கைய நல்லா பெசஞ்சு.. அங்க என்னடா காதல் ரசம் இப்படி சொட்டுது...!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் காட்சிகளுக்கு எந்த சீசனிலும் பஞ்சமில்லை. ரொம்பவே நிறைஞ்சு வழியும்.
ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தற்போது பாலாஜியையும் ஷிவானியையும் பார்த்து ரசிகர்கள் அடுத்த காதல் ஜோடி ரெடி ஆயிருச்சு போலயே என்று கலாய்க்கிறார்கள்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கின முதல் சீசனில் இருந்து முடிந்த மூன்று சீசன் களிலும் இந்த வீட்டிற்குள் பலர் காதலித்தாலும் வீட்டை விட்டு வெளியே சென்று கொஞ்ச நாட்களில் அந்த காதலை மறந்து விடுகிறார்கள்.

காதல் இருக்கா இல்லையா
ரசிகர்கள் உண்மையிலேயே இவர்களுக்குள் காதல் இருக்கிறதா இல்லை இந்த வீட்டில் இவர்களுக்கு இப்படி இருக்க சொல்லி தான் பிக்பாஸ் அனுப்பி வைத்து இருக்கின்றதா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதுபோலதான் இந்த சீசனிலும் பாலாஜி ஷிவானி ஜோடியை ரசிகர்கள் கலாய்த்து இருக்கிறார்கள்.

நல்லா ஆகுறார்யா மிங்கிள்!
ஷிவானி இந்த வீட்டில் யாரிடமும் அதிகமாக மிங்கிளாக மாட்டேங்கிறார் என்று பலரின் கருத்தாக இருந்தாலும் இப்ப எல்லாம் அடிக்கடி பாலாவுடன் கொஞ்சம் கொஞ்சி விளையாடுகிறார். பாலாஜியிடம் கேப்ரில்லா இந்த வீட்டிற்குள் இருக்கும் பெண்கள் யார் உனக்கு பிடிக்கும் என்று கேட்டதற்கு ஷிவானியின் பெயரை தான் கூறியிருந்தார்.

ஷிவானியைப் பிடிக்கும்
அப்போ என்னை பிடிக்காதா என்று கேட்டதற்கு நீ என்னோட தங்கச்சி என்று கூறியிருந்தார். அதைக்கேட்டு அப்போ ஷிவானியும் தங்கச்சி தானே என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி செய்யும் சேட்டைகளை ரசிகர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரே எண்ணம்
அனிதாவுக்கும் சுரேஷுக்கும் இடையிலான சண்டையில் கூட ஷிவானியும் பாலாஜியும் அனிதாவிற்கு தான் சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள். அதிலும் இவர்கள் கருத்து ஒன்று போல இருப்பதால் இவர்களுக்குள் சேம் திங்கிங் தான் இருக்கிறது. அதுபோல நேற்று நடந்த இன்னொரு இடத்திலும் இவர்களது இருவரையும் தான் ரசிகர்கள் கவனித்திருக்கிறார்கள்.

கையைப் போட்டு பெசஞ்சு
நேற்று நடந்த தங்கம் பொறுக்கும் நிகழ்ச்சியில் கூட பாலாஜி தான் சேர்த்த தங்கத்தை எல்லாம் தரையில் கொட்டி ஒரு பைக்குள் போட்டுக் கொண்டிருக்கும்போது ஷிவானி வந்து அதை அள்ள அதை அவர் கையிலிருந்து பாலாஜி வாங்கும்போது இருவருக்குள்ளும் அங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

என்னடா நடக்குது அங்கே
இது தங்கத்தை வாங்கின மாதிரி இல்லையே வேற ஏதோ பண்ண மாதிரி இருக்கிறது என்று கலாய்த்து இருக்கிறார்கள். கையை நல்லா பெசஞ்சுகிட்டாங்களே என்றும் கலாய்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசர்களுக்கும் அரக்கர்களுக்கும் போட்டி நடக்கும்போது கூட இவர்கள் தான் ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

பார்க்க நல்லாதாய்யா இருக்கு
எப்போவுமே இதில் சண்டைக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இவர்கள் தான் கொஞ்சம் என்டர்டைன்மென்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் கொஞ்சம் நன்றாக பண்ண விடுங்கள் அப்பதான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் இவர்களுக்கு பச்சைக்கொடி காட்டி வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications