சூர்யாவுக்கு இது வரலாற்று சாதனை.. 28வது நாளிலும் கருப்பு படத்தின் வசூல் அபாரம்! அதுவும் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் பயணத்தை ஒரே படம் தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு தற்போது மிகப்பெரிய உதாரணமாக மாறியுள்ளது நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம். கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தவித்த சூர்யாவுக்கு, ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய 'கருப்பு' திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் வெளியாகிய இந்த படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் குடும்ப பார்வையாளர்களிடமும் அபார வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கருப்பசாமி வழிபாட்டை மையமாக வைத்து ஃபேண்டசி, ஆக்ஷன், சென்டிமென்ட், த்ரில் என அனைத்து அம்சங்களையும் கலந்த திரைக்கதையை உருவாக்கியிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. சூர்யாவுடன் த்ரிஷா இணைந்து நடித்திருந்தது ரசிகர்களுக்கு கூடுதல் ஈர்ப்பாக அமைந்தது.

28-வது நாளிலும் குறையாத வசூல்
படம் வெளியாகி நான்கு வாரங்களை கடந்த நிலையிலும் 'கருப்பு' இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 28-வது நாளில் மட்டும் இந்தியாவில் சுமார் 37 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழ்நாடு மட்டுமே சுமார் 30 லட்சம் ரூபாய் வசூலை வழங்கியுள்ளது.
கருப்பு பட வசூல் நிலவரம்
மாலை மற்றும் இரவு காட்சிகளில் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 28-வது நாளிலும் சுமார் 877 ஷோக்களில் படம் திரையிடப்பட்டிருப்பது படத்தின் வரவேற்பை வெளிப்படுத்துகிறது.

340 கோடி கிளப்பில் இணைந்த கருப்பு
முதல் வாரத்தில் 113.85 கோடி ரூபாய் வசூலுடன் அதிரடி தொடக்கத்தை பெற்ற 'கருப்பு', இரண்டாவது வாரத்தில் 54.30 கோடியும், மூன்றாவது வாரத்தில் 21.20 கோடியும் வசூல் செய்தது. தற்போது உலகம் முழுவதும் படம் 340 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் 'கருப்பு' முதலிடத்தை பிடித்துள்ளது.
சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய படம்
'கருப்பு' வெறும் வசூல் சாதனை மட்டுமல்ல. நீண்ட காலமாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு இது புதிய உயிர் கொடுத்த படம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்த சூர்யா, சமீப ஆண்டுகளில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் இருந்த நிலையில், 'கருப்பு' அவரது மார்க்கெட்டை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஓடிடியிலும் தொடங்கிய வசூல் வேட்டை
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய 'கருப்பு' தற்போது Amazon Prime Video தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள் தற்போது வீட்டிலிருந்தே படத்தை ரசித்து வருகின்றனர். திரையரங்குகளில் 340 கோடி வசூல் சாதனை படைத்த 'கருப்பு', ஓடிடியிலும் புதிய சாதனைகளை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
சூர்யாவின் கம்பேக் மட்டும் அல்ல... தமிழ் சினிமாவின் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் 'கருப்பு' தனது பெயரை பதித்து விட்டது என்பதில் சந்தேகமே இல்லை.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!













Click it and Unblock the Notifications