பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த பங்க்ஷன் ரெடியா? கட்சி மாறிய நபர்..இந்தக் கூட்டணியை எதிர்பார்க்கலையே
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடப்பது பற்றி அந்த சீரியலில் செல்வி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியாக நடிக்கும் கம்பம் மீனா சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதுவரைக்கும் பாக்கியாவோடு இருந்த செல்வி இப்போது ராதிகா உடன் மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் ராதிகாவின் ஆபீஸில் பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் கிடைத்திருக்கும் நிலையில் தற்போது அங்கே புது பங்க்ஷன் கொண்டாடி இருக்கின்றனர்.

குடும்பத் தலைவியின் கஷ்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் ஒரு பெண் குடும்பத் தலைவியாக இருக்கும் நிலையில் அவர் படிக்காத காரணத்தால் அவரை அவருடைய சொந்த வீட்டிலேயே அனைவரும் மதிக்காமல் அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் இருக்கின்றனர். அந்த நிலையில் தன்னுடைய சுய கௌரவத்தைக்க காப்பாற்றி கொள்வதற்காக அந்த பெண் எடுக்கும் பல்வேறு முயற்சிகள் மற்றும் அதில் படும் அவமானங்கள் பற்றியதாக இந்த பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேரக்டர் கதாநாயகி ஆக நடித்து வருகிறார்.

ராதிகா பாக்கியா சண்டை
பாக்கியாவின் மாமனாராக ராமமூர்த்தி என்கிற கேரக்டரில் நடித்து வரும் நடிகர் எஸ்.டி.பி ரோசரி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையின் அப்பாவாகவும் நடித்து வரும் இவர் உடைய சொந்த ஊர் திருநெல்வேலி தானாம். அவருடைய சொந்த ஊரில் அவருடைய அம்மா, அக்கா அனைவரும் வசித்து வருகிறார்கள். இவர் விடுமுறை நாட்களில் அங்கே சென்று தன்னுடைய உறவினர்களை சந்தித்து பக்கா கிராமத்துக்காரராக மாறி அடிக்கடி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

செல்வி வெளியிட்ட புகைப்படம்
இதுவரைக்கும் பாக்யாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் செல்வியும் ஒருவர். செல்வி பாக்யாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக இருக்கிறார். அவர் பாக்கியா அடுத்தடுத்து எடுத்து வைக்கும் முயற்சிகளுக்கு பக்க பலமாகவும் துணையாகவும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறார். செல்வி கேரக்டரில் நடிக்கும் கம்பம் மீனா அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார். இந்த நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு ராதிகாவின் ஆபீஸில் பாக்யாவுக்கு கேட்டரிங் ஆர்டர் கிடைத்திருக்கிறது. அங்கே ஒரு பங்க்ஷனில் செல்வி ராதிகாவோடு சில புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

கூட்டணி மாறலாமா செல்வி
இதுவரைக்கும் ராதிகா பாக்கியா உடன் இருந்து ராதிகாவை திட்டி வந்த செல்விக்கு ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்கள் தற்போது ராதிகாவோடு செல்வி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சியாகின்றனர். இவர்கள் இருவரும் சூட்டிங் தவிர மீத நேரங்களில் நட்பாக பழகி வருவது பலருக்கும் தெரிந்திருந்தாலும் செல்வி இப்படியெல்லாம் செய்யக்கூடாது, செல்வி எதற்காக அடுத்த பக்கம் போய்விட்டார் என்று வருத்தத்தோடு கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இனி அடுத்ததாக ராதிகாவின் ஆபீஸில் பாக்யாவின் ஆட்டம் இனி ஆரம்பமாக போகிறது என்பது தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications