Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியாவிடம் மாட்டிக்கொண்ட கோபி.. ஒருவழியாக ரசிகர்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த தருணம் தற்போது நிகழ்ந்து வருகிறது.

குழப்பத்தில் இருந்த பாக்கியலட்சுமிக்கு கிடைத்த எவிடன்ஸ் பற்றி இனி கோபி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமியின் போராட்டம்

பாக்கியலட்சுமியின் போராட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு குடும்பத் தலைவியின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பற்றிய ஒரு கதையாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வரும் பாக்கியலட்சுமி தன்னுடைய கணவரால் அதிகமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார், படிக்கவில்லை என்ற காரணத்திற்காக கணவரால் புறக்கணிக்கப்படும் போது தன்னுடைய திறமையை எப்படியாவது காட்டிவிட வேண்டும் என்று ஒவ்வொரு வேலையாக செய்து அதில் தற்போது வெற்றியும் அடைந்து வருகிறார். சிலநேரங்களில் சறுக்கல் ஏற்படும்போது அவருடைய மகன் எழில் மற்றும் மாமனாரால் பாதுகாக்கப்பட்டு வருகிறார்.

பாக்கியலட்சுமி வாழ்க்கையில் நடக்கும் ஏமாற்றம்

பாக்கியலட்சுமி வாழ்க்கையில் நடக்கும் ஏமாற்றம்

பாக்கிய லட்சுமியின் கணவர் இவருக்கு துரோகம் செய்து ராதிகாவுடன் பழகி வருகிறார். ஆனால் ராதிகாவும், பாக்கியலட்சுமியும் தோழிகளாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் கோபி இருப்பது தெரிந்து கொள்ளாமல் தான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பாக்கியலட்சுமி தற்போது கோபியின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொள்கிறார். ஏற்கனவே பாக்கியலட்சுமி வீட்டில் வேலை செய்யும் பெண் கோபியை பற்றி அடிக்கடி சொல்லி வருகிறார். முதலில் இதை நம்பாத பாக்கியலட்சுமி தற்போது நடக்கும் செயல்களால் அது உண்மையாக இருக்குமோ என்று குழப்பம் கொள்கிறார்.

பாக்யாவுக்கு கிடைத்த எவிடன்ஸ்

பாக்யாவுக்கு கிடைத்த எவிடன்ஸ்

ஏற்கனவே கோபி ராதிகாவுடன் பழகி வருவது கோபியின் தந்தைக்கு தெரிந்துவிட்டது. ஆனால் இனி நான் ராதிகாவுடன் பேசமாட்டேன், பழக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்து கொண்டு மீண்டும் கோபி அதே வேலையைத்தான் செய்து கொண்டு வருகிறார். கோபி இன்னொரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது எழிலுக்கு தெரிந்தாலும் அது ராதிகா என்பது தெரியாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அடுத்ததாக பாக்கியாவிற்கும் சந்தேகம் வந்திருக்கிறது. இன்றைய எபிசோடில் கோபியின் காருக்குள்ளே கிடந்த வேஸ்ட் பொருள்களை பாக்கியா எடுத்துக் கொண்டு வருகிறார். இதில் ஏதேனும் அவருக்கு தேவையான பில் இருக்கலாம். ..இல்லை என்றால் கீழே போட்டு விடலாம் என்று அவர் அதனை வைத்துள்ளார்.

குழப்பத்தில் பாக்கியா

குழப்பத்தில் பாக்கியா

பாக்கியா வைத்திருந்த வேஸ்ட் பொருள்களில் ஒரு பில் உள்ளது. அதை பாக்கியாவின் மகள் படித்து கூறுகிறார். ஜாக்கெட் வாங்கியதற்கான பில் என்று இருக்கிறது .அதுவும் இரண்டு ஜாக்கெட் 2000 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். இதனை பார்த்ததும் அம்மா உனக்கு அப்பா 2000 ரூபாய்க்கு டெய்லரிடமிருந்து ஜாக்கெட் வாங்கி கொடுத்தாரா?? என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதனால் மீண்டும் குழப்பம் அடைந்த பாக்கியா..அதையே யோசித்துக் கொண்டிருக்கும் போது எழில் வருகிறார். எழிலிடம் தான் ஏமாற்றப்படுகிறோம் என்று சந்தேகமாக இருக்கிறது, உங்க அப்பாவின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

இனிதான் கதை மாறப்போகிறது

இனிதான் கதை மாறப்போகிறது

அப்பா என்னை ஏமாத்துறாராடா, அப்பா என்ன திட்டினாலும் அவர் பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப நேர்மையாக நடந்துக்கிட்டு இருக்காருனு தான் இப்ப வரைக்கும் நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா இப்ப ரொம்ப பயமா இருக்குடா... அவர் கிட்ட சின்ன சின்னதாய் நிறைய மாற்றங்கள் வருது... யாருகிட்டயோ பேசிகிட்டு இருக்காரு என்று நினைக்கிறேன்...பயமாயிருக்கிறது... என்று கண்ணீரோடு பாக்கியா எழிலிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இதை கேட்ட எழில் இந்த மனுஷன் எல்லாருடைய நிம்மதியையும், இல்லாம பண்ணிகிட்டு இருக்காரு என்று கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் இனி கோபியின் விஷயத்தில் எழில் மற்றும் பாக்கியா எடுக்கப்போகும் புது முடிவு என்ன என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+