• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுத்தையை திருப்பித் திருப்பிப் போடுவது.. தசாவதாரத்தை தேயத் தேயப் போடுவது.. முடியலப்பா

|

சென்னை: வர வர ஞாயிற்றுக்கிழமை டிவி நிகழ்ச்சிகள் எல்லா டிவியிலயும் போராத்தான் இருக்குன்னு வியூவர்ஸ் அங்கலாய்க்கறாங்க.

பின்ன வாரத்துல அஞ்சு நாள் ஆறு நாள்னு சீரியல் பார்க்கறோம். அதே முகங்களையே வச்சு, ஏதாவது ஷோ பண்றோம்னு, கேம் ஷோ, டாக் ஷோன்னு வச்சு போரடிச்சுடறாங்கன்றது அவங்க பதிலா இருக்கு.

பாலிமர் டிவி ஞாயிற்று கிழமையானாலும் இடைவிடாமல் தினமும் டப்பிங் சீரியல்ஸ் ஒளிபரப்பி ஓரளவுக்கு பார்வையாளர்களைத் தக்க வச்சு இருக்கு. ராஜ் டிவி எதை பத்தியும் கவலைப்படாம உலகளாவிய தமிழர்களுக்கான கேபிள் டிவி மாதிரி... பாணியை மாத்திக்கலை.

வழக்கம் போல

வழக்கம் போல

விஜய் தொலைக்காட்சியில் அது-இது-எது, கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர்ஸ் இது போதாதுன்னு தனியா கலக்கப் போவது சாம்பியன்ஸ்னு காமெடி ஷோ... தொடந்து சிரிக்க வைக்கறோம்னு இரட்டை அர்த்த மொக்கை காமெடிகள். நிஜமா குழந்தைங்க என்ன பெரியவங்க கூட பார்க்க முடியலை.

விஜய் டிவி வெர்ஷன்

விஜய் டிவி வெர்ஷன்

வித்தியாசமா ட்ரை பண்றோம்னு முதலில் நிகழ்ச்சிகள் கொஞ்சம் நல்லாத்தான் இருந்தது. இப்போ சூப்பர் மாம் தவிர ஒண்ணும் இல்லை.ஆனா, ஓரு நிகழ்ச்சி பாருங்க, ஜீ தமிழ் சீரியலில் நடிக்கற அழகான பொண்ணுங்களை வச்சு ஜில்-ஜங்-ஜக் னு ஒரு ஷோ நடத்தறாங்க. இந்த ஷோவை மிட்நைட் ஷோவா ஒளிபரப்பினா வீட்ல இளசுகளுக்கு ஜில்-ஜங்-ஜக்தான். அவ்ளோ ஜிஜ்லிப்பாவா இருக்குங்கோ.

ஞாயிறு களம்

ஞாயிறு களம்

இதுல இரவு 9 மணிக்கு காமெடி நைட்ன்னு ஒரு நிகழ்ச்சி. பரவால்ல... பழைய நட்சத்திரங்கள், இயக்குநர்கள்னு அழைச்சு மலரும் நினைவுகளை கிளறி விட்டு, காமெடியும் செய்கிறார்கள். நடிகை மீனா கெஸ்ட்டா வந்திருந்தாங்க... ஆனந்த பூங்காற்றே படத்தில் தல அஜித்துடன் நடித்த செம்மீனா, விண்மீனா பாடலின் போது சிம்லாவுல ஷூட்டிங் நடந்தது. அப்போ ஸ்னோ ரெயின்ல எப்படி நடிக்கறதுன்னு திகைச்சுப் போய் நின்னோம்.இருந்தாலும் செருப்பு கூட போடாம நான் நடிச்சேன். அஜித் சாரும் நடிச்சுட்டு பாராட்டினார்னு சொன்னாங்க.

நானிகாவுக்கு அங்கிள்

நானிகாவுக்கு அங்கிள்

அங்கிள்னு கூப்பிட்ட ரஜினி சாருக்கே ஜோடியா நீங்க நடிச்சீங்க, விஜய் சாரை அங்கிள்னு கூப்பிடறார் உங்க பொண்ணு நானிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருக்கான்னு கேட்டப்போ, மீனா சிரித்து நம்ம கையில என்ன இருக்குன்னார். வித்தியாசமான காமெடி பார்க்கணும்னா இதை பார்க்கலாம்.

அப்பாடா

அப்பாடா

ஞாயிற்று கிழமையில் குடும்ப பெண்கள் யாரும் சன் டிவி பார்க்க விரும்பறதில்லை. வெறும் சீரியலா பார்த்துகிட்டு இருந்தவர்களை சன் டிவியின் எந்த நிகழ்ச்சியாலும் திருப்தி படுத்த முடியலை. அதனால, பெண்கள் எல்லாரும் வாரத்துல செய்யாம விட்ட வேலை, தோட்ட வேலைன்னு செய்ய போயிடறாங்களாம். வீட்ல ஹாலிடேல இருக்கும் கணவன்மார்கள் ஹாயா செய்திகள், கிரிக்கெட், இங்லீஷ் படம்னு பிடிச்ச படங்களா பார்க்கறாங்களாம்.

அப்பட்டமான காப்பி

அப்பட்டமான காப்பி

ஞாயிற்று கிழமைகளில் நல்லதா நிகழ்ச்சிகளை குடுப்போம்னு எந்த டிவி நிகழ்ச்சி பொறுப்பாளர்களும் ரூம் போட்டு யோசிச்சு நிகழ்ச்சிகளைத் தரத்தில்லை. யார் என்ன செய்யறாங்களோ அதை அப்பட்டமா காப்பி அடிச்சு குடுக்க வேண்டியது. அப்புறம் ரேட்டிங் வரலைன்னு குய்யோ, முய்யோன்னு கத்தி, வேலை செய்யறவங்களை ஒரு வழியாக்கிடறது.

ஞாயிற்று கிழமை

ஞாயிற்று கிழமை

படங்களுக்குன்னு ஒரு சேனலை வச்சுக்கிட்டு, வேட்டைகாரன் படத்தை ரெண்டு மாசத்துல ஒரு தடவை போடறது. தசாவதாரம் படத்தை தேய தேய போடறது...இப்படி எல்லா டிவிக்களும் சில படங்களை கைவசம் வச்சுக்கிட்டு சன்டே பொழுதை ஓட்டறாங்க.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sundays are actually becoming bore as TV channels have less number of interesting programmes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more