என் பெண்மை பூ பூத்ததே.. சென்ராயனைப் பார்த்து சொக்கிப் போய் பாடிய ஜூலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஆரம்பித்ததுதான் ஆரம்பித்தார்கள். இந்த பிக்பாஸ் கண்டஸ்டன்களின் ஆட்டம்தாங்க முடியவில்லை .

அதுவும் இதில் கன்டஸ்டன்டாக கலந்துகொள்ளும் ஜூலி - சென்ராயன் ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்கள்.. ப்ப்பா வேற லெவல்.

இதில் ஜூலி வெட்கப்பட்டுக் கொண்டு தன்னுடைய சொந்த குரலில் பாட்டுப் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் புல்லரிக்க வைத்திருக்கிறார்.

புதைந்து கிடக்கும் திறமை

புதைந்து கிடக்கும் திறமை

ஜூலிக்குள் இந்த மாதிரி ஒரு திறமை இருக்கிறது என்பதை இதுவரைக்கும் தெரிந்து கொள்ளாத ரசிகர்கள் முதல் முறையாக இவருடைய சொந்த குரலில் இவர் பாடிய பாட்டைக் கேட்டதும் ரொம்பவே ஷாக்காகி இருக்கிறார்கள் .அதுவும் இவர் பாட அதற்கு அவருடன் சேர்ந்து சென்ராயனும் ஜால்ரா போட இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திணறி வருகின்றனர் .

பிக் பாஸ் ஜோடிகள்

பிக் பாஸ் ஜோடிகள்

ஆனால் ரசிகர்கள் எதுவும் தப்பாக நினைக்க வேண்டாம் இது டான்ஸ் ஜோடி தான் என ஜூலி கேப்ஷன் கொடுத்திருக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகைகள் அதிகமாக ஆக்டிவாக இருந்து வரும் சூழ்நிலையில் இந்த நேரத்தில் ஜூலியும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி லைவில் வந்து தன்னை பற்றி நெகட்டிவ் கமெண்ட் போடும் ரசிகர்களுக்கு நன்றாக பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி திறமையா

இப்படி திறமையா

இந்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டதும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆறுதலாக கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அதுவும் நெகட்டிவ் கமெண்ட்களை நீங்கள் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாதீர்கள் என அறிவுரை கூறி வருகின்றனர். அதுவுமில்லாமல் தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஜூலிக்கு இந்த மாதிரி ஒரு திறமை இருக்கிறது என தெரியாமல் இருந்தோம் .

நல்லா பாடுங்க

நல்லா பாடுங்க

ஆனால் தற்போது உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது. நடிப்பு மட்டுமல்ல பாட்டும் அழகாக பாடுகிறீர்கள் என எங்கிரேஜ் செய்து வருகின்றனர். ஆனால் இவர் தனக்கு ஆதரவாக கமெண்ட் போடும் ரசிகர்களுக்கு திருப்பி பதில் அளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்ட் போடும் நபர்களுக்கு லைவ்வில் பதிலளித்திருக்கிறார் .

எல்லை தெரியும்

எல்லை தெரியும்

அதில் சிலர் நீங்கள் ஏன் கிளாமருக்கு மாறி விட்டீர்கள் என கேட்டதற்கு நான் கிளாமருக்கலாம் செல்லவில்லை என்னுடைய ஆசை மற்றும் என்னுடைய எல்லையைத் தெரிந்து தான் நான் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதுவெல்லாம் ஒரு கிளாமரே கிடையாது .என்னுடைய எல்லையை தாண்டி நான் ஒருபோதும் செல்ல மாட்டேன் .அது போல நான் என்னுடைய ஆசைக்கு தான் வாழ்வேனே தவிர உங்களுடைய இஷ்டத்திற்கும் ஆசைக்கும் நான் வாழ வேண்டிய அவசியம் இல்லை.

டைம் வேஸ்ட் பண்ணாதீங்க

டைம் வேஸ்ட் பண்ணாதீங்க

அதனால் என்னை பற்றி யோசித்து உங்களுடைய நேரத்தையும் வீணடிக்காமல் உங்களுடைய வேலையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருங்கள் என அடாவடியாக பேசியிருக்கிறார். அதுவுமிலலாமல் கெட்ட வார்த்தைகளால் பேசுபவர்கள் முதலில் உங்கள் ப்ரொபைலில் உங்களுடைய போட்டோவை தைரியமாக வைத்துக்கொண்டு அடுத்தவர்களைப் பற்றி பேசுங்கள் ஒரு போட்டோ கூட வைப்பதற்கு தைரியமில்லாத நீங்கள் அடுத்தவர்களை பற்றி இழிவாக பேசுவதற்கு தகுதி இல்லாதவர்கள் தான் .

கோபமாய்ட்டாரே

கோபமாய்ட்டாரே

நீங்கள் சோற்றைத் தானே சாப்பிடுகிறீர்கள் என ஆவேசமாகவும் கேட்டிருக்கிறார் .எத்தனை நாளைக்கு தான் நானும் பொறுமையாக இருக்கிறது .மெரினாவில் பார்த்த ஜூலியை இனி பார்க்க போகிறீர்கள் என கோபத்தின் உச்சியில் பேசியிருந்த வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .இவர் ஆட்டம் போட்டு பாட்டு பாடிய வீடியோவை பார்த்து ரசித்த ரசிகர்கள் இவருடைய லைவ் வீடியோவை பார்த்து கொஞ்சம் மிரண்டு போயிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+