நடிகை பவித்ரா விபத்தில் இறக்கவில்லை! தற்கொலைக்கு முன்பு கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் பேசிய வீடியோ
சென்னை: தெலுங்கு சீரியல் நடிகையான பவித்ரா ஜெயராம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் "திரிநயனி" என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலின் டப்பிங் சீரியல்தான் இந்த சீரியலில் கதாநாயகியாக மாரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஆஷிகா படுகோன் தான் தெலுங்கிலும் திரிநயனி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் நடிகை பவித்ரா ஜெயராம் திலோத்தமா என்ற கேரக்டரில் நடித்து வந்தார். அவரோடு அதே சீரியலில் நடிகர் சந்திரகாந்த் நடித்து வந்தார். அவர் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்கொலை செய்து இருக்கிறார்.
பவித்ராவின் நெருங்கிய நண்பரான சந்திரகாந்த் தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு பவித்ரா சாலை விபத்தில் இறந்து விட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அவரோடு அதே காரில் பயணித்த சந்திரகாந்த் தற்கொலை செய்வதற்கு முன்பு பவித்ரா கார் விபத்தில் இறக்கவில்லை என்று ஒரு வீடியோவில் கண்கலங்கி கதறி அழுதபடியே பேசி இருக்கிறார்.

அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் சந்திரகாந்த் பேசுகையில் காரில் நாங்க நான்கு பேர் இருந்தோம். பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். மதியம் 2:30 மணி அளவில் பெங்களூரில் இருந்து புறப்பட்டோம் மாலை 6:30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நாங்கள் மூணு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டோம்.
அதற்கு பிறகு 80 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டபோது காரின் மீது பஸ் உரசியது. இதனால் பயந்து போன டிரைவர் காரை திருப்ப சாலையின் பக்கவாட்டில் சென்றது. அப்போது முன்னால் வந்த பஸ் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. விபத்தில் ஏற்பட்ட காயத்தினால் பவித்ரா இறக்கவில்லை.
கார் ஓட்டுநர் மற்றும் பவித்ராவின் சகோதரி முன் பக்கத்தில் இருந்தனர். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. என்னுடைய கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. அதனால் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பவித்ராவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதிர்ச்சியில் அவர் பெருமூச்சு விட்டார். அது திடீரென ஏற்பட்ட ஸ்டோக் பாதிப்பு என்று டாக்டர் கூறுகின்றனர். சாலை விபத்தில் எந்த காயமும் ஏற்படாமல் மாரடைப்பு ஏற்பட்டு பவித்ரா உயிரிழந்தது உண்மையில் எனக்கு ரொம்பவே வலி ஏற்படுகிறது என்று அவருடைய உயிரிழப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று அந்த வீடியோவில் சந்திரகாந்த் கதறி அழுது கொண்டிருந்தார்.

அதோடு சந்திரகாந்த் மற்றும் பவித்ரா அவருடைய சகோதரியோடு தர்ஷன் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக பெங்களூருக்கு சென்றார்களாம். அந்த படத்தின் ஒப்புதல் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ஜெமினி டிவியில் இருந்து நடிப்பதற்காக மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்கு நாங்கள் போய்க் கொண்டிருந்தோம் என்று அதில் சந்திரகாந்த் கூறி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் பவித்ரா மரணம் அடைந்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவருடைய மரணத்தை தொடர்ந்து சந்திரகாந்த் தற்கொலை செய்து இருப்பது அவருடைய ரசிகர்கள் மற்றும் அவரோடு சீரியலில் நடித்த நடிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் தங்களுடைய வருத்தங்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் சந்திரகாந்த்க்கு ஷில்பா என்ற பெண்ணோடு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்களாம். இந்த சூழ்நிலையில் தான் கடந்த ஆறு ஆண்டுகளாக சந்திரகாந்திற்கு பவித்ராவோடு பழக்கம் ஏற்பட்டது என்றும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications