மனைவியை நினைத்து பீல் பண்ணும் சினேகன்.. உருக்கமாக பதிவிட்டு தன்னுடைய ஆசையை வெளிக்காட்டிய கன்னிகா
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சினேகன் தன் மனைவியை நினைத்து உருக்கமாக கேமரா முன்னாடி பேசியுள்ளார்.
கணவனின் பேச்சைக் கேட்டதும் கன்னிகா அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டுள்ளார்.

காதல் திருமணம்
திரைத்துறையின் பிரபல தம்பதிகளான கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் வலம் வருகின்றனர். திரைத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும், பல நெகட்டிவ் கருத்துக்களை இவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அதிகரித்துக் கொண்டு இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்களுடைய காதல் தான் என்றும் மாறாதது என்று உறுதியாக இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அசத்தலான திறமைகள்
கன்னிகா ஒரு சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவில் அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக அமையவில்லை. அதனால் சின்னத்திரையில் தன்னுடைய கவனத்தை செலுத்தி அதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது இவர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சிலம்பம், ஓவியம் உள்ளிட்ட தன்னுடைய திறமைகளை வெளிக்காட்டிய ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார். இவருடைய ஹோம்லி முகத்தை பார்த்து ரசிகர்கள் பலர் பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

மீண்டும் அல்டிமேட் நிகழ்ச்சியில் அறிமுகம்
இவருடைய நீண்ட முடி தான் இவருக்கு பிளஸ் ஆக இருந்தாலும், அதனால் பல பட வாய்ப்புகள் அவருக்கு தள்ளி போயிருக்கிறதாம். ஆனால் இந்த நீண்ட முடிக்காக பட்டங்களையும் பெற்றுள்ளார். சினேகன் மற்றும் கன்னிகா இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் முடிந்து இளம் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சினேகன் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். அவரை சந்தோசமாக வழியனுப்பி வைத்த கன்னிகா தற்போது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கன்னிகாவின் ஆசை
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா தன்னுடைய கணவர் எழுதிய பாடல்களை தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். இதுவரைக்கும் பல பாடல்களை இவர் தான் எழுதியது என்று பலருக்கும் தெரியாமல் இருந்தாலும் தற்போது கன்னிகாவின் செயலால் சினேகன் எழுதிய பாடல்கள் என்று பலர் திகைத்துப் போய் இருக்கின்றனர். அந்த வகையில் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எந்தப் பக்கம் திரும்பினாலும் உன்னுடைய முகமாகத் தான் இருக்கிறது. மிஸ் யூ பாப்பா என்று கன்னிகாவை நினைத்து உருக்கமாக கேமரா முன்பு பேசியிருந்தார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து மிஸ் யூ கண்ணம்மா, ஜெயிக்கிறோம் தோக்குறோம் தாண்டி பைனல் டே வரைக்கும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் நீங்க.. அதுதான் எனக்கு வேணும் என்று கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களையும், ஆறுதல்களையும் கூறி வருகின்றனர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications