வீடும் இல்லை, குழந்தைக்கு பிஸ்கட் வாங்க கூட காசு இல்லை.. கதறி அழுத மறைந்த காமெடி நடிகரின் மனைவி
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் காமெடி நடிகராக நடித்த பவுன்ராஜ் சமீபத்தில் மரணம் அடைந்திருந்தார்.
அவருடைய மரணத்திற்கு பிறகு அவருடைய குடும்பம் வருமானத்திற்கு வழியில்லாமல் மிகவும் வேதனையில் வாழ்ந்து வருவதாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றனர்.
நடிகர் பவுன்ராஜின் மனைவி குழந்தைக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்குவதற்கு கூட தன்னிடம் காசு இல்லை என்று அந்த பேட்டியில் வருத்தத்தோடு பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குடும்பத்தில் ஒருவருடைய திடீர் இழப்பால் அவரைச் சார்ந்த பலரும் கஷ்டத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள் மனதளவில் மட்டுமல்லாமல் பணதளவிலும் பலரும் வேதனையின் உச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதற்கு சாட்சியாக தான் தற்போது தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பவுன்ராஜின் குடும்பமும் இருக்கிறது.
மறைந்த நடிகர் பவுன்ராஜ் பொன்ராமின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது ரஜினி முருகன் திரைப்படத்தில் உள்ள அந்த வாழைப்பழ காமெடி தான். அந்த படத்தில், "மதுரைக்காரனுக்கு கையே கத்தி விரலே வீச்சிடா என்ற வசனத்தையும் அவர் பேசியிருப்பார்.
இந்த நிலையில் தான் 2021 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென்று பவுன்ராஜ் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த திரை உலகையும் வருத்தத்தில் வாழ்த்தியது. அதோடு நடிகர் பவுன்ராஜ் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இப்போது அவருடைய மனைவி கணவரின் இறப்புக்குப் பிறகு குழந்தைகளுக்கு சாப்பாடு கூட வாங்க காசு இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தான் இருக்கும் வீட்டிற்கு வாடகையும் கொடுக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல யூடியூபர் ஒருவர் பல ஏழைகளுக்கும் கஷ்டப்படுபவர்களுக்கும் ஹெல்மெட் அணிந்து உதவி செய்து வருகிறார். தன்னுடைய முகத்தை வெளியே காட்டாத அந்த youtubeரிடம் பவுன்ராஜின் மனைவி தன்னுடைய குழந்தைகளோடு உதவி கேட்டு இருக்கிறார். இப்போது அவர் செய்த உதவியின் காரணமாக சின்னதாக கடை ஒன்றை வைத்து பிளப்பு நடத்தி வருவதாக அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். இதற்கு பலரும் அந்த பிரபல youtubeரை வாழ்த்தியும், இவருடைய கஷ்டங்கள் சீக்கிரமாக போக வேண்டும் என்றும் பலர் ஆசிர்வாதம் வழங்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications