எதிர்நீச்சல் சீரியலில் அறிமுகமாகும் "கோலங்கள்” நடிகர்.. இனி மாறப்போகும் கதை..குணசேகரனுக்கே போட்டியா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கோலங்கள் சீரியலில் நடித்த ஒரு நடிகர் அறிமுகமாகி இருக்கிறார்.
ஏற்கனவே கோலங்கள் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தான் எதிர்நீச்சல் சீரியலையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் குணசேகரன் ஜீவானந்தத்தை பழிவாங்குவதற்காக சந்திக்கும் நபராக கோலங்கள் தில்லைநாயகம் எதிர்நீச்சல் சீரியலில் அறிமுகமாக இருக்கிறார்.
எதிர்நீச்சல்: குணசேகரன் சொல்லும் பொய்.. கோபத்தில் ஜான்சி ராணி.. வெளிவந்த உண்மை.. திடீர் பரபரப்பு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்களும் டுவிஸ்ட்களும் வந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியல் வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்போது ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. இது அதிகமான ரசிகர்களும் வரவேற்று இருக்கின்றனர்.

அதே நேரத்தில் ஜீவானந்தம் குணசேகரனை சந்தித்த பிறகு கதை வேகம் குறைந்து இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பலரும் எதிர்பார்க்காத பல அதிரடி திருப்பங்கள் இனி வரும் வாரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் ஜீவானந்தத்தை பழிவாங்குவதற்காக குணசேகரன் சென்னையில் இருக்கும் ரிட்டையர்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை பார்ப்பதற்காக வருகிறார்.
அவர் ஏற்கனவே கோலங்கள் சீரியலில் தில்லை என்ற தில்லைநாயகமாக நடித்தவர் தான். அதே கேரக்டர் அதே பெயரில் இப்போது மீண்டும் இந்த சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இதனால் இனி கதை எப்படி போகும் என்று யூகிக்க முடியாமல் இருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரன் யார் அந்த தில்லைநாயகம் என்று கதிர் கேட்டார்.
அந்த கேள்விக்கு அவர் முதலில் கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பல ரவுடிகளை என்கவுண்டர் செய்திருந்தார். அதற்கு பிறகு மதுரைக்கு வந்தார். மதுரையிலும் அவருடைய ஆட்டம் அடங்கவில்லை. பல ரவுடிகளை என்கவுண்டர் செய்தவர் இப்போது ரிட்டையர்டு ஆகி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜீவானந்தத்தை எதிர்ப்பதற்கு தில்லை உதவியாக இருப்பாரா? என்று சந்தேகம் வருகிறது. அதற்கு காரணம் நேற்று கூட இரவு நேரத்தில் சென்னைக்கு வந்த குணசேகரன் தில்லைக்கு போன் போட்டு தான் இருக்கும் இடத்திற்கு வர முடியுமா? என்று கேட்டிருந்தார். ஆனால் அதற்கு முடியாது என்று கூறியிருந்தார். அதுபோல தற்போது வெளியான ப்ரோமோவிலும் கடற்கரையில் குணசேகரனை சந்திக்கையில் உன்னுடைய கை என்ன இப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் உண்மையை சொல்லாமல் பொய்யை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் கோலங்கள் சீரியலில் தில்லைநாயகம் முதலில் வில்லனாக இருந்து பிறகு மனம் மாறி இருப்பார். இந்த நிலையில் இந்த சீரியலில் என்ன மாதிரி கேரக்டரில் அறிமுகமாக போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. தில்லையின் அறிமுகம் இருக்கும் நிலையில் கதை வேகம் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications