“என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு” பாடல் நடிகை நினைவிருக்கா? சன் டிவி டாப் சீரியலில் என்ட்ரி
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாடல்களில் ஒன்றான "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வில் மொத்தம் அர்த்தம் தருவேன்" என்று பாடல் வரிகளைக் கொண்ட "காதலிக்க நேரமில்லை" சீரியலில் கதாநாயகியாக நடித்த சீரியல் நடிகை சந்திரா லக்ஷ்மணன் 10 வருடங்களுக்குப் பிறகு சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அது குறித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சின்ன திரையில் சீரியலுக்கு போடப்படும் ஒரு சில பாடல்கள் மட்டும் பல வருடங்களை தாண்டினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடும். அந்த வகையில் மெட்டிஒலி சீரியலில் இடம் பிடித்த "அம்மி அம்மி அம்மி மிதித்து", கோலங்கள் சீரியலில் இடம்பிடித்த "கோலங்கள் கோலங்கள் இது அழகான கோலங்கள்" என்று பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியலில் இடம் பிடித்த "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு" என்ற பாடலையும் அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். இந்த பாடல் 90ஸ் ஹிட்ஸ்கள் மட்டும் அல்லாமல் இப்போது உள்ள 2k கிட்ஸ்கள் வரை அவருடைய ப்ளே லிஸ்டில் இடம் பிடித்திருக்கும். இந்த பாடலில் பவ்யமான முக அழகை காட்டி அனைவரையும் ரசிக்க வைத்தவர் தான் சந்திரா லக்ஷ்மன்.
இவர் பல சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்திருந்தாலும் இவர் இப்போது எங்கே போனார் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் சில வருடங்களுக்கு முன்பு இவர் 39 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு அடுத்த வருடமே தன்னுடைய 40 வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த சந்திரா லக்ஷ்மன் இப்போது பத்து வருடங்களுக்குப் பிறகு சன் டிவி சீரியலில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அதிலும் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்த இவர் இப்போது வில்லியாக நடிக்கிறார். அது எந்த சீரியல் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல்தான். இந்த சீரியலில் கயலுக்கு ஏற்கனவே அவருடைய பெரியப்பா வில்லனாக இருக்கும் நிலையில் அவரை விடவும் பணக்கார திமிரோடு இருக்கும் வில்லியாக இப்போது சந்திரா அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கயல் சீரியலில் இப்போது வீட்டினரின் சம்மதத்தோடு கயல் மற்றும் எழில் திருமணத்திற்கு டிரஸ் எடுப்பதற்காக எல்லோரும் கடைக்கு போய் இருக்கும் நிலையில் அங்கு சந்திரா லக்ஷ்மணன் வில்லியாக என்ட்ரி ஆகிறார். ஏற்கனவே இந்த சீரியலில் எழில் மற்றும் கயலுக்கு எப்போதான் திருமணம் நடக்கும் என்பது தான் எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது.
சீரியல் தொடங்கிய நாளிலிருந்து முடிவடையாத பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் நிலையில் இப்போது புது வில்லி சீரியலில் இறக்கப்பட்டு இருப்பதால் இனி கதை எப்படி போகப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications