Kanmani Serial: அப்பாடா.. ஒரு வழியா கண்மணி நல்லா ரூட்டை புடிச்சுட்டாங்க!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலுக்கு கடந்த வாரம் ஞாயிறு அன்று இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை சிறப்பாக நேரத்தை சன் டிவி ஒதுக்கித் தந்தது. அந்த ஒரு மணி நேரத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட கண்மணி சீரியலின் ரூட்டே மாறிப் போச்சுங்க.
தர்மதுரை கொலை செய்யப்பட்டதை தூசித் தட்டி எடுத்து, கதையை காட்சிகளாக்கி சுவாரஸ்யமாக கொண்டு செல்ல இதுதான் சமயம் என்று கண்மணி கதைக்குழு சரியான ரூட்டை பிடிச்சுட்டாங்க.
தர்மதுரை மாமாவை தலையணை அமுக்கி கொன்றது கிருஷ்ணவேணிதான் என்று கதையில் புதுத் திருப்பத்தைக் கொண்டு வந்து, அன்றிலிருந்து ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக இருக்கிறது.

கிராமத்து பாணி
கிராமத்தில் பெரிய வீட்டில் நடக்கும் ஒரு கதை என்பதில் கொஞ்சம் விரசம் இல்லாமல், இங்கிதம் சற்றும் விலகாமல் காட்சிகளை ரொம்ப யதார்த்தமா அதே சமயம் நேர்த்தியா ஷூட் செய்து எடுத்து இருக்காங்க. ஆகாஷின் சித்தி அப்படி எல்லாம் சுலபமா ஒருத்தர் மேல பழி போட்டுட கூடாது வளர். இந்த கிராமத்தில் இருக்கறதே நாலு தெரு. எப்படி போனாலும் அவங்க முகத்தை திரும்பத் திரும்ப பார்க்கணும்னு சொல்றது ரொம்ப யதார்த்தம்.

காட்சிகளில் வித்தியாசம்
வளர்மதி வீட்டில் எல்லாரும் கூடி இருக்க, ஆளாளுக்கு வசனம் பேச இதை விறுவிறுப்பான காட்சியாக்கி வசனங்களுக்கு அழுத்தம் கொடுத்து இருப்பதற்கு வசனகர்த்தா மற்றும் காமிரா மேனை பாராட்டலாம். பார்க்க வித்தியாசமாக சினிமா பாணியில் வசனம், காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். கேமிரா கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

நடிகர் சஞ்சீவ்
சன் டிவியின் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் சஞ்சீவ் பெயர் வாங்கி இருக்கார். இவரை நம்பி தரமான கதைகளைத் தரலாம்.. கட்டாயம் ஹிட்.. என்கிற அளவுக்கு சன் டிவி இவரை சின்னத்திரை சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் வைத்து சீரியல் தயாரிப்பாளர்களுக்கு சஞ்சீவை பரிந்துரை செய்கிறது. அதில் சற்றும் தான் சளைத்தவர் அல்ல என்பது போலவே கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் நிரூபித்து வருகிறார்.

சஞ்சீவ் லிசா
நடிகை லிசா சஞ்ஜீவ்க்கு நல்ல ஜோடியாக இணைந்து அவருக்கு ஈடு கொடுத்து நடித்து வருகிறார். பூர்ணிமா பாக்யராஜ் கடந்த ஒரு மாதமாகவே நிறைய வசனங்கள் பேசி, சீரியலுக்கு அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்கிற அளவில் நடிப்பில் நிற்கிறார். கண்ணனின் அக்கா, தர்மதுரையின் மனைவி என்கிற கேரக்டரில் பூர்ணிமா பாக்யராஜ் விஜயலட்சுமியாக ஒளிர்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications