு விதமாக காட்டப்படுவது சரியா? என்ற விவாதம் எழுந்திருக்கிறது. குறிப்பாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் கதாநாயகி தன்னைவிட பல வயது மூத்த தந்தை வயது ஒத்த ஆண் மீது காதல் கொள்வது போன்ற கதை கலாம் இங்கே இடம் பெற்றிருக்கிறது. இது ஒரு கதையாக இருப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் அந்த உறவை சுற்றி பல கேள்விகள் எழுந்து வருகிறது.
முகத்துக்கு நேராக அந்த அமைச்சர் சொன்ன வார்த்தை! அதற்கு பிறகு நான் மாறிவிட்டேன்.. நடிகர் சூர்யா உருக்கம்
வயது வித்தியாசம் ஏற்படுத்தும் பவர் இன் பேலன்ஸ், பணம் மட்டும் வாழ்க்கை அனுபவத்தில் இருக்கும் வித்தியாசம் என்ன? இளம் பெண்ணின் மனநிலை எதிர்காலம்? அவளுடைய முடிவு எடுக்கும் திறன் ஆகியவை எப்படி பாதிக்கப்படலாம். அவள் யாரை காதலிக்க வேண்டும் என்பதில் அவள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டால் அது ஒரு சிக்கலான உறவை எளிமைப்படுத்தி விடுகிறதா என்பதுதான் விமர்சனத்தின் மையம்.
விஸ்வநாத் & சன்ஸ் பற்றிய விமர்சனம்
வெளிநாடுகளில் இருக்கும் சுகர் டாடி கலாச்சாரத்தை காதலாக மாற்றுகிறோமா? சுகர் தேடி என்ற கருத்து உலகில் சில பகுதிகளில் சமூக விவாதத்திற்குரிய உறவு வடிவமாக உள்ளது. வயதில் மூத்த வசதி படைத்த ஒருவர் இளம்பெண்ணுக்கு பணம், பரிசுகள், வசதிகள் போன்றவை காதல் குறித்த பார்வையை பாதித்திருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

ஒரு கட்டத்தில் பெண் ஆணையை துரத்தி துரத்தி காதலிப்பது கதையாக இருந்தது. பிறகு பெண் ஆணிடம் அடங்குவது நல்ல குணமாக மாறியது. அதற்குப் பிறகு ஒரு தற்குறித்தனமான ஆணை ஆதரிப்பது கெத்தாக காட்டப்பட்டது. அது போல இப்போது தன்னுடைய அப்பா வயதில் இருக்கும் ஆணை பெண் காதலிப்பது, அவருக்காக குடும்பத்திற்காக தன்மானத்தை விட்டு கெஞ்சுவது தான் காதல் என்று காட்டப்படுகிறதா? என்பதுதான் இப்போதைய விவாதம்.
ஆண்களின் கேள்வி
இதை பார்க்கும் சிலர் பெண்களை இன்னும் எத்தனை காலத்திற்கு தான் சினிமாவில் காதல் என்ற பெயரில் இப்படி Manipulation செய்யப் போறீங்க? என்று கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு சில ஆண்களும் சப்போர்ட் கொடுத்தாலும், சில ஆண்கள் அப்படி பார்த்தால் ஆண்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்கள் என்பது போலத்தான் சினிமாவில் சில விஷயங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் அது என்ன உண்மையா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
