கல்யாணமான அடுத்த நாளே வந்து இப்படி கேட்டாங்க! தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி மேல எனக்கு கோபம்.. எதிர்நீச்சல் கனிகா வருத்தம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கனிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி மேல தனக்கு இருக்கும் கோபம் குறித்து பேசி இருந்ததால் திருமணமான அடுத்த நாளே சினிமா இண்டஸ்ட்ரியிலிருந்து சிலர் கேட்ட கேள்வி தன்னை வருத்தமடைய செய்ததாக கூறியிருக்கிறார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒரு நடிகைக்கு திருமணம் முடிந்து விட்டால் அவருடைய மார்க்கெட் அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டருக்கு என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால் நடிகர்கள் மட்டும் தாத்தா ஆனாலும் கூட கதாநாயகனாகவே தொடர்ந்து நடிப்பார்கள். இந்த பாரபட்சம் குறித்து பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

பாரபட்சம்
ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்கிறது சில நடிகைகள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்ற பிறகு கூட கதாநாயகியாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் இப்போது எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கனிகாவும் பேசி இருக்கிறார். நடிகை கனிகா ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதிலும் "5 ஸ்டார்" திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார்.
5 ஸ்டார் பட நடிகை
அந்த திரைப்படத்திற்கு பிறகு ஆட்டோகிராப், வரலாறு உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு தமிழை விட மலையாளத்தில் தான் அதிகமான படங்கள் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பு இருந்தாலும் தனித்து தெரியும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். அதுபோல அழகாக பாடும் திறமையும் கொண்டவராக இருக்கிறார்.
சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த கனிகா இப்போது எதிர்நீச்சல் சீரியல் மூலமாக சின்னத்திரையிலும் அறிமுகமாகி இருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் முதல் பாகத்திலும், இரண்டாவது பாகத்திலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும் போது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி மேல எனக்கு கோபம் இருக்கு என்று பேசி இருக்கிறார்.
குறை சொல்லல்ல
கல்யாணம் ஆன அடுத்த நாளே வந்து இனி நீங்க ஹீரோவுக்கு அண்ணி கேரக்டரில் நடிக்கிறீங்களா? அக்கா கேரக்டரில் நடிக்கிறீங்களா? என்று கேட்கிறார்கள். எனக்கு அது வருத்தமாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு மலையாள சினிமா தான் அவ்வளவு அழகான வாய்ப்புகளை கொடுத்தது. என்னை அப்படியே ஏற்றுக் கொண்டாங்க. என்னை எந்த விதத்திலும் குறை சொல்லல்ல. நீங்க அம்மாவாக இருக்கீங்க, கல்யாணம் ஆயிடுச்சு என்று ஒதுக்கி வைக்கல. என்னை குறைச்சி மதிப்பிடல.

நடிகை கனிகா வருத்தம்
என் திறமைக்கு தகுந்த மாதிரி நல்ல நல்ல படங்கள் தந்தாங்க அதுக்காக நான் எப்போதும் மலையாள சினிமாவுக்கு நன்றி சொல்லுவேன். தமிழ் சினிமா மேல கோபம் இருக்குது ஆனாலும் இப்போ கொஞ்சம் பிரண்ட்லியா மாறி இருக்கு. நான் பார்வைக்கு நன்றாகத்தான் இருக்கிறேன், டேலண்ட் படியும் என்னை நான் மேலும் மேலும் திறமை வளர்த்துக் கொள்கிறேன். ஆனாலும் நம்முடைய திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத போது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது என்று அந்த பேட்டியில் கனிகா பேசியிருக்கிறார்.

எதிர்நீச்சல் ஈஸ்வரி
கனிகா எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறார் என்ற போது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இவரா இந்த சீரியல் பக்கம் வந்து விட்டார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருப்பதால் இவருக்கு முக்கிய கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் இவர் நடிகர் மாரிமுத்துவுக்கு ஜோடியாக தான் முதலில் நடித்தார் அப்போது பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் அவருடைய மறைவுக்கு பிறகு நடிகர் வேலராம மூர்த்திக்கு மனைவியாக இவர் நடித்துக் கொண்டிருப்பது பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் சீரியலின் கதைப்படி இவருடைய கேரக்டர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications