Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திகா தீபம் நடிகருக்கும் என் அம்மாவுக்கும் தப்பான உறவு இல்ல.. நடிகை பவித்ரா மகன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மே 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவரோடு சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் சந்திரகாந்த் சில தினங்களிலே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிகமாக அதிர்ச்சி அடைய வைத்தது. அதோடு இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக செய்திகளும் அதிகமாக பரவி வந்தது என்ற நிலையில் இது குறித்து பவித்ராவின் மகன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

சாலை விபத்தில் மரணம் அடைந்த பவித்ரா ஜெயராமின் வயது 53. அவர் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலின் தெலுங்கு டப்பிங் சீரியலான "திருநயனி" என்ற சீரியலில் "திலோத்தமா" என்ற கேரக்டரில் நடித்து வந்தார். தமிழில் தாரா கேரக்டரில் வில்லியாக நடிப்பது போன்றது திலோத்தமா கேரக்டரில் இவர்தான் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார்.

Karthiga Deepam Serial Actress Pavitra Jayaram s Son On His Mother s Relationship With Chandrakanth

அதுபோல இந்த சீரியலில் தமிழில் மாரி சீரியலில் நடிக்கும் ஆஷிகா படுகோன் தான் தெலுங்கிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். இவர்களோடு அந்த சீரியலில் நடிகர் சந்திரகாந்த் (வயது 39) முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சந்திரகாந்த் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் தெலுஙகில் பிரபலமான கார்த்திகா தீபம் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில்தான் நடிகை பவித்ரா, சந்திரகாந்த் மற்றும் பவித்ராவின் சகோதரி என மூன்று பேரும் அவர்களுடைய காரில் டிரைவரோடு பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதில் பவித்ரா ஜெயராம் மட்டும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து இருக்கிறார். இந்த நிலையில் பவித்ராவின் மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்தில் இருந்த சந்திரகாந்த் விபத்து நடந்த போது என்ன நடந்தது என்பதை ஒரு வீடியோவாக பேசியிருந்தார்.

Karthiga Deepam Serial Actress Pavitra Jayaram s Son On His Mother s Relationship With Chandrakanth

அதைத்தொடர்ந்து அந்த வீடியோ வெளியான ஒரு சில நாட்களிலேயே சந்திரகாந்த் தற்கொலை செய்து இருக்கிறார். தற்கொலை செய்வதற்கு முன்பு பவித்ரா கார் விபத்தில் இறக்கவில்லை என்று ஒரு வீடியோவில் கண்கலங்கி கதறி அழுதபடியே பேசி இருந்தார். அதில் சந்திரகாந்த் பேசுகையில் காரில் நாங்க நான்கு பேர் இருந்தோம். பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். மதியம் 2:30 மணி அளவில் பெங்களூரில் இருந்து புறப்பட்டோம் மாலை 6:30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நாங்கள் மூணு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டோம்.

அதற்கு பிறகு 80 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டபோது காரின் மீது பஸ் உரசியது. இதனால் பயந்து போன டிரைவர் காரை திருப்ப சாலையின் பக்கவாட்டில் சென்றது அப்போது முன்னாள் வந்த பஸ் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. விபத்தில் ஏற்பட்ட காயத்தினால் பவித்ரா இறக்கவில்லை.

கார் ஓட்டுநர் மற்றும் பவித்ராவின் சகோதரி முன் பக்கத்தில் இருந்தனர். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. என்னுடைய கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. அதனால் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பவித்ராவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதிர்ச்சியில் அவர் பெருமூச்சு விட்டார். அது திடீரென ஏற்பட்ட ஸ்டோக் பாதிப்பு என்று டாக்டர் கூறுகின்றனர். சாலை விபத்தில் எந்த காயமும் ஏற்படாமல் மாரடைப்பு ஏற்பட்டு பவித்ரா உயிரிழந்தது உண்மையில் எனக்கு ரொம்பவே வலி ஏற்படுகிறது என்று அவருடைய உயிரிழப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று அந்த வீடியோவில் சந்திரகாந்த் கதறி அழுது கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பவித்ராவின் மரணத்தை தொடர்ந்து சந்திரகாந்த் தற்கொலை செய்து கொண்டதால், இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வந்தனர் என்றும் திருமணம் செய்யலாம் என்று இருந்தபோது பவித்ரா இறந்து போனதால் அந்த வருத்தத்தில் சந்திரகாந்த் தற்கொலை செய்து இருக்கிறார் என்று செய்திகள் பரவி வந்தது. அது குறித்து பவித்ராவின் மகன் பிரஜ்வல் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில், என் அம்மாவும் சந்திரகாந்த்தும் நல்ல நண்பர்கள் என்பது எங்களுக்கும், தொழில் துறையினருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. என்னுடைய அம்மாவும் சந்திரகாந்த்தும் நண்பர்களாக மட்டும் தான் இருந்தார்கள் என்று அதில் பிரஜ்வல் கூறி இருக்கிறார்.

ஆனால் சந்திரகாந்த்க்கு ஏற்கனவே ஷில்பா என்ற பெண்ணோடு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்களாம். இந்த நிலையில் தான் கடந்த ஆறு ஆண்டுகளாக சந்திராகாந்த்திற்க்கு பவித்ராவோடு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தன்னுடைய குழந்தைகளையும் தன்னையும் சந்திரகாந்த் கவனிக்கவில்லை என்று அவருடைய மனைவி ஷில்பா பேட்டிகளில் சந்திரகாந்த் குறித்து கம்ப்ளைன்ட் கூறியிருக்கிறார்.

அதுபோல சந்திரகாந்த் மற்றும் நடிகை பவித்ரா ஜெயராம் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிகமான வீடியோக்களை ஜோடியாக எடுத்து பதிவிட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோக்களில் அதிகமான ரசிகர்கள் சந்திரகாந்த் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு துரோகம் செய்ததால் தான் இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது என்றும் கருத்துக்கள் வெளியிட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

அதுபோல சந்திரகாந்த் மற்றும் நடிகை பவித்ரா ஜெயராம் இருவருக்கும் கிட்டத்தட்ட 14 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் ஜோடியாக அதிகமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதிலும் கடந்த மே 14ஆம் தேதி சந்திரகாந்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் குட்மார்னிங் பாப்பா என்று அந்த வீடியோவில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

Karthiga Deepam Serial Actress Pavitra Jayaram s Son On His Mother s Relationship With Chandrakanth

அதில் சந்திரகாந்த் மற்றும் பவித்ரா இருவருடைய கையிலும் இருவருடைய பெயர் டாட்டூ போட்டு அதில் 22. 10. 2021 என்று தேதியும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதுபோல சந்திரகாந்த் தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக வெளியிட்ட பதிவில் "இன்னும் இரண்டு நாள் பொறுத்திருங்கள் பாப்பா" என்று கேப்ஷன் கொடுத்து சந்திரகாந்த் மற்றும் பவித்ரா இருவரும் சேர்ந்து எடுத்த பல புகைப்படங்களை வீடியோவாக எடிட் செய்து போஸ்ட் போட்டு இருக்கிறார், என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+