இளமை புதுமை ஸ்வர்ணமால்யாவா இது..? கடற்கரைக்கு போன இடத்தில் இப்படியா ஆகணும்..?
சென்னை: சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்வர்ணமால்யா பல வருடங்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் இந்திய பெருங்கடல் கடற்கரையில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்து இருக்கிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு இவரை பார்த்த ரசிகர்கள் இவரிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்வர்ணமால்யாவை பலருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியின் மூலமாகவே தெரிந்திருக்கும். இந்த நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கும் அழகை பார்ப்பதற்காக பல 90ஸ் கிட்ஸ்கள் டிவி முன்பே தவம் கிடந்த காலம் உண்டு. அதற்கு பிறகு கலக்கப்போவது யாரு பகுதி 2, குடும்ப திரை, நிம்மதி உங்கள் சாய்ஸ், அன்புள்ள சினேகிதி என பல டிவி சேனல்களில் மாறி மாறி புது புது நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டிருந்தார்.
சின்னதிரையில் மட்டுமல்லாமல் வெள்ளிதிறையிலும் இவர் ஒரு ரவுண்டு கலக்கி விட்டார். அதுவும் முதல் திரைப்படமான அலைபாயுதே திரைப்படம் யாராலும் மறக்க முடியாது. அந்த திரைப்படத்தில் ஒட்டுமொத்த நடிப்பையும் காட்டி காதலை கொண்டாட வைத்தது ஷாலினி மற்றும் மாதவனாக இருந்தாலும், அனைவருடைய அனுதாபத்தையும் அள்ளியது பூரணி கேரக்டரில் நடித்த ஸ்ர்ணமாலியா தான்.

ஸ்வர்ணமாலியாவும், ஷாலினியும் அந்த திரைப்படத்தில் அக்கா தங்கச்சியாக இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாக தான் இருந்து வருவார்கள்.அக்காவிடம் சொல்லாமல் ஷாலினி அக்காவிற்கு திருமணத்திற்கு முன்பே ரகசிய திருமணம் செய்து கொண்டது, அதற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறியது போன்ற சூழ்நிலைகளில் ஸ்வர்ணமால்யாவின் நடிப்பு வேற லெவல்.
அதைத்தொடர்ந்து எங்க அண்ணா திரைப்படமும் அதற்குப் பிறகு மொழி என்ற திரைப்படமும் வந்தது. அதுவும் மொழி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மீண்டும் ஒரு வெற்றி முத்திரைதான். தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த ஸ்வர்ணமால்யா கடைசியாக புலிவால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதற்குப் பிறகு எந்த திரைப்படங்களிலும் தற்போது நடிக்காமல் இருந்து வரும் நிலையில் ஒரு youtube சேனல் ஒன்று தொடங்கி அதில் தன்னுடைய அன்றாட நிகழ்வுகள் தனக்கு பிடித்தது, பிடிக்காதது என பல விஷயங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இவர் அடிக்கடி தான் வெளியே செல்லும் இடங்களில் தனக்கு கிடைக்கும் அனுபவங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த மாதிரி தான் தற்போது கூட இவர் கடற்கரையில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் இந்திய பெருங்கடலிலும், வெளித்தோற்றத்தில் அமைதியான வங்காள விரிகுடாவின் மடியிலும் நான் ஆழ்ந்த அனுபவத்தினை பெற்றிருக்கிறேன்.அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
இவருடைய புகைப்படங்களை பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த ரசிகர்கள் அன்றும் இன்றும் என்றும் நீங்க இளமை தான் என்று வர்ணித்து வருகிறார்கள்.இன்னும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் எப்போதும் பார்ப்பதற்கு ஜொலிப்பாக இருப்பிங்க ஆனா கடற்கரையில் கொஞ்சம் டல்லா ஆகிட்டீங்க என்னாச்சு? என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதற்கான விடை என்னுடைய youtube வீடியோவில் தருகிறேன் என்று ஸ்வர்ணமால்யா கூறி இருக்கிறார்.
-
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications