CWC-யை விட்டு விலக காரணம் அந்த தொகுப்பாளர் தான்.. மணிமேகலை பதிவுக்கு குரேஷி, மோனிஷா ரியாக்ஷன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறேன் அதற்கு காரணம் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் என்னுடைய வேலையை சரியாக செய்ய விடவில்லை என்று பயங்கரமாக போஸ்ட் போட்டிருந்தார். அதற்கு அவரோடு அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த குரேஷி, ஃபரீனா, மோனிஷா உட்பட பலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
90ஸ் தொகுப்பாளர்கள் என்று சொன்னாலே டக்கென்று நினைவிற்கு வருபவர்களில் மணிமேகலையும் ஒருவர். ஆரம்பத்தில் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலைக்கு விஜய் டிவி பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதிலும் குக் வித் கோமாளியில் அவர் ஒரு கோமாளியாக கலந்து கொண்டது இவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து இருந்தது.

முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரைக்கும் கோமாளியாகவே மணிமேகலை கலந்து கொண்டார். ஆனால் நான்காவது சீசனில் திடீரென்று தான் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு கொடுத்து இருந்தார். அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து கோமாளியாக நிகழ்ச்சியை விட்டு போய் தொகுப்பாளராக நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகி இருந்தார்.
அதைத் தொடர்ந்து ஐந்தாவது சீசனிலும் அவரே தொகுப்பாளராகவும் இருந்தார். அவரோடு தர்ஷன் ஆண் தொகுப்பாளராக வழக்கம் போல நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு போய் இருந்தனர். ஆனால் நேற்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறேன் என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் நான் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உண்மையான அர்ப்பணிப்பு நேர்மை, கடும் உழைப்பு 100% முயற்சிகளை கொடுத்தேன். அது போல் தான் குக் வத்து கோமாளி நிகழ்ச்சியிலும் கடந்த நவம்பர் 19, 2019 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பயணம் அந்த நிகழ்ச்சியில் தொடங்கி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன்.
ஆனால் வாழ்க்கையில் சுயமரியாதையை விட எதுவும் முக்கியமில்லை. என் வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சுயமரியாதை இழக்க கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பணம், புகழ், தொழில், வாய்ப்பு என எது இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் சுயமரியாதை தான் முக்கியம். அதனால் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் மற்றொரு பெண் தொகுப்பாளியால் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சியில் குக்காக இருக்க வந்த ஒருவர் தான் ஒரு குக் என்பதை மறந்துவிட்டு ஆங்கரிங் பணிகளில் தலையிட்டு என் பணிகளை செய்யவிடாமல் தடுக்கிறார். எங்களுக்கான உரிமைகளை கேட்பதும், கவலைகளையும் தெரிவித்தால் கூட இந்த சீசனில் அது ஒரு குற்றமாக கருதப்படுகிறது.
ஆனாலும் எனக்கு எது சரி எனப்படுகிறது அதற்கு நான் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன். யாரைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். நான் இதுவரைக்கும் பார்த்து வியந்து மகிழ்ச்சியாக இருந்து குக் வித் கோமாளி ஷோ இதுவல்ல. எனவே நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை பார்த்திருக்கிறேன்.
ஆனால் இதுபோல முதிர்ச்சியற்ற நடத்தைகளை நான் பார்த்தது கிடையாது. என் வேலையை கெடுத்த நபர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். அவருக்கு நிறைய நிகழ்ச்சிகள் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறேன். அப்போதுதான் அவரால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். வாழு.. வாழ விடு! என்று அந்தப் பதிவில் மணிமேகலை குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த பதிவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் குரோஷி, “நல்ல முடிவு வாழ்த்துக்கள் மணிமேகலை” என்று சொல்லி இருக்கிறார். அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் ஃபரீனா ஆசாத் “உங்களுக்கு பெரிய தைரியம். எதையும் விட தைரியம் நிச்சயம் முக்கியம். நீ எப்போதும் வெற்றி பெறுவீர்கள்” என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நடிகர் தங்கதுரை “மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து இப்போது டாப் குக்கு டூப் குக்கூ நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் மோனிஷா, “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். அனிதா சம்பத், “ஆல் த பெஸ்ட் மணி நீங்க எடுத்த முடிவு நல்லது” என்று கூறியிருக்கிறார். அதுபோல பல பிரபலங்களும் மணிமேகலையின் இந்த தைரியமான பதிவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அதோடு ரசிகர்கள் இது பிரியங்காவிற்காக மணிமேகலை போட்ட பதிவுதான் என்று பிரியங்காவை திட்டி வருகிறார்கள். ஏற்கனவே சீசன் 5 நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இதிலிருந்து வெங்கடேஷ் பட் விலகி இருந்தார். அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இதுவரைக்கும் தயாரித்த தயாரிப்பாளர்கள் இயக்குனர் என்று அடுத்தடுத்து எல்லோரும் விலகி இருந்தனர். இந்த சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட நாஞ்சில் விஜயனும் விலகி இருந்தார்.
அந்த வரிசையில் இப்போது மணிமேகலையும் விலகி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் அதிகமாக டாமினேஷன் நடப்பதாகவே எல்லோரும் கூறி வருகிறார்கள். அதோடு இந்த சீசனில் இறுதி போட்டிக்கு முதல் ஆளாக பிரியங்கா தான் தேர்வாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர் தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications