ரெட்ரோ பட விழாவிற்கு ஜோதிகா வராத காரணம்? சிவகுமார் தானா? அடுத்த நாளே இப்படி ஒரு சம்பவம்!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது சூர்யா சார்பாக அவருடைய அப்பா சிவகுமார் மற்றும் கார்த்தியின் மகள் போன்றோர் வந்திருந்தனர். ஆனால் சூர்யாவின் மனைவியான ஜோதிகா வரவில்லை. தன்னுடைய மனைவி குறித்து சூர்யா நெகிழ்ந்து பேசியிருந்தார். ஆனால் ஜோதிகா இதில் கலந்து கொள்ளாததற்கு காரணம் சிவகுமார் என்று சில தகவல்கள் பரவி வருகிறது.
நடிகை ஜோதிகா சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அடிக்கடி இவர்களுடைய குடும்பம் சர்ச்சைகளில் சிக்குகிறது. சிவகுமார் தன்னை செல்பி எடுத்த ரசிகரின் போனை பிடுங்கி உடைத்திருந்தார். இது பெரிய அளவு பேசப்பட்டது.

ரெட்ரோ திரைப்பட விழா
அதைத் தொடர்ந்து சிவக்குமார் மற்றும் சூர்யா போன்றோர் மேடைகளில் பேசும் விஷயங்களை இணையத்தில் சிலர் ட்ரோல் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஜோதிகாவையும் விட்டு வைக்கவில்லை. ஜோதிகா தன்னுடைய கணவர் குறித்து பெருமையாக பேசுவதைக் கூட சிலர் விமர்சித்து வருகிறார்கள். அதுபோல ஜோதிகா இப்போது தன்னுடைய மாமனார் வீட்டை விட்டு மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார்.

அடிக்கடி ட்ரோல்
இதற்கு காரணம் சிவகுமார் தான் என்று செய்திகளும் பரவி வருகிறது. ஆனால் ஜோதிகா பேட்டியில் பேசும் போது என்னுடைய பெற்றோரை கவனிப்பதற்காக நான் மும்பைக்கு வந்தேன் பிறகு குழந்தைகள் படிப்பு அங்கே செட்டில் ஆகிவிட்டதால் அங்கேயே குடும்பத்தோடு இருக்கிறோம் என்று கூறியிருந்தார். ஆனாலும் சிவகுமாருக்கு ஜோதிகா சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை, இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதால் தான் சூர்யா வீட்டை விட்டு ஜோதிகா மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார் என்று ஒரு பேச்சு நிலவி வருகிறது.
சர்ச்சைகள்
அதற்கு மேலும் வலுக்கொடுக்கும் வகையிலேயே சில சம்பவங்களும் நடைபெற்று இருக்கிறது. சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் சூர்யாவின் சார்பாக சிவக்குமார் கலந்து கொண்டார் அப்போது ஜோதிகா வரவில்லை. இதனால் சிவகுமார் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டதால்தான் ஜோதிகா வரவில்லை என்று ஒரு பேச்சு பரவி வருகிறது.
பிரச்சனைக்கு காரணம்
ஜோதிகா திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவில்லை ஆனால் அடுத்த நாளே தன்னுடைய கணவரோடு கோவில்களுக்கு சென்று இருக்கிறார். அதுவும் மும்பையில் உள்ள கோவில்களுக்கு தன்னுடைய கணவரோடு ஜோதிகா சென்றிருக்கும் நிலையில் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை என்பது உண்மைதானா? என்று கேள்வி எழுந்து வருகிறது.
ரசிகர்களின் கருத்து
பொதுவாக சாதாரண மக்களாக இருந்தாலும் சரி பிரபலங்களாக இருந்தாலும் சரி, எல்லோருடைய குடும்பத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை அடுத்தவர்கள் பெரிதுப்படுத்தி பார்ப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது என்று சூர்யாவின் ரசிகர்களும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஒருவேளை மாமனார் மருமகளுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம் அதனால் ஜோதிகா ரெட்ரோ பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று பலர் பரப்பி வருகிறார்கள். இதனால் அடுத்தவர்களுக்கு என்ன பிரச்சனை? இதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விமர்சனங்கள்
ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவக்குமார் தன்னுடைய மகன் சூர்யாவிற்கு முன்பு தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் சிக்ஸ் பேக் வைத்தது கிடையாது, சூர்யாவுக்கு பிறகும் யாரும் வைத்தது கிடையாது என்று பேசியது விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் இப்போது ஜோதிகா இந்த பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லை என்பது பற்றியும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications