ஓ..சொல்றியா, மாமா ஒ ஓ சொல்றியா..சமந்தாவுக்கு டப் கொடுக்கும் ஜூலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமந்தாவின் பாட்டுக்கு ஜூலி போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.

Recommended Video

    ஓ..சொல்றியா, மாமா ஒ ஓ சொல்றியா..சமந்தாவுக்கு டப் கொடுக்கும் ஜூலி

    ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு கடற்கரையோரத்தில் காற்று வாங்கியபடி ஜூலியின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மனம் துள்ளி வருகிறதாம்.

    பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கியிருக்கும் ஜூலிக்கு ரசிகர்களின் பக்கம் ஆதரவு அலை அதிகமாக வீசி வருகிறதாம்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி நெகட்டிவ் கேரக்டர் தனக்கு கிடைத்து இருந்தாலும் அதையும் பாசிட்டிவ் கேரக்டராக மாற்றி தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜூலி, போட்டோ ஷூட்டில் பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி கேமராமேனை அழைத்தபடி போட்டோஷூட் கிளம்பிவிடும் ஜூலி கொஞ்ச நாட்களாக போட்டோ சூட் எதுவும் எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி வந்தனர். இவர் திரைப்படங்களின் வாய்ப்புக்காக போட்டோஷூட் பக்கம் கவனத்தை திருப்பி இருந்தாலும் ரசிகர்களின் கவனம் இவரை சுற்றித் திரும்பி விட்டது.

    நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில்

    நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு அதிகமாக நெகட்டிவ் பெயர் கிடைத்திருந்தாலும் அதற்குப் பிறகு படிப்படியாக தற்போது அது குறையத் தொடங்கி விட்டது. ஆனால் ஒரு சில ரசிகர்கள் இப்ப வரைக்கும் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிடம் நடந்து கொண்டதை வைத்து திட்டி தீர்த்து வருகின்றனர். என்னதான் நெட்டிசன்கள் இவரைப்பற்றி திட்டிக் கொண்டு வந்தாலும் இவர் அதைப் பற்றி கவலைப் படுவதே கிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் ஒரு சில நேரங்களில் இவரை ரொம்பவே காண்டாக்கி விடுகின்றனர் சில ரசிகர்கள். அதனால் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு பதில் சொல்லியும் வருகிறார்.

    சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

    சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

    ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் இவரை ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டார் என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்து மீண்டும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். பின்பு இவருடைய பக்கத்தில் தவறு இருக்கிறது என்று செய்திகள் பரவி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி அப்படியே விட்டுவிட்டு ஜூலி இப்படியே இருந்தால் சரிவராது என்று மீண்டும் தன்னுடைய போட்டோஷூட் துறைக்கு திரும்பிவிட்டார்.

    சமந்தாவுக்கு டப் கொடுக்கும் ஜூலி

    சமந்தாவுக்கு டப் கொடுக்கும் ஜூலி

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இவருக்கு பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இவர் பாதியிலே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு கிடைத்த டான்ஸ் திறமையை தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டியுள்ளார். தற்போது இருக்கும் புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா பாட்டுக்கு சமந்தாவுக்கு டப் கொடுக்கின்ற மாதிரி கடற்கரையில் இவர் போட்ட கலக்கல் ஆட்டம் ரசிகர்களின் கண்களுக்குள் நிற்கிறதாம். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+