விசு போயிட்டாருன்னு நினைச்சோம்.. குடும்பஸ்தன் படத்தில் 4 விசு இருக்காரு.. பாசிட்டிவ் தேவை: பிரபலம்
சென்னை: ஒரு படைப்பை வெளியிடும்போது, அந்த படைப்பு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்போது, பல கேள்விகள் எழலாம். பாசிட்டிவ்வான படங்களை எடுப்பதை காட்டிலும், நெகட்டிவ் விஷயத்தையே தற்போது பலரும் சினிமாவாக எடுக்க முயல்வதாக சேகுவேரா கூறியிருக்கிறார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "முன்பெல்லாம் ஆபாசமாக மலையாள படங்களின் தலைப்பு இருக்கும்.. அந்தவரிசையில்தான், இந்த பேட் கேர்ள் பட தலைப்பும் சேர்க்க வேண்டியிருக்கு.

பெண்கள் புனிதப்படுவதை தவறாக நினைக்கிறார்கள்.. ஒதுக்கி வைப்பது போல நினைக்கிறார்கள்.. 'உடலை காட்டாதீர்கள்' என்று முகமது அலி சொன்னதைதான் இங்கு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.. உடம்பு என்பது பொக்கிஷமானது.. அதை திறந்துவைக்ககூடாது என்றார்.. இப்படியெல்லாம் சொல்லிவிடுவதாலேயே, பெண்களின் முன்னேற்றத்தில் ஏதாவது தடையாக இருந்திருக்கிறதா?
பிராமண பெண்: "சிறை" என்ற ஒரு படம் வந்தது.. ஒடுக்கப்பட்ட நபரால், பிராமண பெண் களங்கப்பட்டுவிடுவார். யாரால் களங்கப்படுத்தப்பட்டோமோ, அதே நபருடன் சேர்ந்து வாழ முடிவெடுப்பார் அந்த பெண்.. அந்த ஒடுக்கப்பட்ட நபர் இறந்தும்கூட அவருக்காகவே வாழ்வார்.. மனம் திரும்பி கணவர் வந்தபோதும் அவரை ஏற்காமல், இறந்தவனுக்கு மனைவியாக வாழ போவதாக சொல்லிவிடுவார். இந்த இடத்தில் ஒடுக்கப்பட்ட நபராக காட்ட வேண்டிய தேவை இருந்தது.
ஆனால், அரங்கேற்றம் என்ற படம் வந்தபோது, பிராமண பெண்ணாக அதில் காட்டியிருப்பார்கள். நார்மல் குடும்பமாகவே அதில் பாலச்சந்தர் காட்டியிருக்கலாம். என்னை பொறுத்தவரை, பிராமண பெண்கள் மட்டுமல்ல, எந்த சாதி பெண்களாக இருந்தாலும் அவர்கள் புனிதமானவர்களே..
பாலச்சந்தர்: "சம்சாரம் அது மின்சாரம்" படத்தில், அம்மையப்பன் என்று சொல்லியிருந்தால் பிரச்சனையில்லை.. ஆனால், அம்மையப்ப முதலியார் என்று சொல்வது ஏன்? குடும்ப பிரச்சனையை பேசுகிற படத்தில், எதுக்காக சாதியை அடையாளப்படுத்தணும்?
இப்போதுள்ள படங்களிலும் நெகட்டிவ் சிந்தனையே அதிகமாக தென்படுகிறது.. இதற்கு எம்ஜிஆர் படங்களை உதாரணமாக சொல்ல வேண்டியிருக்கிறது.. இரட்டை வேடங்களில் நடிக்கும் எம்ஜிஆர் படங்களை பார்த்தால் ஒன்று புரியும்.. ஒரு எம்ஜிஆர் சிகரெட்டை பற்றவைது வாயில் வைப்பார்.. உடனே இன்னொரு எம்ஜிஆர், அந்த சிகரெட்டை பிடுங்கி கீழே போட்டு, கண்டிப்பார்.. அதாவது ஒரு கெட்டதை காட்டும்போது, நல்லதையும் காட்ட வேண்டும்தானே? ஆனால், இவர்கள் அப்படி காட்டுவதில்லை.
குடும்பஸ்தன்: அதேபோல, குடும்பஸ்தன் என்ற படத்தில், படம் துவங்கும்போது பாட்டில் திறக்கப்படுகிறது, முடிக்கும்போது, பாட்டில் மூடப்படுகிறது. ஆனால், குடிப்பதை ஹீரோயிசம் போல காட்டாமல், காமெடியாக அதில் காட்டி விட்டார்கள்.. காதல் தோல்வியால் ஹீரோ தண்ணியடித்து நியாயப்படுத்துவது போல அதில் காட்டவில்லை.. விசு இன்று இல்லையேன்னு நாம் கவலைப்பட்டோம். ஆனால், குடும்பஸ்தன் படத்தில் 4 விசு இருக்கிறார். இதுபோன்ற படங்கள் வரவேண்டும்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications