Loka OTT: லோகா சாப்டர் 1! பெண் சூப்பர் ஹீரோ படமே 300 கோடி வசூல்! ஓடிடியில் வந்தாச்சு! எந்த தளத்தில் தெரியுமா?
சென்னை: மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியாகி, ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள திரைப்படம் 'லோகா சாப்டர் 1 சந்திரா'. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம், வசூலில் மலையாள சினிமாவின் வரலாற்றையே மாற்றி எழுதி, புதிய சாதனை படைத்துள்ளது.

வசூலில் ஒரு மைல்கல்
இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மானின் 'வேஃபாரர் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, டாமினிக் அருண் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம், வெளியான குறுகிய நாட்களிலே 100 கோடி வரை வசூலித்தது. இதன் மூலம், சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு இந்திய படம் முதல் முறையாக 100 கோடி கிளப்பில் இணைந்தது என்ற பெரும் சாதனையை 'லோகா' படைத்தது.

மலையாளத்தின் பிரம்மாண்டம்
அதுமட்டுமின்றி, இந்தப் படம் இப்போது மலையாளத் திரையுலகிலே அதிக வசூலித்த படமாக 300 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. 'லோகா சாப்டர் 1 சந்திரா' திரைப்படம், கல்யாணி பிரியதர்ஷன் ஏற்று நடித்திருக்கும் 'சந்திரா' என்ற பெண் சூப்பர் ஹீரோவைச் சுற்றிச் சுழல்கிறது. ஒரு பெண், சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தனக்குக் கிடைத்த அமானுஷ்ய சக்திகளைக் கொண்டு எப்படி எதிர்கொள்கிறாள், குறிப்பாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் சவால்களைச் சக்தியின் துணை கொண்டு அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்பதே படத்தின் மையக் கருத்தாக இருந்தது.
நடிகர்கள்
இப்படத்தில் நஸ்லன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். கல்யாணி பிரியதர்ஷனின் அழுத்தமான நடிப்பு, ஆக்ஷன் காட்சிகளில் அவர் காட்டிய நேர்த்தி ஆகியவை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சூப்பர் ஹீரோ படங்களுக்கே உரிய ஆக்ஷன், பிரம்மாண்டம் மற்றும் எமோஷன் ஆகியவை சரியான கலவையில் இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் கதையமைப்பு (Empowerment) பாராட்டப்பட்டது.

ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
தியேட்டர்களில் சாதனைக் குவித்த இந்தப் படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்களுக்காக, தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'லோகா சாப்டர் 1 சந்திரா' திரைப்படம் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 31ஆம் தேதி (நவம்பர் 31) இப்படம் வெளியாகவுள்ளது.
பெரும் ஹிட்டடித்த இப்படத்தை ஓடிடியிலும் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இதன் இரண்டாம் பாகம், நடிகர் டொவினோ தாமஸ் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications