பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் தண்டிப்பார்.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு சாபம் கொடுத்த ஜாய் கிரிசில்டா!
சென்னை: பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார் என்று பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரசில்டா சாபம் கொடுத்துள்ளார். இவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில், தற்போது தர்மம் ஜெயிக்கும் என்று தனது வேதனையை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ், அதன்பின் சமையல் தொழில் செய்து அடைந்த புகழ் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அரசியல் மாநாடு, சினிமா நட்சத்திரங்களின் திருமண நிகழ்ச்சிகள் என்று எங்கும் மாதம்பட்டி ரங்கராஜ் குழுவின் சமையல் பேசப்பட்டது. இதன் காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 6வது சீசனின் நடுவராகவும் செயல்பட்டார்.

இவருக்கு வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அதன் புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா வெளியிட்டிருந்தார். அப்போது ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பது தெரிய வந்தது.
முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்த போதே ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் பழகி வந்தது தெரிந்தது. இதன்பின் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் முதல் மனைவி ஸ்ருதி இருவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின. இதன்பின் ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்தித்த முயன்ற போது, 2 முறையும் என்னை அடித்து விரட்டியதாக கூறினார்.
அதேபோல் எனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை. என் குழந்தைக்கு நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆவேசமாக தெரிவித்தார். இதன்பின் ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களாக அமைதி காத்து வந்தார். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜின் ரொமான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அந்தப் பதிவில், "பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்." தர்மம் ஜெயிக்கும் என்று பதிவிட்டுள்ளார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா சாபம் கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications