விஜயால் இப்போ இன்னொரு உயிர் போயிடுச்சு.. அவர் பங்க்ஷன் வீட்டுக்கு போறாரு! ஆனா இவங்க? விடாமல் அடிக்கும் ஜூலி
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்குள் காலடி வைத்த பிறகு விஜய் மீது தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம், பொதுக்கூட்டங்களில் அவர் பேசும் கருத்துகள், ரசிகர்கள் கூட்ட நெரிசலில் ஏற்படும் பிரச்சனைகள்-இவை அனைத்தும் இணைந்து அவரது அரசியல் பயணத்தை கடினமான பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.
அதே சமயம், சமீபத்தில் விஜயை பார்க்க வந்த ஒரு ரசிகர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், ஜூலி வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ
அந்த வீடியோவில் ஜூலி பேசியது அப்படியே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் கூறியதாவது: "நான் இதற்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன்... அந்த வீடியோவில் உங்களால் போன உயிர் 50 பேரை 500 பேராக ஆக்காதீங்க அண்ணா என்று சொன்னேன்... அதற்காக என்னை வெர்ச்சுவல் வாரியர்ஸ் வல்கராக திட்டினீங்க... ஆனா இப்போ என்ன நடந்துச்சு?
விஜய் பார்க்குறதுக்காக ஒரு புள்ள, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வந்து உசுரே போயிடுச்சு... அதுக்கு உங்க அண்ணன் என்ன பண்ணுனாரு? ஒரு இரங்கல் கூட சொல்லலையே... விஜய் பார்க்குறதுக்காக தானே அவங்க அவரோட வண்டி பின்னாடி வந்தாங்க... ஆனா அதுக்காக அவர் ஒரு வார்த்தை கூட பேசல...
இப்போ உயிர் போன குடும்பம் தான் கஷ்டப்படுது... விஜய்க்கு என்ன? அவர் சந்தோஷமா அடுத்த வீட்டு பங்க்ஷன்ல கலந்து கொண்டு இருக்கார்... இந்த மாதிரி விஷயம் அவர் வீட்டில நடந்திருந்தா தான் அந்த வேதனை புரியும்...
நாங்க எல்லா இடத்திலும் கேள்வி கேட்கத்தான் போறோம்... பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு நீங்க சொல்றீங்களே... ஆனா பெண்களுக்கு உங்களை மாதிரி வெர்ச்சுவல் வாரியரிடமிருந்து தான் பாதுகாப்பு வேணும்... இன்னும் கொஞ்ச நேரத்தில் என் கமெண்ட் செக்ஷன்ல என்ன மாதிரி மோசமான கமெண்ட்ஸ் வரும் நீங்களே பாருங்க..." என்று அவர் பேசியுள்ளார்.
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
இதோடு மட்டும் இல்லாமல், விஜய் முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் கூறிய ஜல்லிக்கட்டு உவமையையும் ஜூலி மீண்டும் பேசி இருக்கிறார். விஜய் ஒரு கூட்டத்தில் பேசும்போது ஒரு ஜல்லிக்கட்டு காளையை பார்த்து எல்லோரும் பயந்து நின்றபோது, ஒரு சிறுவன் புல்லுக்கட்டை காட்டி அதை திசை திருப்பினான்" என்று சொன்னாரு, அதுபோன்ற பேச்சுகள் இளம் ரசிகர்களை தவறாக வழிநடத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் முன்பே எச்சரித்ததாக கூறுகிறார்.
ரசிகர்கள் கருத்து
இந்த வீடியோ வெளியானதும், சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன. விஜய் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில், சிலர் ஜூலி எழுப்பிய கேள்விகள் கவனிக்கப்பட வேண்டியவை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், விஜயைச் சுற்றி ஏற்கனவே இருந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ரசிகர் உயிரிழப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து ஜூலி வெளியிட்ட இந்த வீடியோவும் சேர்ந்து மேலும் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இது எதிர்காலத்தில் இன்னும் எவ்வாறு மாறும், விஜய் தரப்பில் இதற்கு பதில் வருமா என்பது தான் தற்போது அதிகமாக பேசப்படும் கேள்வியாக உள்ளது.
-
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications