கயல் சைத்ராவின் பதிவை பார்த்தீங்களா? ஏன் இந்த விரக்தி.. இதுதான் காரணமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.
தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து சோகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சன் டிவியில் சீரியலிலும் சமூக வலைதளத்திலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நடிகை சைத்ரா ரெட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு தான் தற்போது ரசிகர்கள் அதிகமாக யோசிக்க வைத்திருக்கிறது. என்னடா இந்த பொண்ணு இவ்வளவு நாளா ஜாலியா சந்தோசமாக பதிவுகளை வெளியிட்டு இருக்கும். இப்போ என்னன்னா தொடர்ந்து சோக கீதங்கள் பாடுகிறதே? என்னவாக இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
அச்சச்சோ பாண்டியன் ஸ்டோர் மீனாவுக்கு என்ன ஆச்சு..!காலில் இவ்வளவு பெரிய காயம்?உருக்கமான வேண்டுகோள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி அந்த சீரியலில் சில நாட்கள் நடித்திருந்தாலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சைத்ரா அடுத்த சீரியலில் வில்லியாக மாறிவிட்டார். ஆரம்பம் கதாநாயகி அதைத்தொடர்ந்து வில்லி என்றால் இவரை அதிகமானார் வெறுத்து விடுவார்கள் என்று நினைத்தால் அப்படித்தான் இல்லை என்று இவருடைய கதையில் ரசிகர்கள் கூறி விட்டார்கள்.
வில்லியாக இருந்தாலும் அதிகபேர் ரசிக்கும் க்யூட்டான வில்லியாக சைத்ரா பலருடைய மனதை கவர்ந்திருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதா கேரக்டரில் வெண்ணிலாவை மட்டுமல்ல ரசிகர்களையுமே மிரட்டி கொண்டிருந்தார். அதை தொடர்ந்து திடீரென்று அந்த சீரியல் முடிவடைந்ததும் சன் டிவி சீரியலுக்கு மாறியிருக்கிறார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் குடும்பத்தை தாங்கி பிடிக்கும் தூணாக இவர் நடிக்கும் நடிப்பை பார்த்து பல பேர் இப்படி ஒரு பொண்ணு நம்ம வீட்ல இல்லையே என்று ஏங்கிப் போய் இருக்கின்றனர். அந்த வகையில் திடீரென்று சைத்ரா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக சோக பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
கொரோனா காலகட்டத்தில் தன்னுடைய சின்னத்திரை தோழிகளோடு சைத்ரா எடுத்த போட்டோ சூட் மற்றும் இவருடைய திருமண புகைப்படங்களும் வீடியோக்களில் இப்ப வரைக்கும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக காண முடிகிறது. இந்த நிலையில் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் சைத்ராவின் வாழ்க்கையில் என்ன நடந்தது எதனால் இப்படி ஒரு பதிவு என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் இவர் பின் சீட்டில் சோகமாக அமர்ந்தபடியே சோகமான பிஜிஎம் ஓட ரீல்ஸ் வெளியீட்டு இருந்தார். தொடர்ந்து பெண்ணியம் பேசும் ஒரு க்யூட்டான வீடியோவிற்கும் தன்னுடைய புகைப்படங்களை வைத்து ரீல்ஸ் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ஒரு கேப்ஷனையும் கொடுத்திருக்கிறார்.

அதில், இந்த ரீல்சை முதல் முதலில் பார்த்தபோது அது மிகவும் அழகாக இணைக்கப்பட்டது. என் பெற்றோர்கள் இவற்றில் எதற்கும் என்னை ஒருபோதும் தடை செய்யாத கடவுள்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளாளாக இருக்கிறேன். அதற்கு பதிலாக எனக்கு பறக்க சிறகுகள் கொடுத்தது, என்னை மிகவும் வலுவாக வளர்ந்ததற்காக நான் அவர்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறேன்.
ஆனால் எனது சொந்த வட்டத்தில் இருந்து நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் மோசமான காலங்களில் பெண்கள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன் மேலும் பெண்கள் எல்லாம் முரண்பாடுகளுக்கும் எதிரான வலுவாக நிற்பதை நான் பார்த்திருக்கிறேன். எதிர்மறை இந்த சமூகம் தனக்கான கிரீடத்தை உருவாக்கிக் கொண்டு அனைத்து பெண்களையும் நான் வணங்குகிறேன்.
ஒன்றை நினைவில் வையுங்கள். சமுதாயம் நிச்சயமாக நீங்கள் எப்படி இருந்தாலும் பேசும். நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் பேசும். விரும்புவர்கள் எந்த வழியில் பேசுவார்கள், நாங்கள் செய்ய வேண்டியது உங்கள் முகத்தில் ஒரு புன்னகை மட்டுமே நீங்கள் உருவாக்கிய பாதையில் அழகாக நடந்து செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார். இதை அவருடைய தோழியான நக்ஷத்திரா, ஸ்லிப்பர் ஷார்ட் என்று கூறியிருக்கிறார். அதுபோல பலரும் இதை பாராட்டி வந்தாலும் என்ன திடீரென்று சில நாட்களாக இப்படி ஒரு வீடியோ வெளியிடுகிறாரே என்று பலரும் கமெண்ட்களில் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications