கவனமாய் கருத்தாய் விளையாடும் ராஜு...அவரையும் சங்கத்தில் இணைத்து விட துடிக்கும் அபிஷேக்
சென்னை: தப்பு செஞ்சா நான் மட்டும் மாட்டகூடாது எல்லாரும் சேர்ந்து மாட்டுவோம் என்று ராஜுவை இழுக்க பார்க்கிறார் அபிஷேக் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
தான் செய்வது மட்டும்தான் பெரிய வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அபிஷேக் என்று அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பரபரப்பு கூட்டி இருக்கின்றனர்.
நான் ரூல்ஸ் படி தான் இருப்பேன் என்று ராஜூ கூறினாலும் அவரையும் தன்னுடன் இணைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் அபிஷேக்.

ஜாலியான கூட்டுக்குடும்பம்
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் இது ஒரு ரியாலிட்டி ஷோ வா இல்லை கூட்டுக் குடும்பமா என்று சொல்லத் தோன்றும் வகையில் தான் இந்த சீசன் இருந்துவருகிறது. முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அடுத்த நிமிடமே ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். இது ஒருபக்கம் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் ஆக இருந்தாலும் மறுபக்கம் சலிப்பாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இதுவரைக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய சுய கேரக்டரை காட்டவே இல்லை என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுல எது உண்மை
எத்தனை நாளைக்குத்தான் இப்படியே நடிக்க முடியும்...அதனால் சீக்கிரமாக போட்டியாளர்கள் தங்களுடைய உண்மையான கேரக்டரில் இந்த விளையாட்டை விளையாடினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில், கேமரா திரும்பும் பக்கமெல்லாம் வலம் வந்து கொண்டிருக்கும் அபிஷேக், சக போட்டியாளர்கள் இடம் உண்மையிலேயே அவருடைய கேரக்டரில் தான் பழகிக்கொண்டு இருக்கிறாரா?? அல்லது போட்டியில் அனைவரையும் தன்னுடைய வெற்றிக்கு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாரா?? என்று ரசிகர்கள் சந்தேகத்தில் கமெண்ட்களை சமூகவலைத்தளத்தில் அனுப்பி வருகின்றனர்.

இப்படி டக்குன்னு சொல்லிட்டீங்களே
நேற்றைய எபிசோட்டில் இந்த வார எலிமினேஷன் இரண்டு போட்டியாளர்களை அனைத்து போட்டியாளர்களும் செலக்ட் பண்ணிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய பெயரை தன்னுடன் இருப்பவர்கள் யாராவது சொல்லி இருக்கிறாரா??என்று தெரிந்து கொள்வதற்காக ஆர்வத்துடன் சக போட்டியாளர்கள் ஒரு ஒவ்வொருவரிடமும் நீ யாருடைய பெயரை நாமினேஷன் செய்தாய் என்று அபிஷேக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதில் பிரியங்கா, நிரூப் தாங்கள் யாருடைய பெயர்களை சொன்னார்களோ அதை இவரிடம் சொன்னதும் அப்பாடா நம்முடைய பெயர் இல்லை என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு, அடுத்ததாக அந்தப் பக்கம் வந்த ராஜுவை பிடித்து நிறுத்தி அவரிடமும் நீ யார் பெயரை நாமினேஷன் செய்தார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Recommended Video

சாமர்த்தியமான பேச்சு
ஆனால் ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாமர்த்தியமாக விளையாடிக் கொண்டிருக்கும் ராஜு இதில் எந்த ஒரு எக்ஸ்பிரஷனையும் காட்டாமல் அதை வெளியே சொல்ல மாட்டேன் என்று நெத்தியடியாக பதிலை கூறிவிட்டார். ஆனாலும் விடாமல் தனக்கே உரிய சாமர்த்தியத்தால் ராஜுவின் வாயை திறந்து விடலாம் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அப்படி சொல்ல கூடாது என்று பிக்பாஸ் நிபந்தனை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அப்படி யார் சொன்னா?? என்று ஒண்ணும் தெரியாத குழந்தை போல அபிஷேக் பேசியிருக்கிறார். இதைத்தான் தற்போது ராஜுவின் ரசிகர்கள் மீம்ஸ்களாக போட்டு அபிஷேக்கை கலாய்த்து எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications