என்னாது.. "முல்லை"க்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சா.. சீக்கிரமே கல்யாணமாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளராக அறிமுகமாகி இருந்தாலும் இன்று பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டு இணையதளத்தில் கலக்கிக்கொண்டு இருக்கும் சித்துவிற்கு எங்கேஜ்மன்ட் முடிஞ்சாச்சாம். விரைவில் திருமணம் நடக்கப் போகுதாம். இதுதான் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கு.

பெரும் ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கும் சித்து தனது ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். இவரது ரசிகர்களின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று ரசிகர்களை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் சித்து.

இப்போ திடீரென்று அதுவும் யாருக்கும் சொல்லாமல் எவ்வளவு எளிமையாக திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் அனைவரும் இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து இருக்கிறது. சித்து என்னும் இயற்பெயரை மறந்து பல ரசிகர்கள் இவரை முல்லையாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த லாக் டவுன் நேரத்தில் சீரியல்களுக்கு விடுமுறை விட்டிருந்த நேரத்தில் இவரையும், சீரியலையும் ரசிகர்கள் மிஸ் செய்தனர்.

கதிருடன் நல்ல கெமிஸ்ட்ரி

கதிருடன் நல்ல கெமிஸ்ட்ரி

அந்த அளவிற்கு சீரியல் எப்போது ஒளிபரப்பப்படும் என்று காத்திருந்தனர். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் கதிருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உருவாக்கி சீரியலில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என்று பல ரசிகர்கள் கூறி வந்த நிலையில் திடீரென சித்ராவின் கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மேக்கப் கலைஞர் லாவண்யா யூஜின் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டுள்ளார்.

சித்து பக்கத்தில் தகவல் இல்லை

சித்து பக்கத்தில் தகவல் இல்லை

இது ரசிகர்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆனால் சித்து தனது இன்ஸ்டாவில் இதுதொடர்பாக எதையும் போடவில்லை. இதனால் குழப்பமும் அதிகரித்துள்ளது. இதை பார்த்ததும் எப்பவும் இவர் பண்ணும் விளம்பரம் போன்று தான் இதுவும் இருக்கும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருந்த போது சில ரசிகர்கள் இவரிடம் என்ன இன்று ரொம்பவும் வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஆமாம் எனக்கு இன்று நிச்சயதார்த்தம் என்று கூறியிருக்கிறார்.

யாரு மாப்பிள்ளை

யாரு மாப்பிள்ளை

ஆனால் மாப்பிள்ளையின் போட்டோவை அவர் போடவில்லை. யார் என்ன விவரம் என்பதையும் அவர் சொல்லவில்லை. இதைப்பற்றி பல ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் மாப்பிள்ளை சென்னை ஜிபிஎன் பேலஸின் உரிமையாளர் என்றும் அவருடைய பெயர் ஹேமந்த் ரவி என்று மட்டும் சொல்கிறார்கள். ஜிபிஎன் பேலஸில்தான் நிச்சயதார்த்தம் முடிந்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் பலராலும் இதை நம்ப முடியவில்லையாம். இது நிஜமான நிச்சயதார்த்த போட்டோதானா அல்லது வழக்கம் போல ஏதாவது காமெடி செய்கிறாரா என்றும் பலர் கேட்டு வருகின்றனர்.

காதலிக்க ஆசை

காதலிக்க ஆசை

ஏற்கனவே இவர் ஒரு பேட்டியில் கூட நான் காதலித்து தான் திருமணம் செய்வேன் அதுவும் இந்த வருடத்திற்குள் இருக்கும் என்றும் பல ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார். வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் திடீரென்று எந்த அறிவிப்பும் வெளியிடாமல் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று வந்துள்ள செய்திகள் அவரது ரசிகர்களையும் திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நிஜமாவே முடிஞ்சிருச்சா நிச்சயதார்த்தம்

நிஜமாவே முடிஞ்சிருச்சா நிச்சயதார்த்தம்

இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது என்று செய்தி கேள்விப்பட்டதும் பல ரசிகர்கள் இந்த சீரியலில் இருந்து விலகி விடுவார் என்றும் பயப்பட்டு கொண்டிருக்கிறார்களாம். இந்த சீரியல் இப்ப தான் நல்லா சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இதில் கூட நடிக்கும் கதிரை போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் அடிக்கும்போது இவர் கதறி அழுவது போல சீன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அவர் அழுவதைக் கூட பொறுக்கமுடியாமல் பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவருக்காக மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

யாருப்பா அழ வச்சது

யாருப்பா அழ வச்சது

என் செல்லத்தை அழ வைத்தது யாரு என்றெல்லாம் கேள்வி கேட்டு மிரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் என்றதும் அவர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இவருக்கு பதில் இவர் என்று போட்டு விடக்கூடாது அதனால் கொஞ்சம் யோசித்து முடிவெடுக்க தலைவி என்றும் சிலர் அன்பு கட்டளை எழுதியிருக்கிறார்கள். அதேசமயம், பெரும்பாலான ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இவருக்காக இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பலர் இவருடைய பெயரில் பேன் பேஜ்களை ஓபன் பண்ணி வருகிறார்கள்.

நல்லா இருக்கட்டும்

நல்லா இருக்கட்டும்

இவருக்காக ரசிகர்கள் ஆர்மி வைக்கிற அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று திருமணம் என்றதும அவர்கள் திருவிழாவைப் போல கொண்டாடலாம் என்று ஜாலியாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். எப்படியோ இந்த வருடத்திற்குள் இவரும் கமிட் ஆகி விடுவார். ஏற்கனவே இவர் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது போன்று ஒரு வீடியோ வெளியாகி இருந்தது அது வைரலாக பரவி வந்தது அதேபோல சீக்கிரமா இவரும் குழந்தை குட்டியோடு நல்லா இருக்க வேண்டும் என்று ரசிகர்களோடு சேர்ந்து நாமளும் வாழ்த்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+