அடடா! கமல் வழியிலேயே அவருக்கு வாழ்த்து கூறிய நடிகை வினோதினி.. கடைசியில் அந்த அன்பே சிவம்..வேற லெவல்
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் 68வது பிறந்த நாளை தற்போது எளிமையாக கொண்டாடி மகிழ்ந்து இருந்தார். அவருடைய பிறந்தநாளுக்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பல தரப்பட்ட நபர்களும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
கமல்ஹாசன் பிறந்த நாளிற்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில் அவருடன் இதுவரைக்கும் நடிக்காத நடிகை வினோதினி தன்னுடைய பதிவை வித்தியாசமாக வெளியிட்டு இருக்கிறார் .இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

என்றுமே உலக நாயகன்
வெள்ளி திரையில் பலரும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையால் உலகநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வந்தாலும் தொடர்ந்து இவர் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனில் இவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் இவருக்கு பதிலாக சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருந்தனர்.

வலைதளங்களை ஆக்கிரமித்த புகைப்படங்கள்
கமல்ஹாசன் 28 வது பிறந்த நாளை தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்திருந்தார். அரசியலில் கமல்ஹாசன் இருந்தாலும் அரசியலை தாண்டி இவருடைய நடிப்பை பிடித்துப்போன அரசியல் பிரபலங்கள் முதல் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனின் புகைப்படம் தான் அவருடைய பிறந்த நாளில் அதிகமாக வலம் வந்து கொண்டிருந்தது. அதிலும் பல பிரபலங்கள் கமல்ஹாசனோடு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களை கூறி வந்தனர். ரசிகர்கள் இதுவரைக்கும் கமல் மீது தங்களுக்கு இருக்கும் மரியாதையும் பாசத்தையும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும் ஸ்டோரிகளிலும் காண்பித்து வந்தனர்.

குதர்க்கமான வீடியோ
இந்த நிலையில் கமலோடு இதுவரைக்கும் நடிக்காத நடிகையான நடிகை வினோதினி வித்தியாசமாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். சில காலமாகவே இவர் சில தத்துவங்களை பலருக்கும் புரியாத, ஆழ்ந்து யோசித்தால் புரிகின்ற மாதிரி குதர்க்கமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதுபடி தான் தற்போதைய கமல் பற்றிய வீடியோவும் இருந்து வருகிறது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை குறித்து அவர் வித்தியாசமான ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போதைய கமல் பற்றிய பிறந்தநாள் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

எதிர்பார்க்காத வித்தியாசமான வாழ்த்து
அந்த வீடியோவில் இன்னைக்கு கமல் சாரோட பர்த்டே, எல்லோரும் அவரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்கள் கூறுகிறார்கள் .ஆனால் நான் இதுவரைக்கும் அவரோட ஒரு போட்டோ கூட எடுக்கலை. என்ன பண்ணலாம்... சரி வாழ்த்துவோம், ஆனால் வாழ்த்துவதற்கு வயசும் அனுபவமும் இல்லை .அதனால வணங்குவோம். ஆனா யார்கிட்ட வனங்குறது? நாமளும் அவரை போல கடவுள் இல்லைன்னு சொல்லல, நான் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்ற டைப். சரி அவரே ஒரு ஆழ்வார்பேட்டை ஆண்டவர், அவர்கிட்டயே வேண்டுகோள் வச்சிருவோம், கமல் சார் பீ ஹாப்பி ,ஹெல்த்தி இன்னைக்கு போல என்னைக்கும் நீங்க அதே கீர்த்தியோடும், புகழுடன் என்னைக்கும் இருக்கணும் என்று கூறுகிறார். அப்போது எதிர்பக்கத்தை பார்த்து என்னங்க இதெல்லாம் அவர் பார்ப்பாரா என்று கேட்கிறீர்களா? என பக்கத்தில் இருப்பவரிடம் கேள்வி கேட்பது போல கேட்டு ,நீங்க கடவுள்கிட்ட வேண்டுனா மட்டும் அவர அதை கேட்பார் என்று நினைத்தா நீங்க வேண்டுறீங்க ?ஏதோ ஒரு நம்பிக்கையில் தானே வாழ்றீங்க! நம்பிக்கைதான் தான் சார் வாழ்க்கை, அன்பே சிவம்..என்று முடித்திருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications