ஹலோ... ஊரெல்லாம் காலி பண்ணிட்டு போங்க... பேரை மட்டும் சொல்லுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்பா... என்ன பேச்சு பேசுதுங்க என்று வியப்பைத் தூண்டி நிகழ்ச்சியை ஆவலாக பார்க்க வைக்குது சன் டிவியின் குட்டி சுட்டீஸ். நிகழ்ச்சியை நடத்தும் கோவை சரளா ரொம்ப சாஃப்டா குழந்தைகளிடம் பேசி நிகழ்ச்சியை கலகலக்க வைக்கிறார்.

சில சமயங்களில் குழந்தைகள் சொல்லிக்கொடுப்பதை பேசி இருந்தாலும், அதுவும் கூட ரசிக்கும்படி இருக்கிறது. வித்தியாசமான குழந்தைகள் அவர்களின் விதம் விதமான சுட்டித் தனம் என்று நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கிறது.

சன் டிவியில் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் குட்டி சுட்டீஸ் ரியாலிட்டி ஷோ மட்டும்தான் மனம்விட்டு சிரிக்கும்படி இருக்கிறது. தவிர குழந்தைகளுக்கு என்று நடத்த்தப்படும் ஒரே ஷோவும் குட்டி சுட்டீஸ்தான்.

குழந்தைகள் நிகழ்ச்சி

குழந்தைகள் நிகழ்ச்சி

குழந்தைகளை கொண்டாட, அவர்கள் குதூகலிக்க என்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் இல்லை என்றே சொல்லலாம். எப்போது இந்தத் தொலைக்காட்சியில் பார்த்தாலும் பாட்டு போட்டி, டான்ஸ் போட்டி, இல்லை அம்மாக்களுடன் குழந்தைகள் கேம் ஷோ என்று எல்லாமே போட்டி உலகமாக பார்க்கப்படும் நிலையில், குழந்தைகளின் யதார்த்தம்...அவர்களின் சுட்டித் தானம் இவைகளை ரசிக்க ஒரு ஷோ என்பது தொலைக்காட்சிகளில் இல்லை.

குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி

குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி

சன் டிவியில் ஞாயிறு தோறும் மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி குழந்தைகளுக்கு மகுடம் வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. சன் டிவியை இதற்காக பாராட்டலாம். மெனக்கெட்டு செய்யும் ஒரே நிகழ்ச்சியாக இப்போதைக்கு குட்டி சுட்டீஸ் மட்டும் இருக்கிறது. மற்றபடி சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் வழக்கமானதுதான். குட்டி சுட்டீஸ் மட்டுமே ஞாயிறு தினத்தின் சிறப்பு.

நடிகை கோவை சரளா

நடிகை கோவை சரளா

நடிகை கோவை சரளா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு சரியான சாய்ஸ் எனும்படி நிகழ்ச்சியை கொண்டு போகிறார். அந்த நேரத்தில் அப்போது உதிரும் காமெடிகள், குழந்தைகளின் குறும்பு என்று திட்டமிடாமல் அரங்கேறும் மழலைகளின் குறும்பான நகைச்சுவை இனிது. குழந்தைகள் எதைச் செய்தாலும் ஒரு அழகுதான்.. அவர்களைக் கொண்டாடும் குட்டி சுட்டீஸ் அருமை.

பேரை மட்டும் சொல்லுங்க

பேரை மட்டும் சொல்லுங்க

ஒரு குழந்தை கோவை சரளாவிடம் உங்க பேர் என்ன என்று கேட்க, கோவை சரளா வழக்கமான தனது நெளிதலுடன் கோவை சரளா என்று சொல்ல, ஹலோ.. ஊரை எல்லாம் காலி பண்ணிட்டு போங்க.. பேரை மட்டும் சொல்லுங்க என்று கேட்பது இனிதான நகைச்சுவையாக இருந்தது. இந்த ஆங்கிளில் யாரும் யோசிக்காத காமெடி. குழந்தையின் மழலைச் சொல் கேட்டு ரசிக்கதோர் யாரும் உளரோ?

நிகழ்ச்சியில் காமெடி நடிகர்கள்

நிகழ்ச்சியில் காமெடி நடிகர்கள்

நிகழ்ச்சியில் கோவை சரளா காமெடி நடிகர்களுடன் போனில் குழந்தைகளை பேச வைப்பது என்கிற புது செக்மென்டும் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.முதலில் சூரியுடன் பேச வைத்தார்.. அடுத்து நடிகர் யோகிபாபு. நேற்று நடிகர் சதீஷ் குழந்தைகளுடன் போனில் பேசினார்...இதுவும் நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பாக நன்றாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+