நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்தது இப்படித்தான்! சபாஷ் சிவகுமார்.. ஜோதிகாவின் லவ் கிசுகிசு.. அட
சென்னை: நடிகர் சூர்யா எப்படி திரையுலகிற்குள் நுழைந்தார்? நேருக்கு நேர் படத்தில் நடிக்க சிவகுமார் அனுமதித்தது எப்படி? நடிகர் கார்த்தியின் திரைப்பயணம் எப்படி இருந்தது? சூர்யா-ஜோதிகா திருமணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.. இந்த பேட்டியினை சூர்யா, கார்த்தி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
aagayam Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "நடிகர் சிவகுமார் தன்னுடைய மகன் சூர்யாவை ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க விடவில்லை.. நேருக்கு நேர் படத்தில் அஜித், விஜய்,இருவரும் நடிப்பதாக இருந்தது.. ஆனால், விஜய்யைவிட தன்னுடைய கேரக்டர் சற்று குறைவாக இருப்பதாக அஜித் உணர்ந்தார்..

எனவே, படத்தில் இருவருக்குமே ஒரே மாதிரியான முக்கியத்துவம் வரும்படி மாற்றினால் நன்றாக இருக்குமே என்று டைரக்டர் வசந்திடம் அஜித் சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு வசந்த் டென்ஷனாகவும், அஜித் அந்த படத்திலிருந்து விலகினார்.. பிறகு புதுமுகத்தை வைத்து படம் எடுப்பதென முடிவானது..
மணிபாரதி எடுத்த முயற்சி
அப்போதுதான் மணிபாரதி என்ற இயக்குனர், சிவகுமாரின் மூத்த மகன் சரவணன், அழகாக இருக்கிறார், அவரை நடிக்க வைக்க கேட்டு பார்க்கலாம் என்றார். உடனே எல்லாரும் சேர்ந்து சிவகுமார் வீட்டுக்கு சென்று அனுமதி கேட்டதற்கு, சிவகுமார் ஒப்புக் கொள்ளவில்லை..
நடிப்பெல்லாம் மிகப்பெரிய விஷயம், சரவணன் அம்பத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான், நடிப்பெல்லாம் என் மகனுக்கு செட் ஆகாது, எல்லாரும் கிளம்பி போங்க என்றாராம்.. பிறகுதான் வசந்த் தந்த நம்பிக்கை காரணமாக சிவக்குமார், சரவணனை நடிக்க அனுமதித்தார்.
பிரியாணி நல்லா இருக்கும்
பிறகு நேருக்கு நேர் படத்தில் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் நடித்தார் சூர்யா.. நிறைய சொதப்பலான காட்சிகளும் வந்தன.. விஜய் ஒரே டேக்கில் நடித்துவிட்டதாகவும், சூர்யா 10 டேக் வரை எடுக்க முடியாமல் திணறியதாவும் அப்போது பத்திரிகைகள் எழுதின.. விஜய்யும், சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.. சூர்யாவுக்காக விஜய் பொறுமையாக நிறைய விட்டுத்தந்தாராம்..
விசாகப்பட்டினத்தில் நேருக்கு நேர் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, யூனிட்டே டென்ஷனாக இருந்ததாம்.. அப்போது சூர்யா படுகேஷூவலாக டைரக்டர் வசந்திடம், சார் இங்கே பிரியாணி நல்லா இருக்கும் என்றாராம்.. இதுக்கு வசந்திடம் அவ்ளோ திட்டு வாங்கினாராம் சூர்யா.. அதாவது சினிமா குடும்பத்திலிருந்து வந்தாலும், சினிமா பற்றி எதுவுமே தெரியாமல் பூஜ்யமாக போய் இறங்கியவர்தான் சூர்யா.
உயரத்தை தொட்ட சூர்யா
சூர்யாவுக்கு நடிப்பு வராது, சாக்லேட் ஹீரோ என்றெல்லாம் விமர்சனங்களை ஏற்றார் சூர்யா.. கடைசியில் நந்தா என்ற ஒரு படம் வந்தபிறகுதான், சூர்யா வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதல் கிடைத்தது.
காக்கா காக்க, பிதாமகன், ஏழாம் அறிவு, கஜினி என அடுத்தடுத்த படங்களில் நடித்து, தனக்கான உயரத்தை சரியாக எட்டிப்பிடித்துவிட்டார் சூர்யா.
ஸ்டன்ட் பயிற்சி இல்லாமல் நடிக்க வந்தால், டைமிங் மிஸ்ஸாகும்.. பஞ்ச் எப்போதுமே டைமிங் மிஸ்ஸாகும்போது, முகத்தில் அடிபடும்.. அப்படி ஆரம்ப படங்களில் டைமிங் மிஸ்ஸாகி நிறைய அடிவாங்கியிருக்கிறாராம் சூர்யா.. பிறகுதான் சினிமாவை கெட்டியாக பிடித்துக் கொண்டார் சூர்யா.
ராஜா வீட்டு கண்ணுக்குட்டி கார்த்தி
இரண்டாவது மகன் கார்த்தி, அமெரிக்காவில் எம்பிஏ படித்துவிட்டு வந்தார்.. இங்கே வந்ததுமே, மணிரத்னத்திடம் உதவியாளராக போய் சேர்ந்தார்.. டைரக்ஷனில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பணியாற்றியவர் கார்த்தி.. அப்போதுதான் ஷூட்டிங்கில் கார்த்திக்கை அமீர் கவனித்துவிட்டு, கார்த்திக்கு ஒரு படம் செய்யலாம் என்று நினைத்தார்..
பிறகுதான் பருத்தி வீரன் படம் உருவானது.. சினிமாவையே பார்த்து வளர்ந்த கார்த்தி, மணிரத்னத்திடம் டைரக்ஷன் பயின்றது எல்லாம், பருத்தி வீரன் படத்தில் அவருக்கு உதவியது..
ராஜா வீட்டு கண்ணுக்குட்டி போல வளர்ந்த பிள்ளையை, தேனி மாவட்டத்தில் 40 டிகிரி வெயிலில் நிற்க வைத்து, முழு பாடலையும் எடுத்துள்ளனர்.. இப்படியெல்லாம் செய்ததால்தான், இன்று தனக்குரிய இடத்தில் வலுவாக கார்த்தி நிற்கிறார்.. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் சூர்யாவை போல கார்த்தி தடுமாறவில்லை..
சூர்யா - ஜோதிகா
சூர்யா ஜோதிகா காதலுக்கு வீட்டில் எடுத்ததுமே ஓகே சொல்லவில்லை.. சின்ன எதிர்ப்பு, சின்ன வருத்தம் சூர்யா வீட்டில் இருக்கத்தான் செய்தது.. மீடியாக்கள் இவர்களின் காதலை கிசுகிசுவாக எழுதியதற்கு சிவக்குமார் கோபப்பட்டார்..
ஆனாலும் சூர்யாவின் உறுதியை கண்டு புரிந்து கொண்டார் சிவகுமார்.. மகன்களைவிட சந்தோஷம் வேறென்ன இருக்க போகிறது என்று திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார்..
எல்லா பத்திரிகையாளர்களையும் ஸ்டார் ஓட்டலுக்கு வரவழைத்து மிகப்பெரிய விழாவாக நடத்தினார்கள்.. சிறந்த தம்பதியாக சூர்யா-ஜோதிகா விளங்கி வருகிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications