கோடி கோடியாய் கொட்டிய சுஜாதா விஜயகுமார்.. சுளீர் சொல்.. ஜஸ்ட் கிளப் டான்ஸர் கெனிஷா, அதுக்கு? பிரபலம்
சென்னை: ஒரு தயாரிப்பாளராக மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படம் எடுக்க அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் மறுத்துவிட்டார் என்றே வைத்து கொண்டாலும், அது ஒரு பிசினஸ்.. ஆனால் விவாகரத்து என்பது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது.. அதுக்காக தற்போது ஜெயம் ரவி செய்து வரும் விஷயங்களுக்கெலலாம் நியாயம் கற்பிக்க முடியுமா? என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.
Reflect Prime என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "சுஜாதா விஜயகுமார் படங்கள் மட்டுமல்லாமல், வெளிநபர்களுக்கு நடித்து தந்த படங்களும் ஜெயம் ரவிக்கு தோல்வியையே தந்திருந்தது.. மீண்டும் மீண்டும் மருமகனை வைத்து படம் எடுத்து தோல்வி அடைந்தால், அடுத்தடுத்து எப்படி ஜெயம் ரவியை வைத்தே சுஜாதா விஜயகுமார் படங்களை எடுப்பார்?

சுஜாதா விஜயகுமார்
யாராக இருந்தாலும், ஒரு படம் தோல்வி என்றாலே, அடுத்த படத்தில் அதே ஹீரோவை வைத்து படம் எடுக்க தயங்குவார்கள்.. ஆனால், சுஜாதா விஜயகுமார், தொடர்ந்து 3 படங்கள் ஜெயம் ரவியை வைத்து எடுத்து நஷ்டத்தை சந்தித்துள்ளார்.. மருமகன் ஃபீல்டில் நிற்க வேண்டும்.. அதற்காகவே சொந்த பணத்தை கொட்டி மருமகனை வைத்து படங்களை எடுத்திருக்கிறார் சுஜாதா விஜயகுமார்..
அடுத்த படமாவது வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கையில்தான் மருமகனை வைத்து எடுத்துள்ளார். ஒரு தயாரிப்பாளராக மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படம் எடுக்க சுஜாதா விஜயகுமார் மறுத்துவிட்டார் என்றே வைத்து கொண்டாலும், அது பிசினஸ்.. ஆனால் விவாகரத்து என்பது வாழ்க்கை சம்பந்தப்பட்டது.. அதுக்காக தற்போது ஜெயம் ரவி செய்து வரும் விஷயங்களுக்கெலலாம் நியாயம் கற்பிக்க முடியுமா?
மாமியார் பிரச்சனை என்றால், அவரிடமிருந்து ஒதுங்கிவிட்டு, மனைவியை கவனிக்கலாமே? இப்போது கெனிஷாவுடன் தனியாக இருப்பதை போல, மனைவி, குழந்தைகளை கூட்டிக் கொண்டு, தனிக்குடித்தனம் சென்றிருக்கலாமே?
கடனுக்காக ஜாமீன்
கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டதாக ஜெயம் ரவி சொல்கிறார்.. உண்மை என்றால், அதை நிரூபிக்க சொல்கிறார் சுஜாதா விஜயகுமார்.. ஜெயம் ரவி நிரூபிக்க வேண்டியதுதானே?
பொன்முட்டை இடும் வாத்து போல தன்னை பயன்படுத்தி கொண்டதாக ஜெயம் ரவி குற்றம் சாட்டுகிறார்.. அப்படியானால், அந்த பொன் முட்டையை காசாக்கி, மருமகனை வைத்து மீண்டும் படம் எடுத்திருப்பாரே சுஜாதா விஜயகுமார்? ஜெயம் ரவி தந்தது எல்லாமே தோல்விப்படங்கள்தானே?
ஒருபக்கம் பொன்முட்டை இடும் வாத்து என்கிறார் ஜெயம ரவி, மறுபுறம் தன்னிடம் கடனுக்காக கைத்து வாங்கி கொண்டார் என்கிறார்.. ஜெயம் ரவி பேச்சிலேயே முரண் இருக்கிறது. உண்மையிலேயே ஜெயம் ரவி பொன்முட்டை இட்டிருந்தால், சுஜாதா விஜயகுமார் ஏன் கடன் வாங்க போகிறார்?
குடும்பத்தில் உரசல்கள்
அடுத்தடுத்த படங்கள் தோல்வியால், குடும்பதத்தில் உரசல்கள் வந்திருக்கும்.. இந்த உரசல்களுக்கு மருந்து தேடி போனபோதுதான், இப்படி நடநதுவிட்டது.. எந்த டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமே தருவார்கள்.. ஒவ்வொரு நோயாளிகளின் குடும்பத்தில் புகுந்து விளையாட மாட்டார்கள்.
மாமியார் கொடுமை என்றால் அம்மாவுக்கு போக வேண்டியதுதானே? ஜெயம் ரவி தற்போது செய்துள்ளது, தன்னை மட்டுமல்ல, தன்னுடைய பெற்றோரையும் சேரத்தே களங்கப்படுத்தியிருக்கிறார்.. உடன்பிறந்தவரை களங்கப்படுத்தியிருக்கிறார்.. ஆர்த்தி குடும்பத்தையும் களங்கப்படுத்தியிருக்கிறார்.. கிளப் டான்ஸ் ஆடுபவர் கெனிஷா.. அவ்வளவுதான்.. அவரை என்னமோ லண்டன் ரிட்டர்ன் மாதிரி பேசிட்டு இருக்காங்க. . கெனிஷா யாராக வேண்டுமானாலும், எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டுமே? மனைவிக்கு துரோகம் செய்ய சொல்றாங்களா?
பொன் முட்டை வாத்து
கெனிஷாவுக்கு 2, 3 காதலர்கள் இருக்கிறார்களாம்.. இன்ஸ்டா வீடியோவில் அவரது டிரஸ் படுமோசமாக இருக்கிறது.. கெனிஷாவுக்கு கல்யாணமாகிவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்.. கணவர் இறந்துவிட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள்.. இதெல்லாம் ஜெயம் ரவிக்கு தெரியாது போல... ஏஞ்சல், ஊஞ்சல் என்று அவரது அழகை வர்ணித்து பேசுகிறார்..
நான் எப்போதுமே ஜெயம் ரவியை விட்டுக்கொடுத்ததில்லை.. அடிப்படையில் மிகவும் நல்லவர்.. அதனால்தான் அவரது தவறை ஜீரணிக்க முடியவில்லை.. அன்பான வாழ்க்கைத்துணை என்பதற்கு பதிலாக அழகான வாழ்க்கைத்துணை என்று கெனிஷாவை சொல்லக்கூடாது.. பொன்முட்டை இடும் வாத்து போல ஜெயம ரவியை, கெனிஷாதான் பயன்படுத்தி கொள்ள போகிறாரோ என்ற சந்தேகம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
நடிகை ரோஜா வீட்டில் கொண்டாட்டம்.. மகனுடன் சொன்ன மகிழ்ச்சி செய்தி! குவியும் வாழ்த்துக்கள்












Click it and Unblock the Notifications